maduraiabiramisekar@gmail.com   +91 99948 11158 / +91 94436 74536
Abirami sekar, astrologer in chennai online
12 ராசிகளின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
12 லக்னத்தின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
துலாம் ராசி பலன்கள்

ராசிபலன்கள் பற்றிய என்னுரையை முதலில் படிக்கவும் - Click Here

ராசி மண்டலத்தில் துலாம் 7வது ராசியாகும், ஆங்கிலத்தில் இந்த ராசியை லிப்ரா (LIBRA) என்று அழைப்பர். இது ஒரு சரராசியாகும். பஞ்சபூத தத்துவங்களில் இது இரண்டாவது காற்று ராசியாகும். அதனால் இது அசையும் சரராசி என்றும் அழைக்கப்படும். மேலும் இது ஆண் ராசி என்றும் அழைக்கப்படும். மேலும் இது நகரும் தன்மையுடைய ராசியாகும். மேலும் இது நீண்ட ராசி என்றும் உயிரற்றது என்றும் அழைக்கப்படும். இரவும் பகலும் சமமாக இருக்கும் ராசியாகும் இது அதிகாலைப் பொழுதைக் குறிக்கும் ராசியாகும். மேலும் நடந்து கொண்டிருக்கிற ஒரு செயலைக் குறிக்கும் ராசியாகும். இது இருகால் ராசி என்றும் அழைக்கப்படும்.

தராசை கையில் ஏந்திய வியாபாரியை இந்த ராசி உருவ அமைப்பாக கொண்டுள்ளது. அதனால் இதை வியாபார ராசி என்றும் குறிப்பர். சுக்ரன் ஆட்சி செய்யும் ராசியாகும். அதனால் இந்த ராசியின் அதிபதியாகச் சுக்ரன் குறிக்கப்படுகிறார். அதனால் தான் இந்த ராசி ஒரு சரிசமமாக்கும் ராசி என்று அழைக்கப்படுகிறது.

சித்திரை நட்சத்திரத்தின் 3,4 பாதங்களும் சுவாதி நட்சத்திரத்தின் 1,2,3,4, பாதங்களும் விசாக நட்சத்திரத்தின் 1,2,3 பாதங்களும் இந்த ராசியில் அடங்கியுள்ளன. ராசி மண்டலத்தில் 180 டிகிரி முதல் 210 டிகிரி வரை இந்த ராசி வியாபித்திருக்கிறது.

இந்த ராசியை சுக்ரன் ஆள்வதால் சுக்ரன் இந்த ராசியில் ஆட்சியாகவும் தொழில் மற்றும் ஆயுள்காரகனான சனிபகவான் இந்த ராசியில் உச்சமாகவும் சனியின் தந்தையான சூரிய பகவான் இந்த ராசியில் நீச்சமாகவும் தேவர்களுக்கெல்லாம் அதிபதியான அல்லது குருவான குருபகவான் இந்த ராசியில் பகை பெற்றும் மற்ற கிரகங்கள் சமமாகவும் நட்பாகவும் அமையப்பெற்றுள்ளன.

உடலமைப்பு (STRUCTURE)
இந்த ராசியில் பிறந்தவர்கள் நல்ல அழகான உருவமும் நல்ல அழகிய கண்களையும் உடையவர்கள். நீண்ட உயரமான உருவமும் உடையவர்கள். எப்பொழுதும் கண்கள் அலைபாய்ந்து கொண்டும் புன்னகை மாறாமல் சிரித்த முகத்துடன் விளங்குவர். நல்ல வசீகரமான புன்னகையும் ஒழுங்கான பல்வரிசையும் அகன்ற புஜங்களும் மிருதுவான கைகளையும் உடையவர்கள். கவர்ச்சியும் அழகும் உள்ள இவர்களின் இடை சிறுத்தும் மெலிந்தும் அழகாகவும் இருக்கும் உருவ அமைப்பு உடையவர்கள்.

குணநலன்கள் (CHARACTOR)
நீதி தேவதையின் கையில் உள்ள தராசை இந்த ராசி குறிப்பிடுவதால் இந்த ராசியில் பிறந்தவர்கள் நீதி, நேர்மையுடன் நடந்து கொள்வர். தர்மநியாயத்திற்கும் கட்டுப்பட்டவர்கள், மனசாட்சிக்கும் தெய்வத்திற்கும் கட்டுபட்டவர்கள். எதையும் சீர்தூக்கிப் பார்த்து பகுத்தாய்ந்து நல்லது எது தீயது எது என ஆராய்ந்து முடிவு செய்வதில் வல்லவர்கள். ஒரு நல்ல தீர்ப்பு வழங்கும் நீதிமானாக இந்த ராசிக்காரர்கள் விளங்குவார்கள். எவ்வளவு விலை கொடுத்தாலும் விலை போகாது தர்மத்திற்கும் மனசாட்சிக்கும் தெய்வத்திற்கும் பயந்து வாழ்வார்கள்.

எப்பொழுதும் அமைதியை விரும்புவர் தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமலும் மற்றவர்களின் விஷயங்களில் அக்கறையில்லாமலும் இருப்பர். தனக்கு சரி எனப்பட்டதைச் சொல்வதிலும் பேசுவதிலும் எழுதுவதிலும் தனித்துவம் மிக்கவர்கள். யாரையும் அவ்வளவு எளிதில் நம்பி எந்த ஒரு காரியத்தையும் ஒப்படைக்கமாட்டார்கள். மேலும் எப்பொழுதும் வாழ்க்கையில் நன்றி மறவாமலும் நல்ல ஒழுக்கத்துடனும் விளங்குவர். எப்பொழுதும் தவறான பழக்கத்திற்கு அடிமையாக இருக்கமாட்டார்கள்.

எப்பொழுதும் கலை, இசை, நடனம், நாட்டியம், நாடகம், சினிமா, இவற்றில் அதிக ஈடுபாடு மிக்கவர்கள். கலைத்துறையில் அதிக ஆர்வமும் பற்றும் மிக்கவர்கள். கதை, கவிதை எழுதுவதிலும் படம் வரைவதிலும் விருப்பம் உடையவர்கள். நல்ல ஆடை, ஆபரணங்களை அணிவதில் எப்பொழுதும் விருப்பமும் மகிழ்ச்சியும் உடையவர்கள்.

மற்றவர்கள் செய்த நன்மைகளை மறக்காமல் அவர்களுக்கு ஏதாவது ஒரு சமயத்தில் உதவி செய்வதில் கண்ணுங் கருத்துமாயிருப்பார்கள். எப்பொழுதும் இரக்க சிந்தனையும் தயாள குணமும் உடையவர்கள். தங்களுடைய சுகதுக்கங்களைக் கூட மறந்து மற்றவர்களுக்கு உதவிபுரிவதில் முன்னிலை வகிப்பார்கள். அதனால் மற்றவர்களால் எப்பொழுதும் விரும்பப்படுபவர்களாக விளங்குவார்கள். நல்ல கற்பனைத்திறன் உடையவர்கள். அதே சமயம் நல்ல குரல் வளம் உடையவர்கள்.

எப்பொழுதும் திட்டமிட்டு காரியம் ஆற்றும் இவர்கள் ஆன்மீக விஷ்யங்களில் எப்பொழுதும் நம்பிக்கையும் ஈடுபாடும் உடையவர்கள். அதனால் மற்றவர்கள் செய்யும் தவறுகளை உடனடியாக மன்னித்து ஏற்றுக் கொள்வார்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் தந்திரமாகக் கையாளும் திறன் உடையவர்கள். எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்குமாறு செய்வார்கள். தங்களுடைய பொருள்களையே பெரிதாக விரும்பி போற்றுவார்கள். மேலும் சுற்றுப்புற சூழ்நிலைகளிலும் அதிக கவனம் செலுத்துவர். குறிப்பாக சமுதாயச் சிந்தனையில் அதிக ஆர்வம் உடையவர்கள்.

பொருளாதாரம் (FINANCE)
பொருளாதார நிலைமை எப்பொழுதும் நல்ல முறையில் இருக்கும், பணங்கள் வந்து போய்க் கொண்டேயிருக்கும், பண விஷயங்களில் இவர்கள் தாராளாமாகச் செலவு செய்வார்கள். செலவுகளைப் பற்றி அதிகம் கவலைப்படாத இவர்கள் பகட்டுக்காகவும் படோடோபத்துக்காகவும் பெரிய அளவில் செலவு செய்யத் தயங்க மாட்டார்கள். பணம் கடன் கேட்டால் உடனே கொடுக்கும் எண்ணம் உடைய இவர்கள் கொடுத்தப் பணத்தைப் திரும்ப கேட்பதில் தயக்கம் உள்ளவர்கள். சொந்த வீடு வண்டி வாகனங்கள் அமையும், எப்பொழுதும் வசதியான வீட்டில் வாழ வாய்ப்புகள் ஏற்படும் கையில் எப்பொழுதும் பணம் இருந்து கொண்டேயிருக்கும்.

திருமணம் (MARRIAGE)
இந்த ராசிக்காரர்கள் உண்மையான அன்புள்ளவர்களாதலால் கணவன், மனைவி ஒற்றுமை அதிகரித்துக் காணப்படும். மேலும் அடிக்கடி உணர்ச்சிவசப்படக் கூடியவரதலால் எதிர்பாலரை ஈர்ப்பதில் ஆர்வம் உடையவர்கள். மேலும் காதல் விஷயங்களில் ஆண், பெண், இருபாலரும் ஈடுபட்டு எல்லை மீறுவார்கள். இவர்களது மணவாழ்வு மகிச்ச்சிகரமாகவும் இன்பகரமாகவும் விளங்கும். இவர்கள் மற்றவர்களுடன் ஒத்துப் போவதால் மணவாழ்வில் பெரிய அளவில் பிரிவு பிரச்சினைகள் வர வாய்ப்பு குறைவு. இந்த ராசிக்காரர்கள் சுகமாக வாழ்க்கையை விரும்புவார்கள். ஒத்த குணமுடைய கணவன் மனைவி அமைய வாய்ப்புகள் அதிகம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் இவர்களுக்குள் பெரிய அளவில் பிரிவு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை. எனெனில் இந்த ராசிக்கு 2வது ராசியாக செவ்வாய் ஆகவும் 7வது ராசியும் செவ்வாய் ஆகவும் வருவதால் கவனமுடன் மனைவி பேசிப் பழகுதல் வேண்டும். 7ம் இடம் என்பது கணவன் அல்லது மனைவி ஆகும். 2ம் இடம் என்பது பேச்சு ஆகும். செவ்வாய் என்பது கடுமையான கடுஞ்செற்களை வெளிப்படுத்துவதைக் குறிப்பதால் தம்பதியர்கள் வார்த்தையை அளந்து பேசிப்பழகினால் மணவாழ்க்கையில் பிரச்சினைகளும் மனவருத்தங்களும் குறையும். வன் சொற்கைளைப் பயன்படுத்தாமல் இனிய பேச்சுகளைப் பேசி குடும்ப ஒற்றுமையை இருவரும் காத்தல் வேண்டும். இல்லையெல் மணவாழ்வு திருப்தியற்றதாகவே இருக்கும்.

நோய் ( DISEASE) கடன் (LOAN)
இந்த ராசிக்கு 6வது வீடாக குருபகவான் வீடு மீன ராசியாக வருவதால் உடலில் வயிறு, குடல், இரப்பை, கல்லீரல் போன்றவற்றில் பிரச்சினைகள் ஏற்படும். மேலும் உடல்பருமன், உடலில் கட்டி, தேம்பல், அடிவயிற்றில் வலி இவைகள் ஏற்படும். மேலும் பித்தப்பை, நீர் சுரப்பிகள், கனையம் இவற்றில் பிரச்சினைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. குறிப்பாக வயிறு, கண், இவற்றில் பிரச்சினைகளும் மூலம் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகளும் கால், கால் பாதங்களில் பிரச்சினைகள் எற்பட்டு விலகும்.

இந்த ராசிக்காரர்களுக்கு குருபகவான் 6ம் வீடமாக வருவதால் பெரிய அளவில் கடன்களும் இருந்து கொண்டேயிருக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்க வாய்ப்புகள் அதிகரிக்கும். வங்கிகளில் பெரிய அளவில் கடன் வாங்க சந்தர்ப்பம் அமையும். பண விஷயங்களில் ஜாமின் கையெழுத்திப் போடுவது. இந்த ராசிக்காரர்களுக்கு மிகுந்த துன்பத்தையும் வருத்தத்தையும் அதிகரிக்கும். எனவேகொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை.

வேலை (JOB) அல்லது தொழில் (BUSINESS)
இந்த ராசிக்கு 10வது ராசியாக கடக ராசியாக வருவதால் கடல், உப்பு, நீர், திரவ சம்பந்தமாக துறைகளில் வேலை மற்றும் தொழில்கள் அமைய வாய்ப்புகள் உண்டு. மேலும் 6ம் வீடாக குரு பகவான் வருவதால் குரு சார்ந்த வேலை அமைய வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஆசிரியர் வேலை, பள்ளி கல்லூரி, பலகலைக்கழகங்களில் வேலை அமைய வாய்ப்புகள் உண்டு. நீதி, நீத்துறை, வங்கி, இன்சூரன்ஸ் போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் ஏற்படும். 7வது ராசியாக செவ்வாய் வீடு வருவதால் செவ்வாய் சம்பந்தமான தொழில்கள் உற்பத்தி சார்ந்த தொழில்கள் மெக்கானிக் சம்பந்தமான சுயதொழில்கள் அமைய வாய்ப்புகள் அதிகம் உண்டு.

இங்கு வேலை அல்லது தொழில் என்று பொதுப்படையாக மட்டுமே குறிப்பிட முடியுமேயொழிய இப்படித்தான் வேலை அல்லது தொழில் என்று குறிப்பிடமுடியாது. காரணம் ஒவ்வொரு ஜாதகமும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானது ஆகும். இது அவரவர்களுடைய சொந்த ஜாதகத்தைக் வைத்தும் நடப்பு தசாபுத்திகளை வைத்தும் கணக்கிட்டு வேலை அல்லது தொழிலைக் குறிப்பிட முடியும். மேலும் வேலை, தொழில் என்பது இன்று பல கிளைகளாகப் பல்கிப் பெருகியுள்ளதால் ஒருவரது தனிப்பட்ட ஜாதகத்தை வைத்துத்தான் பலன் அறிய முடியும்.

அதிர்ஷ்டக் கிழமை : ஞாயிறு, திங்கள், வியாழன்
அதிர்ஷ்ட எண்கள் : 1, 2, 3
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, மஞ்சள்
அதிர்ஷ்டக் கற்கள் : மாணிக்கம், முத்து, மஞ்சள், புஷ்பராகம்.

Like and Share Social Networks:

facebook abirami sekar twitter abirami sekar youtube abirami sekar abirami sekar linked in



Astrologer in chennai tanagar, best good astrologer in chennai
Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

 
ராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை
டிசம்பர் மாத இலக்கினப் பலன்கள்
நவம்பர் மாத இலக்கினப் பலன்கள்
அக்டோபர் மாத இலக்கினப் பலன்கள்
செப்டம்பர் மாத இலக்கினப் பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017- ஆகஸ்ட் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள்
2017- ஜூலை மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஜூன் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
12 இலக்கினப் பொதுப் பலன்கள்
2017- மே மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஏப்ரல் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோ
2017- மார்ச் மாத ராசிபலன்கள் வீடியோ
2017-பிப்ரவரி மாத ராசிபலன்கள் வீடியோ
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோ
டிசம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
நவம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
அக்டோபர் மாத ராசிபலன்கள் வீடியோ
2016-2017 குருப்பெயர்ச்சி பலன்கள்
2016 வருட ராசிபலன்கள்
2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
லக்னப் பொதுப்பலன்கள்
ராசிகளின் பொதுப்பலன்கள்
நட்சத்திரப் பொதுப்பலன்கள்
எண்கணிதப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குருபெயர்ச்சிப் பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்


எல்லா கிழமைகளுக்குகான
நல்ல நேரங்கள்

ராசிகளின் தேவதைகள்
கிரகங்களின் தேவதைகள்
நட்சத்திரங்களின் தேவதைகள்
யோகங்களின் அதிதேவதைகள்
நட்சத்திர நாம எழுத்துக்கள்
ஒரைகள்
வாஸ்து
சந்திராஷ்டமம்
ஜோதிட கேள்வி பதில்கள்
பாவக தொடர்பான கேள்விகள்
ஜாதகத்தில் யோகங்கள்
ஜாதகத்தில் தோஷங்கள்
கரிநாட்கள் பற்றி
ஆயுள்
கல்வி
வேலை / தொழில்
திருமணம்
காதல்
குழந்தை
சொத்து
வெளிநாடு
நோய் / கடன்
வழக்கு
ருது ஜாதகம்
செவ்வாய் தோஷம் பற்றி
கோவில்கள்
ஆன்மிகம்
வழிபாடுகள்
பரிகாரங்கள்
ஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)
எப்படி இருந்த பழமொழி !!
மாவட்ட வாகனப் பதிவு எண்கள்
அவசரத் தொலைபேசி எண்கள்
இயற்கை மருத்துவம்
உங்கள் சிந்தனைக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa - Webdesign
Copyright © 2016-17 Abiramiastrology.com
http://www.hitwebcounter.com/
Counter For Wordpress