maduraiabiramisekar@gmail.com   +91 99948 11158 / +91 94436 74536
Abirami sekar, astrologer in chennai online
12 ராசிகளின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
12 லக்னத்தின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
சிம்மம் ராசி பலன்கள்

ராசிபலன்கள் பற்றிய என்னுரையை முதலில் படிக்கவும் - Click Here

ராசி மண்டலத்தில் இது 5வது ராசியாகும். ஆங்கிலத்தில் இந்த ராசியை லியோ (LEO) என்று அழைப்பர். பஞ்சபூத தத்துவங்களில் இது ஒரு நெருப்பு ராசியாகும். மேலும் இது இரு “ஸ்திர” ராசியாகும். மேலும் இது ஓர் “ஆண் ராசியாகும்” மேலும் இதை “ஒற்றை ராசி” என்றும் அழைப்பர். இந்த ராசி காட்டு ராஜாவான “சிங்கத்தை” குறிக்கும். அதனால் இந்த ராசி “மிருகராசி” என்னும் நான்கு கால்களை உடைய ராசி என்றும் அதாவது “நாற்கால் ராசி” என்றும் ஜோதிடத்தில் அழைப்பர்.

இந்த ராசியின் அதிபதி சூரியன் ஆவார். நவக்கிரகங்களில் நாம் நம் கண்ணால் பார்க்கக்கூடிய இரண்டு ஒளி கிரகங்களில் ஒன்று சூரியன் மற்றொன்று சந்திரன் ஆவார். அந்த சூரியன் இந்த சிம்ம ராசிக்கு அதிபதியாக வருவதால் இந்த ராசி “நெருப்பு ராசி” என்று அழைப்படுகிறது. சூரியன் நெருப்பைப் போல் இருப்பதால் இந்த ராசி நெருப்பு ராசி என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இந்த ராசி நிலையான மாறாத தன்மையுடைய ராசியாகும். மேலும் எந்த ஒரு செயலும் நடந்து முடிந்த விதத்தைக் குறிப்பிடும் ராசியாகும்.

இது ஒரு முரட்டு சுபாவம் கொண்ட ஆண் ராசியாகும். இது ஒரு சத்துவ குணமுடைய ராசியாகும். சிம்ம ராசியை “மலட்டு” ராசி என்றும் அழைப்பர். இது பகலில் வலுவான ராசியாகக் கருதப்படுகிறது. அதிகக் கோபமுடைய முரட்டு சுபாவம் உடைய ராசி என்றும் அழைக்கப்படுகிறது. காட்டில் வாழும் ஜீவன்களைக் குறிக்கும் ராசியாகும். மேலும் நடந்து செல்லும் உயிர்களைக் குறிக்கும் ராசியாகும். மேலும் இது ஒரு “குறுகிய” ராசி என்றும் அழைக்கப்படும். மலையும் மலைசார்ந்த இடங்களைக் குறிக்கும் ராசியாகும்.

இந்த ராசியில் மக நட்சத்திரத்தின் 1,2,3,4 பாதங்களும் பூரம் நட்சத்திரத்தின் 1,2,3,4 பாதங்களும் உத்தர நட்சத்திரத்தின் முதல் பாதமும் அடங்கியுள்ளது. 120 டிகிரி முதல் 150 டிகிரி வரை வானமண்டலத்தில் இந்த ராசி வியாபித்துள்ளது.

இந்த ராசியில் சூரியன் மட்டும் ஆட்சியாகவும் சந்திரன், செவ்வாய், புதன், குரு, ஆகிய கிரகங்கள் நட்பாகவும் சுக்ரன் சனி ராகு கேது ஆகிய கிரகங்கள் பகை பெற்றும் ஆட்சி செலுத்துகின்றன.

உடலமைப்பு (STRUCTURE)

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் நல்ல உயரம் உடையவர்களாகவும் ஓரளவு நல்ல அகன்ற தோள்களையும் அகன்ற நெற்றியும் உடையவர்கள். நல்ல சதைப்பற்றுடைய உருவ அமைப்புயுடைய்வர்கள். சிம்மம் நெருப்புகிரகமாதலால் நல்ல கம்பீரமான உடலமைப்புடன் கம்பீரமான பேச்சாற்றலும் உடையவர்கள். நல்ல முரட்டு சுபாவம் உடைய உடலமைப்பை ஓரளவு பெற்றிருப்பார்கள். உடலில் உள்ள எலும்புகள் வலுப்பெற்று நல்ல அழகுடன் விளங்குவார்கள்.

குணாதிசயங்கள் (CHARACTER)

இந்த ராசியில் பிறந்தவர்கள் தாராள மனப்பான்மையுடன் பெருந்தன்மையுடான குணம் உடையவர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் துடிப்புடனும் செயல்படுவார்கள். நல்ல பறந்த உள்ளம் உடையவர்கள். நல்ல இரக்க குணம் உடைய இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் விருப்பம் உடையவர்கள். தங்களை நம்பி வந்தவர்களை ஏமாற்றாத குணம் உடையவர்கள். எப்பொழுதும் தங்களை முன்னிலைப்படுத்தி செயல்படுவதில் ஆர்வம் உள்ளவர்கள். தங்களுக்கு அளவுக்கதிமான முக்கியத்துவம் தரவேண்டும். என்பதில் ஆர்வம் உடையவர்கள். தங்களை உயர்த்தியும் மற்றவர்களை தாழ்த்தியும் பேசுவர். தனக்கு நிகர் யாருமில்லை என்ற எண்ணம் உடையவர்கள்.

இந்த ராசிக்காரர்களுக்கு அநேக நண்பர்கள் இருந்தாலும் பெரும்பாலும் தனிமையை அதிகம் விரும்புவார்கள். தங்கள் உற்றர் உறவினர்களையும் நண்பர்களையும் நன்கு அனுசரித்து அவர்கள் விருப்பப்படி நடந்து அவர்களிடம் நற்பெயர் பெறுவர். தங்களது கீழ் வேலை செய்பவர்களிடம் அனுசரித்து நடந்து அவர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் இயல்புடையவர்கள்.

அதிகம் பேசுவதைத் தவிர்த்து ஒரு காரியத்தைச் செயலாற்றுவதில் எப்பொழுதும் ஆர்வமுடன் இருப்பர். தனக்கு இடப்பட்ட வேலை அல்லது கட்டளையை உடனே மேற்கொண்டு அதை வெற்றிகரமாக முடிப்பதற்கு அரும்பாடுபடுவர். மற்றவர் பேசுவதைக் கேட்ட ஒரு காரியத்தை நிறைவேற்றும் ஆற்றல் உடையவர்கள் நவக்கிரகங்களில் “சூரியன்” அரசன் ஆவார். எனவே இந்த ராசியில் பிறந்தவர்கள் அரசரருக்கொப்பான ஏதாவது ஒரு பதவியில் அரசு அல்லது அரசு சார்ந்த அல்லது தனியார் துறையில் பெரும்பதவி வகிப்பர். ஒன்றும் இல்லையென்றாலும் ஏதாவது ஒரு நிறுவனம் அல்லது சங்கம் இவற்றில் தலைமையேற்று நடத்தும் வாய்ப்பைப் பெறுவர்.

தங்களது எண்ணம் ஆசைகள் நிறைவேற கடினமாக உழைக்கும் இவர்கள் யாரையும் எளிதில் நம்பிச் செயல்படுவார்கள். எல்லோரையும் ஒரே மாதிரி சீர்தூக்கும் எண்ணம் உடையவர்கள் இவர்களை உற்றர் உறவினர்கள் நண்பர்கள் ஏமாற்றுவர். தங்களைப் பற்றிப் பெருமையாக யார் பேசினாலும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யத்தயங்காதவள் இயல்பாகவே மற்றவர்களுக்கு உதவிபுரியும் இவர்கள் கொடைத்தனமை மிக்கவர்கள். அதே சமயம் பொய் பேசுபவர்களையும் தர்மத்திற்கு எதிராகப் பேசுபவர்களையும் எதிர்த்து பெரிய அளவில் குரல் கொடுப்பார்கள். எப்பொழுதும் தலைமை ஏற்பதை மட்டுமே விரும்புவார்கள்.

இந்த சிம்ம ராசி ஒரு நிலையான ராசி என்பதால் இதில் பிறந்தவர்கள் மிகவும் பிடிவாத குணமும் அலட்சிய மனோபாவத்துடனும் நடந்து கொள்வார்கள். கடமை உணர்வு உள்ளவர்கள் அதே சமயம் மற்றவர்களை அரவணைத்துச் செலவதில் வல்லவர்கள். எந்த ஒரு காரியத்திலும் அரைமனதுடன் செயல்படாமல் முழுத்திருபதியுடனும் ஈடுபாட்டுடனும் செயல்படுவார்கள். இயல்பாகவே அதிகாரம் செய்து ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் உடையவர்கள்.

பொருளாதாரம் (FINANCE)

பொருளாதாரத்தில் இவர்களுக்கு 2வது வீடாக மற்றும் 11ம் வீடாக புதன் வருவதால் எப்பொழுதும் கையில் பணப் புழக்கம் இருந்து கொண்டே இருக்கும். கேட்ட இடத்தில் எல்லாம் இவர்களுக்கு கடன் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். கொடுத்த பணம் வருவதில் சிறிது தடையேற்பட்டாலும் அந்தப் பணம் பொருள் தவணைமுறையில் வந்து சேர்வதற்கான வழிகள் ஏராளமாக உள்ளன. எப்பொழுதும் கையில் பணம் பொருள் நகைகள் இவைகளை வைத்திருப்பார்கள். வங்கியில் பெருமளவு இருப்பு இருந்து கொண்டே இருக்கும் நன்கு செலவு செய்வர். தாரளாமாக மற்றவர்களுக்கு உதவி புரிவர் இவர்களிடம் பண உதவி கேட்டு வருபவர்களுக்கு இல்லையென்று கூறாது உதவுபுரிவதில் வல்லவர்கள் இல்லை என்று இல்லாமல் ஏதாவது உதவி அல்லது தருமம் செய்து கொண்டே இருப்பார்கள். பணம் வந்து போய்க் கொண்டேயிருக்கும்.

திருமணம் (MARRIAGE)

இந்த ராசிக்காரர்கள் இயற்கையிலேயே அழகானவர்கள். குறிப்பாக ஆண்கள் பெண்களால் அதிகம் விரும்பப்படுவார்கள். மேலும் காதல் திருமணம் செய்வதில் ஆர்வமும் காதல் வயப்படுவதில் மிகவும் விருப்பம் உள்ளவர்கள். தங்கள் மனைவியின் மேல் பற்றுப் பாசமும் உடைய இவர்கள் தங்கள் மனைவியைப் பற்றி மற்றவர்கள் பேசுவதை பொறுக்க மாட்டார்கள். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரித்தே காணப்படும். மேலும் மனைவி அழகானவளாகவும் கணவன் மேல் பற்றுள்ளவளாகவும் ஒரளவு வேலைப்பார்க்கும். பெண்ணாகவும் அமைவாள் அப்பெண்ணால் கணவன் ஓரளவு நன்மையுடைய வாய்ப்புகள் அதிகம். நல்ல குழந்தை பாக்யம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. குழ்ந்தைகளால் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் உண்டு.

நோய் (DISEASES) கடன் (LOAN)

இந்த ராசிக்காரர்களுக்கு அவ்வளவு எளிதில் நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு. மேலும் நோய் ஏற்பட்டாலும் எளிதில் குணமாகிவிடும் சிம்ம ராசி என்றால் உடலில் மார்பு இருதயப்பகுதியைக் குறிக்கும். மேலும் முதுகுத் தண்டுவடம் மற்றும் தசைகள் முதுகெலும்பு இவற்றில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும் காக்காவலிப்பு, மார்பில் வலி, அடிக்கடி, கிறுகிறுப்பு, மயக்கம் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. மேலும் மூட்டு, கால், கணுக்கால், பாதங்களில் பிரச்சினைகள் ஏற்படும். அடிக்கடி கோபப்படுவது உணர்ச்சிவசப்படுவது இந்தராசிக்காரர்களுக்கு கைவந்த கலையாகும். எனவே கோபத்தையும் உணர்ச்சி வசப்படுவதையும் பெருமளவில் குறைத்துக் கொள்ள வேண்டும்.

கடன் வாங்குவதற்கு இந்த ராசிக்காரர்கள் தயங்க மாட்டார்கள். அதே சமயம் கடன் கொடுப்பதற்கும் தயங்கமாட்டார்கள். கொடுத்த பணத்தை கேட்காத இவர்கள் வாங்கிய பணத்தையும் அவ்வளவு எளிதில் கொடுக்க மாட்டார்கள். இடம், வீடு, வண்டி வாகனங்கள் வாங்க கடன் வாங்குவர். குழந்தைகளின் படிப்பிச் செலவிற்காகவும் நிறைய கடன் வாங்குவார்கள். ஒரு கடனை அடைக்க மற்றொரு இடத்தில் கடன் வாங்கி பழைய கடனை அடைப்பர்.

வேலை (JOB) தொழில் (BUSINESS)

சிம்மாராசிக்கு 6வது ராசி சனியின் வீடாக வருவதாலும் 10ம் வீடாக சுக்ரன் ராசி அமைவதாலும் மத்திய மாநில அரசுகளில் வேலை பார்க்க வாய்ப்பு அமையும். மேலும் பெயர் போன கம்பெனிகளில் வேலை பார்க்க சந்தர்ப்பம் அமையும். மேலும் வேலையின் காரணமாக ஒரு சிலருக்கு வெளிநாடு செல்ல வய்ப்புகள் அமையும். சனி, சுக்ரன், வேலைக்குரிய கிரகமாக வருவதால் சனியின்படி அடிமைக்கு மற்றவர்களுக்கு கீழ் பணிபுரிய வாய்ப்புகள் அமையும். சுக்ரன் கலைக்கு காரணமான கிரகம் ஆதலால் மருந்து, கண்ணாடி, ஆடை, ஆபகரணங்கள், சினிமா, நாடகம், நடனம், நாட்டியம், போன்ற துறைகளில் ஈடுபட வழிவகுக்கும்.

மேலும் சுயதொழில் அல்லது கூட்டுத் தொழில் என்பதும் 7வது வீடாக சனி வருவதால் சனியின் ஆதிபத்தியத்திற்கு கட்டுப்பட்ட தொழில்கள் மேலும் சிறுதொழில் உற்பத்தி சார்ந்த துறைகள். சேவைத்துறைகள் போக்குவரத்து, தகவல் தொடர்புத் துறைகளில் ஈடுபட்டு தொழில் புரிய கிரகங்கள் வழி வகுக்கும்.

ஒவ்வொரு ஜாதகமும் மற்றொன்றைக் காட்டிலும் வித்தியாசமானது. ஒருவர் ஜாதகம் போல் மற்றவர்கள் ஜாதகம் அமைவதில்லை. மேலும் இந்த விஞ்ஞான யுகத்தில் ஏகப்பட்ட வேலை மற்றும் தொழில்கள் உள்ளன. அவைகளையெல்லாம் இங்கு விரிவாக குறிப்பிட முடியாமல் போனாலும் அவரவது தனிப்பட்ட ஜாதகத்தை வைத்தே படிப்பு, வேலை, தொழில் இவற்றை சரியாகக் குறிப்பிட முடியும். மேலும் வேலை, தொழில் போன்றவற்றிற்கான தசாபுத்திகளும் நடைபெற்றல் வேண்டும். இதையெல்லாம் அவரவர்களது தனிப்பட்ட ஜாதகத்தை வைத்தே முடிவு செய்ய முடியும்.

அதிர்ஷ்டக் கிழமை : புதன், வெள்ளி
அதிர்ஷ்ட எண்கள் : 5, 6
அதிர்ஷ்ட நிறங்கள் : பச்சை, வெண்மை
அதிர்ஷ்டக் கற்கள் : மரகதப் பச்சை, வைரம்


Like and Share Social Networks:

facebook abirami sekar twitter abirami sekar youtube abirami sekar abirami sekar linked in



Astrologer in chennai tanagar, best good astrologer in chennai
Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

 
ராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை
2017- ஆகஸ்ட் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள்
2017- ஜூலை மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஜூன் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
12 இலக்கினப் பொதுப் பலன்கள்
2017- மே மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஏப்ரல் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோ
2017- மார்ச் மாத ராசிபலன்கள் வீடியோ
2017-பிப்ரவரி மாத ராசிபலன்கள் வீடியோ
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோ
டிசம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
நவம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
அக்டோபர் மாத ராசிபலன்கள் வீடியோ
2016-2017 குருப்பெயர்ச்சி பலன்கள்
2016 வருட ராசிபலன்கள்
2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
லக்னப் பொதுப்பலன்கள்
ராசிகளின் பொதுப்பலன்கள்
நட்சத்திரப் பொதுப்பலன்கள்
எண்கணிதப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குருபெயர்ச்சிப் பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்


எல்லா கிழமைகளுக்குகான
நல்ல நேரங்கள்

ராசிகளின் தேவதைகள்
கிரகங்களின் தேவதைகள்
நட்சத்திரங்களின் தேவதைகள்
யோகங்களின் அதிதேவதைகள்
நட்சத்திர நாம எழுத்துக்கள்
ஒரைகள்
வாஸ்து
சந்திராஷ்டமம்
ஜோதிட கேள்வி பதில்கள்
பாவக தொடர்பான கேள்விகள்
ஜாதகத்தில் யோகங்கள்
ஜாதகத்தில் தோஷங்கள்
கரிநாட்கள் பற்றி
ஆயுள்
கல்வி
வேலை / தொழில்
திருமணம்
காதல்
குழந்தை
சொத்து
வெளிநாடு
நோய் / கடன்
வழக்கு
ருது ஜாதகம்
செவ்வாய் தோஷம் பற்றி
கோவில்கள்
ஆன்மிகம்
வழிபாடுகள்
பரிகாரங்கள்
ஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)
எப்படி இருந்த பழமொழி !!
மாவட்ட வாகனப் பதிவு எண்கள்
அவசரத் தொலைபேசி எண்கள்
இயற்கை மருத்துவம்
உங்கள் சிந்தனைக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa - Webdesign
Copyright © 2016-17 Abiramiastrology.com
http://www.hitwebcounter.com/
Counter For Wordpress