|
நட்சத்திர பொதுப்பலன்கள் பற்றிய என்னுரை
அவிட்டம் நட்சத்திரப் பலன்கள்
அஷ்டவசுக்கள் வந்து உதித்த இந்த நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய் ஆவார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களை அடக்கி ஆளும் ஆற்றல் உடையவர்கள். நல்ல ஆஜானுபாகுவான தோற்றமும், மெலிந்த தேகம் உடையவர்கள் நல்ல அறிவும் ஆற்றலும் மிக்கவர்கள், சுறுசுறுப்பான இவர்கள் மற்றவர்களுடன் எப்பொழுதும் மோதல் போக்கையே கையாள்வர் பெண்களால் அதிகம் விரும்பபடுவர். கவர்ச்சியான தோற்றம் உள்ள இவர்கள் மற்றவர்களை தூக்கி எறிந்து பேசும் சுபாவம் உடையவர்கள். தனக்கு கீழ் உள்ளோரை மதிக்காதவர்கள் தெய்பக்தியும், குரு பக்தியும் நிறைந்தவர்கள்.
அவிட்டம் : 1ம் பாதம்
வில் வித்தையிலும், துப்பாக்கி சூட்டிலும் சிறந்து விளங்குவர், கம்பீரமான இவர்கள் எப்பொழுதும் ஏதாவது ஒன்றிற்காக கவலைப்பட்டுக் கொண்டே இருப்பர். தாயாரின் அன்புக்கு கட்டுப்பட்டவர். இறைவழிபாட்டில் ஆர்வம் உள்ளவர்கள். வேலைக்காரர்களை விரட்டி வேலை வாங்கி அவர்களின் சாபத்திற்கும், பாவத்திற்கும் ஆளாவார்.
அவிட்டம் : 2ம் பாதம்
நல்ல ஒழுக்கமும், அறிவும் ஆற்றலும் மிக்க இவர்கள் எப்பொழுதும் பசி பொறுக்காதவர்கள், சாப்பாட்டின் மேல் பிரியம் உள்ளவர்கள். எப்பொழுதும் சிரித்துப் பேசியே காரியத்தை முடிக்கும் இயல்புடையவர். தேவையில்லாமல் கோபப்பட்டு மற்றவர்களை பகைத்துக் கொள்வர். முன்னோர்களின் சொத்துக்கள் கிடைக்கப் பெற்று அவற்றை வாழ்க்கையில் நல்ல முறையில் அனுபவிப்பர்.
அவிட்டம் : 3ம் பாதம்
நல்ல நடத்தையும் நல்ல குணமும் உடையவர்கள் சற்று குள்ளமான உருவமும், சிவந்த நிறமும், அழகிய கேசமும் உள்ளவர்கள். கலைகளில் ஆர்வம் உடைய இவர்கள் பொய் பேச அஞ்சாதவர்கள். பிறர் பொருள்களை அடைய எவ்வழியையும் முயற்சி செய்வர். தெய்வ வழிபாட்டில் சிறந்து விளங்குவர்.
அவிட்டம் : 4ம் பாதம்
தெய்வ நம்பிக்கை குறைவான இவர்கள் மற்றவர்களின் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிட மாட்டார்கள். எப்பொழுதும் வெளியே சுற்றும் பழக்கம் உள்ளவர்கள். வியாபாரத்தில் நாட்டம் உடையவர்கள். பெண்களால் விரும்பப்படுவர். பிறரை சுடு சொற்களால் வசைபாடுவார். மற்றவர்களுக்கு உதவிபுரிவர்.
|
|
|
|