maduraiabiramisekar@gmail.com   +91 99948 11158 / +91 94436 74536
Abirami sekar, astrologer in chennai online, madurai astrologer abirami sekar, அபிராமி சேகர் ஜோதிடம்
12 ராசிகளின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
12 லக்னத்தின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
மகரம் ராசி பலன்கள்

ராசிபலன்கள் பற்றிய என்னுரையை முதலில் படிக்கவும் - Click Here

ராசி மண்டலத்தில் 10வது ராசியாகும் இது. இந்த ராசியை ஆங்கிலத்தில் கேப்ரிகான் (CAPRICAN) என்று அழைப்பர். வானமண்டலத்தில் 10வது ராசியாக வருவதால் இதை “உச்சிராசி” அல்லது உச்சராசி என்று அழைப்பர். எனெனில் ஜோதிடத்தில் 10ம் இடம் என்பது உச்சியைக் குறிக்கும். இது ஒர சர ராசியாகும். மேலும் பஞ்சபூத தத்துவங்களில் இது நில ராசியாகும். அதனால் இது “பூமிராசி” என்றும் அழைக்கப்படும். மேலும் இதை சிபண் ராசி என்றும் அழைப்பர். மேலும் இது “பாதிபயன் தரும் ராசி” என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இதை “இரட்டை ராசி” என்றும் அழைப்பார்கள்.

இந்த ராசியை தொழில் ஸ்தானதிபதியானவரும் ஆயுள்காரகருமான சனிபகவான் ஆட்சி செய்கிறார். சனி இருட்டை ஆட்சி செயவதால் இது “இருண்டராசி” என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இது குறுகிய ஏற்றமுள்ள ராசி என்றும் அழைக்கப்படுகிறது.

இந்திய பழமையான நூல்களில் இந்த ராசியை மான் தலையும், முதலை உடலும் கொண்டதாக்க் குறிப்பிடப்படுகிறது. அதே சமயம் கிரேக்க ரோமானிய நூல்களில் ஆட்டுத்தலையும் மீனின் உருவமும் உடையதாகக் இந்த ராசி குறிப்பிடப்படுகிறது. அதே சமயம் மேற்கத்திய மேல்நாடுகளில் வெள்ளாடு முகமும் கடல்குதிரை உருவமாகவும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் மான்தலையும் முதலை உடலும் என்பதே இந்த ராசியின் சரியான சின்னமாகும். அதனால் தான் இந்த ராசியில் பிறந்தவர்களைக் குறிக்கும்பொழுது இவர்கள் தண்ணீரில் இருந்தால் “முதலை” என்றும் தரையில் இருந்தால் உடும்பு என்றும் குறிப்பிடபபடுவார். ராசி மண்டலத்தில் 240 டிகிரிக்கு மேல் 270 டிகிரிக்குள் இந்த ராசி வியாபித்துள்ளது.

இந்த ராசியில் உத்தராட நட்சத்திரத்தின் 1,2,3,4 பாதங்களும் திருவோண நட்சத்திரத்தின் 1,2,3,4 பாதங்களும் அவிட்ட நட்சத்திரத்தின் 1,2 பாதங்களும் அடங்கியுள்ளன.

இந்த ராசி சனியின் சொந்த வீடாக வருவதால் சனி பகவான் இந்த ராசியில் ஆட்சியாகவும் இந்த ராசியில் சகோதரகாரனும் பூமிகாரகனுமாகிய செவ்வாய் பகவான் உச்சமாகவும் குழந்தைக்குக் காரனுமாகிய குருபகவான் இந்த ராசியில் நீசமாகவும் தகப்பன் காரகனாகிய சூரியபகவான் இந்த ராசியில் பகையாகவும் மற்ற கிரகங்கள் நட்பாகவும் ஆட்சி செலுத்துகின்றன.

உடலமைப்பு (STRUCTURE)

சனிபகவான் ராசியில் பிறந்த இவர்கள் ஓரளவு நல்ல அழகுடன் விளங்குவர். ஆரமபத்தில் மிகவும் மெலிந்தும் இணைத்தும் காணப்படும். இவர்கள் வயது ஏற ஏற நன்கு வளர்ச்சியடைந்து நல்ல கண்கள் உருண்டு திரண்டும் அழகுடனும் கவர்ச்சியுடனும் வளர ஆரம்பிப்பார்கள். முடி சுருட்டையாகவும் கண்கள் சற்று குழிவிழுந்தும் இருக்கும். எப்பொழுதும் பிறரை வசீகரிக்க்க் கூடிய உருவ அமைப்பைப் பெற்று விளங்குவார்கள்.

குணநலங்கள் (CHARACTOR)

சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாதலால் கௌரவம் உடையவர்களாகவோ சமுகத்தில் பெயர்,புகழ் உடையவராகவோ இருந்தாலும் இது தியாகம் செய்யும் ராசி என்று பெயர் மற்றவர்களுக்காக உழைத்து உழைத்தே தேய்ந்து போகும் ராசியாகும். தன்னை அழித்து வெளிச்சம்தரும் மெமுகுவர்த்திபோல் இவர்கள் தங்களை ஒடாய் உழைத்து உருகி மற்றவர்களின் சந்தோஷத்திற்காக பாடுபடுவார்கள். இந்த ராசிக்காரர்கள் எப்பொமுதும் ஒருமுறைக்கு இருமுறை நன்கு சிந்தித்துச் செயல்படுவார்கள்.

மேலும் மகரம் ஒரு பெண்ராசியாதலால் இந்த ராசியில் பிறந்தவர்கள் சற்று கூச்சம் சுபாவம் உடையவர்கள். மேலும் சனி என்றால் பயம் என்று பொருளும் உண்டு. எனவே சற்று பயந்த சுபாவம் உடையவர்கள். சனி சிக்கனத்திற்குரிய கிரகம் ஆதலால் இந்த ராசியில் பிறந்தவர்கள் ஒரளவுக்கு சிக்கனமாக செலவு செய்வார்கள். செலவு செய்வதையும் நன்கு யோசித்து தேவையிருந்தால் மட்டுமே செலவு செய்வர். நல்ல புத்திசாலிகளாகவும் ஒழுக்கமுடையவர்களாகவும் நேர்மையாளர்களாகவும் சமுகத்தில் விளங்குவார்கள். கஷ்டப்பட்டே வாழ்வில் முன்னேறுவர். ஒவ்வொரு முன்னேற்றத்திலும் ஏகப்பட்ட தடைகள் ஏற்படும் அவைகளை எல்லாம் தகர்த்தறிந்து வாழ்வில் வெற்றிபெறப் போராடுபவர்கள்.வாழ்க்கையில் அடி முடி அனைத்தையும் பார்க்கவேண்டும் என்ற இயல்புடையவர்கள். உண்மையான பாசத்திற்கும் அன்புக்கும் ஏங்கும் இவர்களை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏமாற்றுவார்கள்.

இந்த ராசிக்காரர்கள் அளவுக்கதிகமாக தேவையில்லாமல் பேசுவர். அதனால் மற்றவர்கள் வெறுப்புக்கு ஆளாவார்கள்.சனி என்றல் சோம்பேறி என்ற அர்த்தமும் உண்டு.இந்த ராசிக்காரர்கள் எந்த ஒரு காரியத்தையும் உடனே செய்யமாட்டார்கள். எவ்வளவுக்கெவ்வளவு தள்ளிப் போடமுடுயுமோ அவ்வளவுதூரம் அந்தக்காரியத்தைத் தள்ளிப் போடுவார்கள். எந்த ஒரு காரியத்தையும் நிதானமாக யோசிப்பர். அதே சமயம் ஒரு காரியத்தில் இறங்கிவிட்டால் அந்தக் காரியம் முடியும்வரை கண்ணயராது பாடுபட்டு அக்காரியத்தை முடிப்பதில் ஆர்வம் உடையவர்கள்.

இந்த ராசிக்காரர்கள் கலைகளில் ஆர்வமும் விருப்பமும் உடையவர்கள். எப்பொழுதும் ஏதாவது சிந்தனையுடனே இருப்பார்கள். முயற்சி முயற்சி என்று எப்பொழுதும் ஏதாவது ஒரு காரியத்தில் இறங்கி வெற்றிபெறப் பாடுபடுவார்கள். மேலும் தன்னம்பிக்கை உள்ளவர்கள். மற்றவர்கள் இவர்களைப் பேசினாலும் அதை புன்முறுவலுடன் மறுதளிக்கும் பரந்த மனப்பான்மையுடையவர்கள். இந்த ராசிக்காரர்கள் தாங்களாகவே எந்தக் காரியத்தையும் செய்ய மாட்டார்கள். இவர்களை யாராவது தூண்டிக் கொண்டேயிருந்தால் மட்டுமே மளமளவென காரியங்களில் இறங்கி வெற்றி பெற பாடுபடுவர்.சற்று பொய் பேசுவதில் வல்லவர்கள். இல்லாததை ஒன்றை இருப்பதாகக் கூறி அதை கற்பனையாகப் பேசுவதில் வல்லவர்கள்.நல்ல புத்திசாலிகளாகவும் நல்ல உயர்ந்த பண்பாடுடையவர்களாகவும் விளங்குவர்.

பொருளாதாரம் (FINANCE)

இந்த ராசிக்கு 2வது ராசியாக கும்பராசி வருவதால் இவர்களுக்கு பொருளாதாரம் ஒரே சீராக இருக்காது. ஒரு நேரம் அபரிதமான பொருள் வரவு எவ்வளவு வந்தாலும் அதை சேமித்து வைக்காமால் செலவழிக்கவும் செய்வர். எப்பொழுதும் பணத்தேவை இருந்து கொண்டேயிருக்கும். பணம் சம்பதிக்க வேண்டும் என்ற ஆர்வம் எப்பொழுதும் இருந்து கொண்டேயிருப்பதால் சதா ஒடியாடி உழைத்து சம்பாரித்தப்படியே இருப்பார்கள். எதிர்காலத்திற்காக ஒரு நேரம் தீவிரமாக சிந்தித்து சேமித்துவைக்கும் இவர்கள் அந்தச் சேமிப்பை வேறொரு விஷயத்துக்காக அலட்சியமாக எடுத்துச் செலவு செய்வர். இவர்களுக்கு சொந்தவீடு, வண்டி, வாகணங்கள் அமைய வாய்ப்புகள் அதிகம் உண்டு. இடம்வாங்கி வீடு கட்டுவதில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள். இவர்களை எப்பொழுதும் யாராவது தூண்டி விட்டுக் கொண்டேயிருப்பதால் அந்த லட்சியங்களை அடைய ஆர்வம் உடையவர்கள். வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவதில் மகிழ்ச்சியடைவார்கள். எப்பொழுதும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உடையவர்கள்.

திருமணம் (MARRIAGE)

இவர்களது ராசிக்கு 7வது ராசி சந்திரனாக வருவதால் மணவாழ்வு ஓரளவு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.வரும் கணவன், மனைவி அழகுள்ளவர்களாகவும் இளமையானவர்களாகவும் வர வாய்ப்புகள் அதிகம் உண்டு. வரும் மணைவி சிக்கனமுள்ளவராகவும் தன்னலம் உடையவராகவும் அமைவார்கள். கணவன் அதிக செலவு செய்வதை விரும்பாதவராக அமைவார்கள். அடிக்கடி மனைவிக்கு உடல்நலம் பாதித்தாலும் இவர் மனைவி மேல் பற்றும் பாசத்துடனும் இருப்பார்கள். அதே போல் மனைவி கணவனிடத்திலும் கணவரது உறவினர்களிடத்திலும் நல்ல பற்றும் பாசமும் உடையவர்களாக இருப்பார்கள். குழந்தைகளால் நல்ல யோகமும் நன்மைகளும் உண்டு. குழந்தைகள் உண்மையாகவும் பாசத்துடனும் விளங்குவார்கள்.

நோய் (DISEASE) கடன் (LOAN)

வானமண்டலத்தில் 10வது ராசியாக சனி வீடாக வருவதால் சனி இவர்களுக்கு துடை, முட்டி, கணுக்கால், பாதங்கள் இவற்றில் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படும். மேலும் சளித்தொல்லைகள் ஏற்படும். மேலும் சனி எலும்பைக் குறிப்பதால் எலும்பு,தோல் வியாதிகள் மற்றும் உடலில் அலர்ஜி அரிப்பு,வலிப்பு,வாயு தொல்லைகள் ஏற்படும். மேலும் உடலில் நுறையிரலில் சளித்தொல்லைகள் அஸ்த்துமா போன்ற வியாதிகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. மேலும் 6ம் வீட்டதிபதி புதனாக வருவதால் உடலில் காது, நரம்பு சம்பந்தமான வியாதிகள் ஏற்பட்டு விலகும். இவர்களுக்கு கடன் கொடுக்க அநேகர் தயாராக இருப்பார்கள். மேலும் அடிக்கடி கடன் வாங்க வாய்ப்புகள் அமையும். அவர்கள் வீடு, நிலம், வண்டி வாகனங்கள் வாங்க கடன் வாங்குவார். ஒரு சிலர் உல்லாச பயணம் போக கடன் வாங்குவார்கள். அந்தக் கடனை அடைக்க எப்பாடுபட்டாவது சம்பாதித்து அதிலிருந்து மீள்வர்.

வேலை (JOB) தொழில் (BUSINESS)

இந்த ராசிக்கு 10வது ராசியாக சுக்ரன் வருவதால் அரசு அரசு சார்ந்த துறைகளில் வேலைபார்க்கும் வாய்ப்புகள் அமையும். மேலும் 6ம் பாவம் புதன் வீடாக வருவதால் தகவல் தொடர்பு, போக்குவரத்து வண்டி வாகனங்கள் போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் ஏற்படும். கணிதம், மருத்துவர்கள். பொறியாளர்களாகவும் விளங்க வாய்ப்பு ஏற்படும். மேலும் 10ம் இடத்துச் சுக்ரன் சினிமா, இசை, மியுசிக், கதை, கவிதை, இவற்றில் ஆர்வம் உடையவராக விளங்கச் செய்து அதில் ஈடுபடவைப்பார்.

மேலும் பெண்கள் அணியக்கூடிய ஆடம்பர பொருட்கள் அழகுசாதன பொருட்கள் இவற்றை உற்பத்தி செய்வதிலும் விற்பனை செய்வதிலும் ஆர்வமும் விருப்பமும் உடையவர்களாக விளங்கச் செய்யும். மேலும் சிறுதொழில் அல்லது சுயதொழில் அல்லது குறுந்தொழில்களில் ஈடுபட்டு வருமானம் பெற முயற்சி செய்ய வைக்கும். நீர் சம்பந்தமான தொழிகள் செய்ய வாய்ப்புகள் ஏற்படும். மேலும் உற்பத்தி சம்பந்தமான தொழில்கள் செய்ய வாய்ப்புகள் ஏற்படும். மேலும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள்.

இன்று வேலை என்பது அரசு மற்றும் அரசு சார்ந்த இனங்கள் பெயர்போன தனியார்துறைகள் இவற்றைக் குறிக்கும். மேலும் வேலை எனப்து உள்ளூர் உள்நாடு வெளிநாடு இவற்றில் வேலை பார்ப்பதைக் குறிக்கும். மேலும் தொழில் என்பதும் இன்று பல்கிப் பெருகியுள்ளது. எவற்றைச் செய்தால் லாபம் ஏற்படும் என்பதை எல்லாம் அவரவர் ஜாதகத்தை வைத்துத்தான் முடிவு செய்தல் வேண்டும். வேலை, தொழில் என்பதையெல்லாம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதகத்தை வைத்து முடிவு செய்தல் வேண்டும். மேலும் அதற்குரிய தசாபுத்திகள் வர வேண்டும். இதையெல்லாம் ஒருவரது தனிப்பட்ட ஜாதகத்தை வைத்துத் தான் பலன் கூற முடியும், இங்கு பொதுவான விஷயங்களே குறிக்கப்பட்டுள்ளது.

அதிர்ஷ்டக் கிழமை : புதன், வெள்ளி, சனி

அதிர்ஷ்ட எண்கள் : 5,6,8

அதிர்ஷ்ட நிறம் : பச்சை, வெண்மை, கருப்பு

அதிர்ஷ்ட கற்கள் : மரகதப்பச்சை, வைரம், கருநீலக்கல்


Like and Share Social Networks:

facebook abirami sekar twitter abirami sekar youtube abirami sekar abirami sekar linked in



Astrologer in chennai tanagar, best good astrologer in chennai
Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

 
ராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை
அக்டோபர் மாத இலக்கினப் பலன்கள்
செப்டம்பர் மாத இலக்கினப் பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017- ஆகஸ்ட் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள்
2017- ஜூலை மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஜூன் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
12 இலக்கினப் பொதுப் பலன்கள்
2017- மே மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஏப்ரல் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோ
2017- மார்ச் மாத ராசிபலன்கள் வீடியோ
2017-பிப்ரவரி மாத ராசிபலன்கள் வீடியோ
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோ
டிசம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
நவம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
அக்டோபர் மாத ராசிபலன்கள் வீடியோ
2016-2017 குருப்பெயர்ச்சி பலன்கள்
2016 வருட ராசிபலன்கள்
2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
லக்னப் பொதுப்பலன்கள்
ராசிகளின் பொதுப்பலன்கள்
நட்சத்திரப் பொதுப்பலன்கள்
எண்கணிதப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குருபெயர்ச்சிப் பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்


எல்லா கிழமைகளுக்குகான
நல்ல நேரங்கள்

ராசிகளின் தேவதைகள்
கிரகங்களின் தேவதைகள்
நட்சத்திரங்களின் தேவதைகள்
யோகங்களின் அதிதேவதைகள்
நட்சத்திர நாம எழுத்துக்கள்
ஒரைகள்
வாஸ்து
சந்திராஷ்டமம்
ஜோதிட கேள்வி பதில்கள்
பாவக தொடர்பான கேள்விகள்
ஜாதகத்தில் யோகங்கள்
ஜாதகத்தில் தோஷங்கள்
கரிநாட்கள் பற்றி
ஆயுள்
கல்வி
வேலை / தொழில்
திருமணம்
காதல்
குழந்தை
சொத்து
வெளிநாடு
நோய் / கடன்
வழக்கு
ருது ஜாதகம்
செவ்வாய் தோஷம் பற்றி
கோவில்கள்
ஆன்மிகம்
வழிபாடுகள்
பரிகாரங்கள்
ஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)
எப்படி இருந்த பழமொழி !!
மாவட்ட வாகனப் பதிவு எண்கள்
அவசரத் தொலைபேசி எண்கள்
இயற்கை மருத்துவம்
உங்கள் சிந்தனைக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa - Webdesign
Copyright © 2016-17 Abiramiastrology.com
http://www.hitwebcounter.com/
Counter For Wordpress