maduraiabiramisekar@gmail.com   +91 99948 11158 / +91 94436 74536
Abirami sekar, astrologer in chennai online, madurai astrologer abirami sekar, அபிராமி சேகர் ஜோதிடம்
12 ராசிகளின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
12 லக்னத்தின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
கும்பம் ராசி பலன்கள்

ராசிபலன்கள் பற்றிய என்னுரையை முதலில் படிக்கவும் - Click Here

ராசி மண்டலத்தில் 11வது ராசியாகும் இது. ஆங்கிலத்தில் அக்வேரியல் (AQUARIUS) என்று இந்த ராசியைக் குறிப்பிடுவர். இது ஒரு ஸ்திர ராசியாகும். மேலும் பஞ்சபூத தத்துவங்களில் இது “காற்று” ராசியாகும். இந்த ராசி உயிரற்ற ஜடப்பொருள்களைக் குறிக்கும் பஞ்சபூத தத்துவங்களில் இது குறிக்கும் ராசியாகும். அதனால் இந்த ராசியை “வறண்ட ராசி” என்று குறிப்பிடுவார்கள். மேலும் இது “ஆண் ராசியகும்“ மேலும் “ஒற்றை ராசி” என்று அழைக்கப்படும்.

இந்த ராசியின் சின்னமாக “கும்பம்” குறிக்கப்படுகிறது. கும்பத்தில் தண்ணீர் நிரப்பி அதை ஒரு பானை வடிவமான அமைப்பாக இந்த ராசி குறிக்கப்படுகிறது. அதனால் இது பாதி “பலனளிக்கும்” ராசி என்று அழைக்கப்படும். மேலும் இது ஒரு குறுகிய ராசியாகும். இந்த ராசியை நல்ல குரல்வளமிக்க மனிதத் தன்மையான நல்ல இயல்புடைய ராசி என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த ராசியில் அவிட்ட நட்சத்திரத்தின் 3,4 பாதங்களும் சதய நட்சத்திரத்தின் 1,2,3,4 பாதங்களும் பூரட்டாதி நட்சத்திரத்தின் 1,2,3,4 பாதங்களும் அடங்கியுள்ளன. ராசி மண்டலத்தின் 300 டிகிரி முதல் 330 டிகிரி வரை இந்த ராசி வியாபித்துள்ளது.

சனியின் வீடாக இந்த ராசி வருவதால் இந்த ராசியில் சனி ஆட்சியாகவும் புதன், சுக்கிரன், இருவரும் இந்த ராசியில் நட்பாகவும் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு இவர்கள் பகை பெற்றும் உள்ளனர். இந்த ராசியில் எந்த கிரகமும் உச்சம் பெறுவது இல்லை. அதே போல் எந்த கிரகமும் “நீசம்” பெறுவதும் இல்லை.

உடலமைப்பு (STRUCTURE)

இந்த ராசியில் பிறந்தவர்கள் நல்ல உயரம் உடையவர்கள் முகம் அழகாகவும் காதுகள் நீண்டும் நல்ல லட்சணமாக இருப்பார்கள் முடி சுருண்டு அழகாக இருக்கும். நல்ல வளர்ச்சி பெற்ற உடல் அமைப்பு பெற்றவர்கள். பல் வரிசை ஒழுங்கற்று சற்று சுமாராக இருக்கும். வலுவான திரேகம் உடைய இவர்கள் சதா சிரித்து கொண்டு இருப்பார்கள்.. குனிந்து பேசும் இயல்புடைய இவர்கள் சற்று தலையைச் சாய்த்து பேசும் அமைப்பு உடையவர்கள்.

குணநலங்கள் (CHARACTOR)

வான மண்டலத்தில் 11 வது ராசியாக இந்த ராசி வருவாதால் எப்பொழுதும் பரந்த மனப்பான்மையும் சிந்தனையும் உடையவர்கள். எப்பொழுதும் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷகரமாகவும் இருக்க விரும்புவர். எல்லோரிடமும் எளிதில் பழகும் சுபாவம் உடையவர்கள். இவர்களுக்கு வாழ்க்கையில் நிறைய நண்பர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு உதவ அநேகர் காத்திருப்பார்கள். எப்பொழுதும் வெளிப்படையாகப் பேசிப்பழகும் இயல்புடையவர்கள் இடத்திற்கு தக்கப்படி தங்கள் குண நலன்களை மாற்றி வாழ்க்கை நடத்துவர். எப்பொழுதும் ஏதாவது ஒன்றை முயற்சி செய்து கொண்டேயிருப்பார்கள். எப்பொழுதும் முயற்சி முயற்சி என்பதில் கண்ணுங்கருத்துமாயிருப்பார்கள். மற்றவர்கள் குற்றம் குறைகளையும் வெகு எளிதில் கண்டுக்கொள்வார்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் துருதுருவென்றும் இருப்பர். மற்றவர்களை கேலி செய்வதில் ஆர்வம் உடையவர்கள். அதே சமயம் சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாதலால் எந்த ஒரு காரியத்தையும் தாமதமாகத் தொடங்கி தாமதமாகவே முடிப்பர். எந்த காரியத்தையும் தொடங்க நிறைய யோசிப்பார்கள். உடனடியாக எந்த ஒரு முடிவையும் வாழ்க்கையில் எடுக்காமல் தள்ளிப்போட்டுக் கொண்டேயிருப்பார்கள்

புதிய சிந்தனையுடையவர்கள். எந்த ஒரு காரியத்தையும் புதிய சிந்தனையுடன் மாறிவரும் தொழில் நுட்பத்திற்க்கேற்ப செயல்படும் ஆற்றல் உடையவர்கள் எப்பொழுதும் தனக்கென ஒரு பாதையை வகுத்து அதன் வழி நடப்பதில் எப்பொழுதும் ஆர்வம் உடையவர்கள். தனக்கு சரி எனப்பட்டதைச் செய்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர்கள். அது சட்டத்திற்குட்பட்டதா இல்லையா என்பதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனக்கு எது சரி எனப்படுகிறதோ அதைச் செய்வதில் விருப்பமும் ஆர்வம் உடையவர்கள்.

எப்பொழுதும் சாதா சிந்தித்து கொண்டேயிருக்கும் இவர்கள் நல்ல ஞாபக சக்தியும் கற்பனை கலந்த விஷயமாகப் பேசுவதில் ஆர்வம் உடையவர்கள். நல்ல ஆடை ஆபரணங்களை அணிவதில் எப்பொழுதும் விருப்பம் உடையவர்கள். நல்ல வாசனைத் திரவியங்கள் பூசிக்கொள்வதிலும் எப்பொழுதும் தங்களை மற்றவர்களிடமிருந்து தனித்துக் காட்டிக்கொள்வதற்க்காக பளிச்சென உடையணிந்து காணப்படுவார்கள். ஆராய்ச்சி மணப்பான்மையுடையவர்களாதலால் எப்பொழுதும் எந்தவொரு விஷயத்தையும் ஏன் எப்படி என்று சிந்திப்பார்கள். அநேக நண்பர்களைப் பெற்ற இவர்கள் அவர்களுக்கு வாழ்க்கையில் உதவிகள் செய்வதை ஒரு பாக்கியமாக கருதுவார்கள்.

நல்ல தர்மசிந்தனையுடைய இவர்கள் எப்பொழுதும் உற்சாகமாகவே இருக்க விரும்புவார்கள். விருந்துகளில் அடிக்கடி கலந்து கொள்ளும் ஆர்வம் உடையவர்கள் அடிக்கடி வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல விருப்பம் உடையவர்கள். மற்றவர்களுக்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் என்பதில் எப்பொழுதும் முதன்மையாக விளங்குவர். சமூக விஷயத்தில் அதிக ஈடுபாடும் ஆர்வம் உடைய இவர்கள் சமூகத்தில் நிலவும் அவலங்களை சுட்டிக்கட்டிப் பேசியும் எழுதியும் வருவர். சங்கங்களில் சேர்ந்து பொதுச்சேவை செய்வதில் மற்றவர்களின் பிரச்சனைகளை தங்கள் பிரச்சனைகள் போல் எடுத்து அதை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதில் கெட்டிக்காரர்கள். அடிக்கடி தீர்த்த யாத்திரை மேற்க்கொள்ளும் இவர்கள் கடுமையான விரதங்களை அனுஷ்டிப்பவர்கள். தங்களை வெறுப்பவர்களை இவர்களும் வெறுத்து ஒதுக்குவர். அவர்களை அனுசரித்துப் போய் காரியமாற்றும் ஆர்வம் இல்லாமல் அவர்களை எதிரியாகவே பார்ப்பார்கள்.

திருமணம்(MARRIAGE)

நல்ல அறிவும் ஆற்றலும் உடைய இவர்கள் தங்களைப் போலவே அறிவும் ஆற்றலும் உடைய துணையை தேடுவதில் ஆர்வம் உடையவர்கள். இவர்கள் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் ஆதலால் காதல் விஷயங்களில் மனதை அதிகம் செலுத்துவர். காதலை சொல்வதிலும் அதைச் செயல்படுத்துவதில் மிகவும் ஆர்வம் உடையவர்கள் தாங்கள் எதிர்பார்த்த வாழ்க்கை துணை அமையும் வரை போராடுவார்கள். எதிர்பார்த்த துணை அமையாவிட்டாலும் அவர்களை கழற்றிவிடுவதில் வல்லவர்கள். மண வாழ்க்கை ஓரளவு மகிழ்ச்சிகரமாக அமையும், இவர்களது ராசிக்கு 7வது ராசியாக சூரியன் ராசி வருவதால் வரும் துணைவர் வட்ட வடிவ முகமும் நல்ல அழகும் உள்ளவராகவும் சகல காரியங்களையும் சாதிப்பவராகவும் வருவார்கள். 7ம் இடம் சூரியன் வருவதால் வரும் துணை சட்டத்திற்க்கு கட்டுப்பட்டவராகவும் உண்மையாகவும் நேர்மையாளராகவும் இருப்பார்கள். அவர்கள் தாங்கள் செய்யும் தொழிலை நன்கு கவனித்துக் கொள்வர்.

நோய் (DESEASES) கடன் (LOAN)

கும்ப ராசிக்கு 6வது ராசியாக சந்திரன் ராசி வருவதால் உடலில் நீர் சம்பந்தமான நோய்கள் குறிப்பாக மார்பில் சளித்தொல்லையால் அவதியுறுவர். அலர்ஜி, ஆஸ்த்துமா, டி.பி. போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம். காரணம் இந்த ராசி சனியால் ஆளப்படுவதாகும். சனி என்றால் குளிர்ச்சி என்று பெயர். மேலும் 6ம் இடம் என்பது நோய், கடன் இவைகளைக் குறிக்கும். இந்த ராசிக்கு 6வது ராசி சந்திரன் ஆவார். சந்திரன் என்றாலும் குளிர்ச்சி என்று பெயர். எனவே இரண்டு குளிர்ச்சியான கிரகங்களுடையத் தொடர்பு சிறப்பானது அல்ல. மேலும் சனி காற்று ராசியானதால் உடலில் ஓடும் ரத்த ஓட்டத்திலும் தடைகள் ஏற்படும். மேலும் காலில் வலி ரத்தக்குழாய்களில் கட்டி பாதம் இவற்றில் பிரச்சினைகள் ஏற்படும். மேலும் கடுமையான காய்ச்சல், தோல் வியாதி, சொறி, சிரங்கு, இதுபோன்ற நோய்கள் எற்பட்டு விலகும்.

இவர்களுக்குப் பெண்களால் அதிக ஆதாயம் உண்டு. அதே சமயம் பெண்களால் பிரச்சனைகளும் உண்டு. கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணம் வந்தாலும் ஒரு கடனை வாங்கி மற்றொரு கடனை அடைக்க வாய்ப்புகள் ஏற்படும். கடன் கட்டுக்குள் இருக்கும் என்றாலும் தேவையில்லமல் கடன் வாங்குதல் கூடாது. சொந்தமாக வீடு, வண்டி, வாகனங்கள் வாங்க யோகம் அமைந்தாலும் அதை கடனில் வாங்கினால் சீக்கிரம். அடைக்க வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் அமையும். அளவுக்கதிகமாக கடன் வாங்காமல் தேவைக்கேற்ப வாங்குவதே புத்திசாலித்தனமாகும்.

வேலை (JOB) தொழில் (BUSINESS)

இந்த ராசிக்கு 10வது ராசியாக செவ்வாய் வீடு வருவதால் ராணுவம், போலீஸ், பொறியியல் துறைகளிலும் மருத்துவம் உரத் துறைகளில் வேலை பார்க்க வாய்ப்பு உண்டு. மேலும் 6ம் அதிபதி சந்திரனாக வருவதால் கப்பல், நீர்வழிப் போக்குவரத்து, மீன்பிடித்துறை, துறைமுகம், இவற்றில் வேலை அமைய வாய்ப்புகள் உண்டு. மேலும் அரசு சார்ந்த இனங்களில் வேலைவாய்ப்புகள் அமையும். மேலும் 7ம் அதிபதி சூரியனாக வருவதால் சுயதொழில் சிறுதொழில் உற்பத்தி சார்ந்த தொழில்கள் புரிய வாய்ப்புகள் அமையும். வங்கி, சேவைத்துறை, தகவல் தொடர்பு, நீதி, நிதித்துறைகளில் வேலை அமைய சந்தர்ப்பங்கள் அமையும்.

இக்காலங்களில் வேலை என்றால் அரசு மற்றும் தனியார் துறைகள் என்று எவ்வளவோ உள்ளன. மேலும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு வேலைகள் உள்ளன. சுயதொழில்கள் என்றாலும் எவ்வளவோ உள்ளன. அவையவற்றிபற்றியெல்லாம் இங்கு விரிவாகக் குறிப்பிடுதல் இயலாது. அவரவர்களது சொந்த ஜாதகத்தை வைத்தும் நடப்பு தசாபுத்தியை வைத்தும் வேலை அல்லது தொழில் இவற்றை முடிவு செய்தல் வேண்டும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவை எல்லாம் பொதுவானவையாகும், என்ன கல்வி என்ன வேலை அல்லது தொழில் இவற்றையெல்லாம் அவரவர்களது தனிப்பட்ட ஜாதகத்தை வைத்தே முடிவு செய்தல் வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமை : திங்கள், செவ்வாய்

அதிர்ஷ்டஎண் : 2,9

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை,சிவப்பு

அதிர்ஷ்ட கற்கள் : முத்து, பவளம்


Like and Share Social Networks:

facebook abirami sekar twitter abirami sekar youtube abirami sekar abirami sekar linked in



Astrologer in chennai tanagar, best good astrologer in chennai
Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

 
ராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை
டிசம்பர் மாத இலக்கினப் பலன்கள்
நவம்பர் மாத இலக்கினப் பலன்கள்
அக்டோபர் மாத இலக்கினப் பலன்கள்
செப்டம்பர் மாத இலக்கினப் பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017- ஆகஸ்ட் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள்
2017- ஜூலை மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஜூன் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
12 இலக்கினப் பொதுப் பலன்கள்
2017- மே மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஏப்ரல் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோ
2017- மார்ச் மாத ராசிபலன்கள் வீடியோ
2017-பிப்ரவரி மாத ராசிபலன்கள் வீடியோ
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோ
டிசம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
நவம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
அக்டோபர் மாத ராசிபலன்கள் வீடியோ
2016-2017 குருப்பெயர்ச்சி பலன்கள்
2016 வருட ராசிபலன்கள்
2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
லக்னப் பொதுப்பலன்கள்
ராசிகளின் பொதுப்பலன்கள்
நட்சத்திரப் பொதுப்பலன்கள்
எண்கணிதப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குருபெயர்ச்சிப் பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்


எல்லா கிழமைகளுக்குகான
நல்ல நேரங்கள்

ராசிகளின் தேவதைகள்
கிரகங்களின் தேவதைகள்
நட்சத்திரங்களின் தேவதைகள்
யோகங்களின் அதிதேவதைகள்
நட்சத்திர நாம எழுத்துக்கள்
ஒரைகள்
வாஸ்து
சந்திராஷ்டமம்
ஜோதிட கேள்வி பதில்கள்
பாவக தொடர்பான கேள்விகள்
ஜாதகத்தில் யோகங்கள்
ஜாதகத்தில் தோஷங்கள்
கரிநாட்கள் பற்றி
ஆயுள்
கல்வி
வேலை / தொழில்
திருமணம்
காதல்
குழந்தை
சொத்து
வெளிநாடு
நோய் / கடன்
வழக்கு
ருது ஜாதகம்
செவ்வாய் தோஷம் பற்றி
கோவில்கள்
ஆன்மிகம்
வழிபாடுகள்
பரிகாரங்கள்
ஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)
எப்படி இருந்த பழமொழி !!
மாவட்ட வாகனப் பதிவு எண்கள்
அவசரத் தொலைபேசி எண்கள்
இயற்கை மருத்துவம்
உங்கள் சிந்தனைக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa - Webdesign
Copyright © 2016-17 Abiramiastrology.com
http://www.hitwebcounter.com/
Counter For Wordpress