maduraiabiramisekar@gmail.com   +91 99948 11158 / +91 94436 74536
Abirami sekar, astrologer in chennai online
12 ராசிகளின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
12 லக்னத்தின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
கன்னி ராசி பலன்கள்

ராசிபலன்கள் பற்றிய என்னுரையை முதலில் படிக்கவும் - Click Here

வான மண்டலத்தில் 6 வது ராசியாக கன்னிராசி அமைந்துள்ளது. இந்த ராசியை ஆங்கிலத்தில் விர்கோ (VIRGO) என்று அழைப்பர். இந்த ராசியை புத்திக்கும் வித்தைக்கும் அதிபதியான புதபகவான் ஆள்கிறார். இது ஒரு உபயராசியாகும். உபயம் என்றால் நிலையற்ற என்று பொருள் ஆகும். பஞ்ச பூத தத்துவங்களில் இது பூமி ராசியாகும். அதாவது நிலராசி என்று பெயர். மேலும் இது ஒரு பெண் ராசியாகும். அத்துடன் இது “இரட்டை ராசி” என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இது ஒரு “வறண்ட ராசி” என்றும் அழைக்கப்படுகிறது. அத்துடன் குறுகலான மற்றும் மிகவும் குட்டையான ராசி என்றும் அழைக்கப்படுகிறது. இரவில் வலுப்பெற்ற ராசியாகும். இது அதனால் இது “இருட்டு ராசி” என்றும் அழைக்கப்படுகிறது.

ஒரு கன்னியுடன் ஓடத்தின் மத்தியில் இருந்து கொண்டு கையில் நெருப்புச் சட்டியில் இருப்பதாக இந்த ராசி குறிக்கப்படுகிறது. அதனால் இந்த ராசி பெண் ராசி “ என்றிம் அதுதான் “பகவதி” என்றும், இந்த ராசியைக் குறிப்பிடுவர். தற்பொழுது கன்னிராசி ‘கன்னிமேரி’ என்று குறிக்கப்படுகிறது. காரணம் கன்னி ஒரு மென்மையான மனமும் மிருதுவான உடலும் கொண்ட ராசியாதலால் இது ஒரு பெண் ராசியாகக் குறிப்பிடப்படுகிறது. மேலும் இது இருகால் உள்ள ராசி என்றும் அழைக்கப்படும்.

இந்த ராசியில் உத்தர நட்சத்திரத்தின் 2,3,4 பாதங்களும் அஸ்த்த நட்சத்திரத்தின் 1,2,3,4 பாதங்களும் சித்திரை நட்சத்திரத்தின் 1,2 பாதங்களும் அடங்கியுள்ளன. மேலும் வான மண்டலத்தின் 150 டிகிரி முதல் 180 டிகிரி வரை இந்த ராசி வியாபித்துள்ளது. இந்த ராசியில் புதன் உச்சம் பெற்றும் செவ்வாய் பகவான் பகை பெற்றும் இன்ப சுகபோகங்களுக்கு அதிபதியான சுக்ர பகவான் நீசம் பெற்றும் மற்ற கிரகங்கள் நட்புடனும் ஆட்சி செலுத்திகின்றன.

உடலமைப்பு : (STRUCTURE)
இந்த ராசியில் பிறந்தவர்கள் நல்ல உயரமான உருவ அமைப்பு உடையவர்கள். அதே சமயம் சற்று மெலிந்த தேகம் உடையவர்கள். நல்ல அழகான கண்களை உடையவர்கள். புருவங்கள் அழகாகவும் சுருண்ட ரோகங்களுடன் நன்கு வளர்ந்த உருவ அமைப்பும் உடையவர்கள். நல்ல குரல்வளம் உடையவர்கள். வேகமாக நடக்கும் உடல் அமைப்பை உடையவர்கள். புதன் என்றால் அழகு அல்லது இளமை என்று பொருள். அதனால் இந்த ராசியில் பிறந்தவர்கள் நீலநிறக் கண்களுடன் அழகாகவும் இளமையுடனும் விளங்குவார்கள்.

குணாதிசயங்கள் (CHARACTER)
இந்த ராசி ஒரு உபய ராசியாகும் “உபயம்” என்றால் மாற்றம் என்று பொருள். மேலும் புதன் இந்த ராசியை ஆள்வதால் புதன் எப்பொழுதும் மாற்றத்தை அடிக்கடி விரும்புவர். இயற்கையிலேயே இவர்கள் நல்ல சுறுசுறுப்பு உடையவர்கள். புதன் என்றாலே சுறுசுறுப்பு அல்லது வேகம் என்று பொருள். மற்றவர்களிடம் அதிகப்பாசத்துடன் பழவதுபோல் ஓரளவு நடிப்பார்கள். அதே சமயம் மற்றவர்களிடத்தில் மரியாதையுடனும் கன்னியத்துடனும் நடந்து கொள்வர்.

எதையும் விரைந்து புரிந்து கொள்ளும் இயல்புடையவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் உள்வாங்கி அதனை வேகமாக செயலாற்றுவதில் எப்பொழுதும் ஆர்வமுடன் இருப்பர். மேலும் இந்த ராசிக்காரர்கள் கடமையுணர்ச்சி மிக்கவர்கள். எதையும் சரியாகத் தீர்மானித்து அந்தக் காரியத்தை நிறைவேற்றுவார்கள். மேலும் புதன் புத்திசாலித்தனத்திற்கும் வித்தைக்கும் கணிதத்திற்கும் அங்கம் வகிப்பதால் அதற்குத் தகுந்தாற்போல் திட்டமிடுவதில் மிகவும் வல்லவர்கள்.

தங்கள் பேச்சில் எப்பொழுதும் நகைச்சுவையும் இனிமையையும் கலந்தே பேசுவார்கள். தங்களைப் போல் மற்றவர்களும் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். கன்னிராசி வேலையைக் குறிக்கும் ராசியாகும். எனவே இந்த ராசியை பிறந்தவர்கள் எப்பொழுதும் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை உடையவர்கள். மேலும் எப்பொழுதும் ஏதாவது ஒன்றை படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் அல்லது புதிய விஷயங்களைப் பற்றித் தேடிக் கொண்டே இருக்க வைக்கும் அமைப்பைப் பெற்றவர்கள்.

மற்றவர்களின் குற்றம் குறைகளை வெகு எளிதில் கண்டுபிடிக்கும் இவர்கள் அதற்காக மற்றவர்களை மிகவும் கடிந்து கொள்வார்கள். எப்பொழுதும் முன்ஜாக்கிரதை உடையவர்களாக இருப்பதால் மற்றவர்களை சந்தேக் கண்கொண்டு பார்க்கத் தயங்கமாட்டார்கள். எதையும் ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்ற உயரிய எண்ணம் உடையவர்களாதலால் மற்றவர்களை வேலை வாங்குவதில் கில்லாடிகள். மேலும் ஒரு குழுவுக்கு தலைமையேற்று வழிநடத்தும் அல்லது ஒரு சங்கத்திற்கு வழிகாட்டும் செயலை எப்பொழுதும் விரும்புவார்கள். மற்றவர்களுக்கு ஆலோசனைகளும் வழிமுறைகளையும் எடுத்தியம்புவதில் வல்லவர்கள்.

இந்த ராசிக்காரர்கள் உணவு உண்பதில் ஆர்வம் உடையவர்கள். குறிப்பாக அசைவ உணவு மற்றும் அறுசுவை உணவுகளில் ஆர்வம் உடையவர்கள். மேலும் நல்ல உடை உடுத்துவதில் எப்பொழுதும் ஆர்வமும் விருப்பமும் உடையவர்கள். மேலும் இந்த ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் சதா பேசிக் கொண்டே இருப்பார்கள். மேலும் எதையும் பகுத்தாய்வு செயவதிலும் ஒரு விஷயத்தைப் பற்றி விமர்சனம் செய்வதிலும் ஆர்வம் உடையவர்கள். மேலும் இவர்கள் தங்களின் தேவைகளை அடிக்கடி மாற்றிக் கொண்டேயிருப்பார்கள். எது முதல் தேவை எது இரண்டாவது தேவை என்பதில் கோட்டைவிட்டு விடுவார்கள்.

ஒரே நேரத்தில் பலவேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செயவதில் ஆர்வம் உடையவர்கள். தானே எல்லாம் தெரிந்தவர்கள் என்றும் தங்களுக்குத் தெரியாத விஷயங்களே இவ்வுலகில் இல்லையென்றும் என்ற எண்ணம் உடையவர்கள். பிறரிடம் ஆலோசனை கேட்பதை இவர்கள் விட்டொழித்தல் வேண்டும். இல்லையேல் தேவையற்ற குழப்பமும் முடிவு எடுப்பதில் தாமதமும் ஏற்படும்.

பொருளாதாரம் (FINANCE)
கன்னி ராசி வானமண்டலத்தில் 6வது ராசியாகும். 6வது ராசி உழைத்துக் சம்பாதிக்கும் எண்ணம் உடைய ராசியாகும். அதிர்ஷ்டத்தைக் காட்டிலும் உழைப்பின்மேல் நம்பிக்கை வைத்து வாழ்வதால் பணத்தை தேவையில்லாமல் செலவு செய்யாமல் கஷ்டப்பட்டு சேமித்து வைப்பதில் ஆர்வம் உடையவர்கள். யாருக்கும் தேவையில்லாமல் கடன் கொடுக்கமாட்டார்கள். அதே சமயம் தேவையில்லமல் கடன் வாங்கவும் மாட்டார்கள். அவசியமும் இருந்தாலொழிய கடன் வாங்க அஞ்சுவர். இந்த ராசிக்கு 2வது ராசியாக சுக்ரன் வீடான துலாராசி வருவதால் இவர்கள் கையில் எப்பொழுதும் பணப்புழக்கம் இருக்கும். மேலும் கையில் பணம், பொருள், நகைகள் இருந்து கொண்டேயிருக்கும். வண்டி வாகனங்கள் வாங்குவதிலும் இடம் வாங்குவதிலும் அல்லது வீடு கட்டுவதிலும் தேவைக்கேற்ப கடன் வாங்குவர். தேவையில்லாமல் மற்றவர்களுக்குச் செலவு செய்ய மாட்டார்கள். மிகவும் சிக்கனமாக செலவு செய்வார்கள்.

திருமணம் (MARRIAGE)
புத்திக்குக் அதிபதியான புதன் ராசியில் பிறந்த இந்த ராசிக்காரர்கள் அழகைவிட புத்திக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். மற்றவர்களிடம் அன்பு காடுவதில் கூச்ச சுபாவம் உடையவர்கள். அன்பை வெளிக்காட்டுவதிலும் கஞ்சத்தனம் உடையவர்கள் கணவன் மனைவி ஒற்றுமை வாழ்வில் நாளுக்கு நாள் அதிகரிக்கும். அதே சமயம் இந்த ராசிக்காரர்கள் காதல் வயப்படுவதில் விருப்பம் உள்ளவர்கள். ஆனால் அந்தக் காதல் நிறைவேறுவதில் நிறையத் தடைகள் பிரச்சினைகள் போராட்டங்கள் ஏற்படும். மேலும் இந்த ராசிக்கு 7வது ராசியாக குரு அதாவது மீனராசி வருவதால் இவர்களுக்கு அழகான கணவன் அல்லது மனைவி சிறப்பல்ல காரணம் குரு என்றால் “அழகு” என்று பொருள். அது வானமண்டலத்தில் 12வது ராசியாக வருவதால் 12ம் இடம் என்பது பிரிவு அல்லது பிரச்சினைகளைக் குறிப்பிடும் இடமாகும். எனவே இந்த ராசிக்காரர்கள் தங்கள் துணையைத் தேர்ந்தெடுக்கும் பொழுது அழகுள்ளவர்களை தவிர்த்து சுமாரான அழகுள்ளவர்களை வாழ்க்க துணையாகத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். பெற்றோர்கள் பார்த்தாலும் இதை கவனத்தில் இருத்தி தம்பதிகளை இணைத்தல் வேண்டும். நல்ல புத்ர சந்தான விருத்தி அமைய வாய்ப்புகள் உண்டு. அதே சமயம் குழந்தைகளால் பிரச்சினைகளும் ஏற்பட்டு விலக வாய்ப்பு அமையும்.

நோய் (DISEASES) கடன் (LOAN)
வானமண்டலத்தின் 6வது ராசி கன்னி ஆகும். கன்னி ராசி என்பது உடலில் வயிற்றையும் குடல் பகுதியையும் வயிற்றின் உள் உறுப்புகளையும் குறிக்கும். மேலும் இந்தப் பகுதியில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படும். மேலும் புத்திக்குக் காரகளான புதனுக்கு ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் அமையாவிட்டால் மனக்குழப்பம், மனஅழுத்தம், மனேவியாதிகள், மூளை நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம். மேலும் புதன் நரம்பு மண்டலத்திற்குரிய கிரகமாதலாம் நரம்பு சம்பந்தப்பட்ட நோய், வாதநோய், பார்க்கின்சன் போன்ற நோய்கள் வர வாய்ப்புகள் உண்டு. வாயுத்தொல்லை, பித்தப்பை, கணையம், கல்லீரல், இவற்றில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கடன் வாங்குவதில் சாமர்த்தியசாலிகள். தேவை இருந்தாலொழிய கடன் வாங்க அஞ்சுவர். கடனை அடைப்பதில் மிகவும் வேகமாகச் செயல்பட்டு வாங்கிய கடனை கஷ்டப்பட்டு உழைத்து அடைத்த பின்பே நிம்மதி அடைவர். பணவிஷயங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவர். இடம், வீடு, வண்டி வாகனங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க பெரிய அளவில் கடன் வாங்குவர். கடன் வாங்கினாலும் எளிதில் கடனை அடைப்பர்.

வேலை:- (JOB) தொழில்:- (BUSINESS)
இந்த ராசிக்கு புதனே அதாவது மிதுனராசியே 10ஆம் வீடாக தொழில் வீடாக வருவதால் புதன் சார்ந்த போக்குவரத்து தகவல் தொடர்பு சேவைத்துறைகளில் வேலை அமைய வாய்ப்புகள் ஏற்படும். மேலும் வேலை ஸ்தானமான 6ஆம் வீடாக சனி வருவதால் இரும்பு, எஃகு, சுரங்கத் தொழிலில் வேலை அமைய வாய்ப்புகள் உண்டு. மேலும் சிறுதொழில் சுயதொழில் உற்பத்தி சார்ந்த தொழில்கள் செய்யலாம். மேலும் விவசாயம் சார்ந்த துறைகளிலும் வேலை அல்லது தொழில் புரிய வாய்ப்புகள் ஏற்படும். ஆனால் கூட்டாகச் சேர்ந்து தொழில் செய்வது நல்லதல்ல. எப்பொழுதும் வேலை, வியாபாரம் இவற்றில் மனம் ஈடுபடும். மொத்தத்தில் பெரிய அளவில் முதலீடு இல்லாமல் கமிஷன், ஏஜென்ஸி, புரோக்கரேஜ், கன்சல்டன்ஸி இவற்றில் ஈடுபட்டு லாபம் அடையலாம்.

இன்றைய நவீன விஞ்ஞான உலகத்தில் எத்தனையோ வேலைகள் அதாவது மத்திய மாநில அரசுகளில் வேலை மற்றும் புகழ் பெற்ற தனியார் துறைகளில் வேலை அமைய சந்தர்ப்பம் உண்டு. மேலும் தொழில் என்றால் எத்தனையோ தொழில்கள் உண்டு. இவற்றையெல்லாம் அவர்களது தனிப்பட்ட ஜாதகத்தை நன்கு அலசி ஆராய்ந்து என்ன கல்வி என்ன வேலை என்ன தொழில் என்பதையெல்லாம் முடிவு செய்தல் வேண்டும். இங்கு ஒரு குறிப்பு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

அதிர்ஷ்டக் கிழமை : புதன், சனி
அதிர்ஷ்ட எண் : 5,8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, கருப்பு
அதிர்ஷ்டக் கற்கள் : மரகதப்பச்சை, கருநீலக்கல்

Like and Share Social Networks:

facebook abirami sekar twitter abirami sekar youtube abirami sekar abirami sekar linked in



Astrologer in chennai tanagar, best good astrologer in chennai
Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

 
ராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை
2017- ஏப்ரல் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோ
2017- மார்ச் மாத ராசிபலன்கள் வீடியோ
2017-பிப்ரவரி மாத ராசிபலன்கள் வீடியோ
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோ
டிசம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
நவம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
அக்டோபர் மாத ராசிபலன்கள் வீடியோ
2016-2017 குருப்பெயர்ச்சி பலன்கள்
2016 வருட ராசிபலன்கள்
2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
லக்னப் பொதுப்பலன்கள்
ராசிகளின் பொதுப்பலன்கள்
நட்சத்திரப் பொதுப்பலன்கள்
எண்கணிதப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குருபெயர்ச்சிப் பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்


எல்லா கிழமைகளுக்குகான
நல்ல நேரங்கள்

ராசிகளின் தேவதைகள்
கிரகங்களின் தேவதைகள்
நட்சத்திரங்களின் தேவதைகள்
யோகங்களின் அதிதேவதைகள்
நட்சத்திர நாம எழுத்துக்கள்
ஒரைகள்
வாஸ்து
சந்திராஷ்டமம்
ஜோதிட கேள்வி பதில்கள்
பாவக தொடர்பான கேள்விகள்
ஜாதகத்தில் யோகங்கள்
ஜாதகத்தில் தோஷங்கள்
கரிநாட்கள் பற்றி
ஆயுள்
கல்வி
வேலை / தொழில்
திருமணம்
காதல்
குழந்தை
சொத்து
வெளிநாடு
நோய் / கடன்
வழக்கு
ருது ஜாதகம்
செவ்வாய் தோஷம் பற்றி
கோவில்கள்
ஆன்மிகம்
வழிபாடுகள்
பரிகாரங்கள்
ஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)
எப்படி இருந்த பழமொழி !!
மாவட்ட வாகனப் பதிவு எண்கள்
அவசரத் தொலைபேசி எண்கள்
இயற்கை மருத்துவம்
உங்கள் சிந்தனைக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa - Webdesign
Copyright © 2016-17 Abiramiastrology.com
http://www.hitwebcounter.com/
Counter For Wordpress