|
நட்சத்திர பொதுப்பலன்கள் பற்றிய என்னுரை
உத்திரட்டாதி நட்சத்திரப் பலன்கள்
கேட்டதைக் கொடுக்கும் “காமதேனு” உதித்த இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனியாவார். இதில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு உதவிபுரிவதில் ஆர்வம் உள்ளவர். நல்ல கல்வி ஞானம் உடையவர்கள். கலைகளில் ஞானம் உடையவர்கள். நல்ல பரந்த புஜமும் அழகிய தோற்றமும் உடையவர்கள். ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்புரிய ஆர்வம் உள்ளவர். மனைவிக்கு அடங்கிக் கட்டுப்பட்டு நடப்பர். மற்றவர்களைப் பற்றிக் குறை கூறிக் கொண்டே இருப்பர். தன்னுடன் பணிபுரிபவர்களுக்கு மறைமுகமாகத் தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். சற்று சோம்பல் உள்ளவர்கள். குருபக்தி உள்ள இவர்கள் பிறர் சொல் கேட்டு நடப்பர்.
உத்திரட்டாதி : 1ம் பாதம்
நல்ல கம்பீரமான தோற்றம் உடையவர்கள் மனதைக் கட்டுப்படுத்தி வாழப் பழகியவர்கள். பிறர்படும் கஷ்டங்களைக் கண்டு சகிக்காத இவர்கள் தெய்வ காரியங்களில் ஈடுபட்டு புகழ் பெறுவர். தாயாரின் அன்புக்கு பாத்திரமான இவர்கள் பெண்கள் விஷயத்தில் சபலபுத்தியுள்ளவர்கள். உஷ்ண சம்பந்தமான நோய்கள் தோன்றி விலகும் அடிக்கடி வெளியே சுற்றும் ஆர்வம் உடையவர்கள்.
உத்திரட்டாதி : 2ம் பாதம்
எல்லா விஷயத்திலும் மகா கெட்டிக்காரர்களாக விளங்குவர். நல்ல நடத்தையும் நேர்மையும் உள்ள இவர்கள் மற்றவர்களின் கஷ்டங்களைக் கண்டு வருந்துவர். தன்னாலான உதவிகளைச் செய்வர் உற்றார் உறவினர்களை வெறுப்பர். மனைவியின் மேல் பற்றுள்ளவர்கள். குழந்தைகள் மேல் பற்றும் பாசமும் உள்ளவர்கள்.
உத்திரட்டாதி : 3ம் பாதம்
எப்பொழுதும் குதர்க்கமாகவும், நக்கலும் நையாண்டியுமாக கலந்து பேசுவர். யாரையும் புரிந்து கொள்ளாதவர்கள், அர்த்தமில்லாமல் பேசுவதில் வல்லவர்கள். தனது குடும்ப விவகாரத்தைக் கட்டிக் காக்கமாட்டார்கள். தெய்வபக்தியும், தரும குணமும் உடையவர்கள். உடன் பிறந்தவர்கள் மேல் பற்றும் பாசமும் உள்ளவர்கள். மனைவிக்கு அடங்கி நடப்பர்.
உத்திரட்டாதி : 4ம் பாதம்
தெய்வ சிந்தனையற்ற இவர்கள் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்து அதை அனாவசியமாக செலவு செய்வர். மனதை கட்டுபடுத்தாதவர்கள். தாய் மாமன்களால் நன்மை அடைவர். உற்றார் உறவினர்களை நன்கு ஆதரிப்பர். வார்த்தைகளால் மற்றவர்களை கேலியும் கிண்டலும் செய்து மற்றவர்களை மனம் வருத்தப்பட வைப்பர்.
|
|
|
|