maduraiabiramisekar@gmail.com   +91 99948 11158 / +91 94436 74536
Abirami sekar, astrologer in chennai online
12 ராசிகளின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
12 லக்னத்தின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
கடக ராசி பலன்கள்

ராசிபலன்கள் பற்றிய என்னுரையை முதலில் படிக்கவும் - Click Here

ராசி மண்டலத்தில் இது 4வது ராசியாகும். ஆங்கிலத்தில் இந்த ராசியை (cancer) கேன்சர் என்று குறிப்பிடுவர். நீர்த்தத்துவ ராசிகளில் இது முதல் நீர் ராசியாகும். இது ஒரு “சரராசி” என்று ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது. மேலும் இது “இரட்டைராசி” என்றும் அழைக்கப்படுகிறது. சந்திரன் கட ராசிக்குரிய கிரகம் ஆகும். சந்திரன் ஒரு பெண் கிரகமாகும். மேலும் சந்திரன் தாயைய் குறிக்கும், அதனால்தான் சந்திரன் உலகமாதவான ஜெகன் மாதாவான பராசக்தியைக் குறிக்கும். மேலும் கடகராசி நீர்ராசியாக இருப்பதால் அதிலும் கடல் ராசியாக இருப்பதால் பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன் மஹாலெஷ்மி வசிக்கும் ராசி என்று மூலநூல்களில் குறிப்பிடப்படுகிறது.

இது ஒரு செழிப்பான “பெண்ராசி”யாகும். மேலும் இது ஒரு “மெளனராசி”யாகும். சந்திரன் நிலா என்ற நிலவு ஆவதால் இந்த நிலவு இரவில் மட்டுமே தெரியுமாதலால் இதை “இரவுராசி” என்றும் அழைப்பர். இந்த ராசியின் உருவமாக “நண்டைக்” குறிப்பிடுவர். அதனால் இதை “நண்டுராசி” என்பர். மேலும் இந்த ராசி நீர் ராசியானாலும் அதிக உஷ்ணமான நீண்ட ஏற்றத்தை உடைய ராசியாகும், மேலும் இந்த ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்யும் பொழுது அது பூமியின் வடகோணத்தில் இருக்கும். அதனால் தான் கடக ராசி “வடக்குராசி” என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த ராசியில் புனர்பூஷ நட்சத்திரத்தின் 4ம்பாதமும் பூச நட்ஷத்திரத்தின் 1,2,3,4பாதங்களும், ஆயில்ய நட்சத்திரத்தின் 1,2,3,4பாதங்களும் அடங்கியுள்ளன. ராசி மண்டலித்தில் 90 டிகிரி முதல் 120 டிகிரி வரை இந்த ராசி வியாபித்திருக்கிறது.

இந்த ராசி சந்திரன் சொந்த வீடாக இருப்பதால் இந்த ராசியில் சந்திரன் ஆட்சியாகவும் குரு பகவான் இந்த வீட்டில் உச்சமாகவும், பூமி காரகனான செவ்வாய் இந்த வீட்டில் நீசமாகவும், சூரியன் சமமாகவும், மற்ற கிரகங்கள் பகை பெற்றும் உள்ளன.

உடலமைப்பு:- STRUCTURE
இந்த ராசி நண்டு ராசியாக இருப்பதால் நண்டைப் போன்று சற்று சுமாரான உடல் மெலிதான் அகை, கால்கள் வலிமையான நகங்கள் அமையப் பெற்றவர்கள். மேலும் உடலின் மேல்பாகம் நீண்டு பெரிதாக இருக்கும். மேலும் சந்திரன் வீட்டில் இந்த ராசிக்காரர்கள் ஜனணமாவதால் நல்ல அழகான இளமையான உடலமைப்பு உடையவர்களாவும் விளங்குவார்கள். வாய் சற்று பெரியதாகவும் பற்கள் அழகாகவும் உடல் வெண்மையாகவும் கூந்தல் சுருண்டு அழகாக இருக்கும். உடல் அமைப்பைப் பொறுத்தவரை ஒரு ஒரு சிலர் சற்று குள்ளமாகவும் ஒரு சிலர் சுமாரான உயரமும் உடையவர்கள்.

குணநலன்கள் (CHARACTER) :-
சந்திரனது ராசியில் பிறந்தவர்கள் ஆனதால் நல்ல சிந்தனையும் எண்ணமும் உடையவர்கள். சந்திரன் வளர்ந்து தேயும் கிரகம் ஆகும். மாதத்தில் 15நாள் வளர்ந்து பெளர்ணமியாகவும், 15நாள் தேய்ந்து தேய்பிறையாக அமாவாசையாகவும் மாறுவதால் வாழ்க்கையில் மேடு பள்ளம் நிறைந்ததாக இருக்கும். அதே சமயம் அதீதமான ஞாபக சக்தியையும் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் வாழ்வதையும் இந்த ராசி குறிப்பிடுகிறது. மற்றவர்கள் பேசும் பேச்சுக்களை வெகு எளிதில் கிரகித்துக் கொண்டு அதற்கேற்ப தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் கெட்டிக்காரர்கள் ஆவார்கள். அடிக்கடி உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். சிலசமயங்களில் துக்கங்களையும் வெளிப்படுத்துவார்கள். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள்.

எப்பொழுதும் புகழ், செல்வம் இவற்றைத் தேடி அலைந்து கொண்டேயிருப்பர். அந்தப் புகழை அடைய எந்த ஒரு எல்லையையும் தாண்டிச் செல்லக் கூடியவர்கள். அடிக்கடி பொய் பேசியும் புறங்கூறியும் தெரிவர். அதே சமயம் எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவர். எவ்வளவுக்கெவ்வளவு கூச்ச சுபாவமுடையவர்களோ அவ்வளவுக்கவ்வளவு சில சமயங்களில் தைரியசாலிகளாகவும் விளங்குவர். அடிக்கடி உணர்ச்சி வசப்படுவர். நல்ல ஒழுக்கமும் மனதைர்யமும் உடைய இவர்கள் யாரையும் தூக்கி எறிந்து பேசுவதில் கெட்டிக்காரர்கள்.

தங்கள் காரியத்தில் மட்டுமே கண்ணும் கருத்துமாயிருப்பார்கள். தங்கள் குடும்பத்தை நேசிப்பதிலும் குறிப்பாக தாய், தந்தை தன்னுடைய குடும்பம், வீடு இவற்றை அதிகம் நேசிப்பார்கள். பெரும்பாலும் தங்களுடைய வீடு அல்லது குடும்பத்துடன் சேர்ந்தே வாழ விரும்புவார்கள். அலுவலகத்தைக் காட்டிலும் தங்களுடைய வீட்டையே பெரிதும் விரும்புவர். நல்ல ராஜதந்திரமிக்கவர்கள். யாரிடம் எப்படிப் பேசி காரியம் சாதிக்க வேண்டும் என்பதில் சாமர்த்தியசாலிகள். மற்றவர்களின் விமர்சனங்களை கண்டு பயப்படாதவர்கள்.

இந்த ராசிக்காரர்கள் கலைகளுக்குக் காரகமான சந்திரன் வீட்டில் ஜனனமாவதால் இவர்கள் கலைகளில் ஆர்வம் உடையவர்கள். கதை, கவிதை, இசை, நாட்டியம், நாடகம், சினிமா இவற்றில் அதிக ஈடுபாடு மிக்கவர்கள். கலைத்துறைகளில் ஆர்வமுடன் செயல்படுவர். தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் விருப்பம் உள்ளவர்கள். ஒப்பனைகளாலும் தங்களை முன்னிறுத்துவதிலும் எப்பொழுதும் தனித்தன்மையுடன் செயல்படுவார்கள். தங்கள் பேச்சினால் மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் உடையவர்கள். பேச்சு நக்கலும், நையாண்டியும் கலந்தே இருக்கும். நகைச்சுவையாகப் பேசுவதிலும் இரு பொருள்பட பேசுவதிலும் வல்லவர்கள். கற்பனையாகப் பேசுவதில் சாமர்த்தியசாலிகள். யானையைப் போல் எந்த ஒரு விஷயத்தையும் மறக்காமல் நினைவில் வைத்துப் பேசிவிடுவர். தங்களை எப்பொழுதும் முன்னிலைப்படுத்திப் பேசுவதையும் தங்களை வெளிக்காட்டிக் கொள்வதிலும் ஆர்வம் உள்ளவர்.

சமூக செயல்பாட்டில் ஈடுபட்டு பெயர்புகழ் பெறுவர். தனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்வதில் கெட்டிக்காரர்கள். எப்பொழுதும் சரியான தருணத்திற்க்காக காத்திருப்பார்கள். விஷயங்களைப் பேணுவதில் கெட்டிக்காரர்கள். தாயின் மீது அபார பற்றும் பாசமும் உள்ளவர்கள். ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன் பலதடவை யோசித்துச் செயல்படுவார்கள்.

சந்திர ராசியில் பிறந்தவர்களாக இருப்பதால் இந்த ராசியில் பிறந்த இவர்கள் உணர்ச்சிமிக்கவர்கள். பெரும்பாலும் தனிமை விரும்புவார்கள். எப்பொழுதும் யாருடனும் பழகிக் கொண்டேயிருத்தல் வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். பெரும்பாலும் சொத்துக்களைப் பெறுவதில் கடுமையாக உழைத்து முன்னேற வேண்டிய சூழ்நிலையேற்படும். நல்ல கலை உணர்வும் அதை வெளிப்படுத்தும் ஆற்றல் உடையவர்கள். இவர்களது வாழ்க்கையின் ஆரம்பத்தில் நிறையப் பிரச்சினைகளும் தோல்விகளும் பிற்பகுதியில் நல்ல முன்னேற்றமும் அமையும். யாரையும் அவ்வளவு எளிதில் நம்பி ஏமாறமாட்டார்கள். தனக்கென தனிப்பாதையை வகுத்துக் கொண்டு செயல்படுவார்கள். வயது ஏற ஏற நல்ல மனிவலிமையும் நல்ல பக்குவத்துடனும் விளங்குவர்.

பொருளாதாரம் (FINANCE)
பண விஷயங்களில் இவர்கள் கறாரானவர்கள் தேவையில்லாமல் செலவு செய்ய மாட்டார்கள். பணத்தை சேமித்து வைப்பதில் ஆர்வம் உள்ளவர்கள். மேலும் நேர்மையானவர்களாகவும் பண விஷயங்களில் உண்மையாகவும் நடந்து கொள்வர். எப்பொழுதும் பணப்புழக்கம் இருந்து கொண்டேயிருக்கும். சேமிக்கும் பழக்கம் அதிகம் உள்ள இவர்கள் சிறிது சிறிதாகப் பணம் சேர்ப்பதில் கெட்டிக் காரர்கள் எப்பொழுதுமே கையில் பணம் பொருள் நகைகளை இவர்கள் வைத்திருக்க விரும்புவார்கள். ஒரு சிலர் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதிலும் அதிக அளவு இடம், மனை வீடு, இவற்றில் முதலீடு செய்வதிலும் எப்பொழுதும் ஆர்வாம் உடையவர்களாக இருப்பார்கள். தேவைக்கேற்ப செலவு செய்வர். ஊதாரித்தனமாக செலவு செய்வதை விரும்ப மாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் நேர்மையாகப் பண விஷ்யங்களில் நடந்து கொள்வதால் மற்றவர்கள் இவர்களை ஏமாற்றுவதை விரும்பமாட்டார்கள்.

நோய் (DISEASE) கடன் (LOAN)
சந்திரன் மனதைக் குறிப்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு ஜாதகத்தில் சந்திரன் புதன் நல்ல நிலையில் இல்லையென்றால் இவர்களுக்கு மனோவியாதி ஏற்பட்டு விலக சந்தர்ப்பம் அமையும். ஏனெனில் எப்பொழுதும் ஏதாவது ஒன்றிற்காக கவலைப்பட்டு கொண்டேயிருப்பார்கள். மேலும் சந்திரன் மார்பை குறிப்பதாலும் சந்திரன் நிர்ராசியாக இருப்பதாலும் உடலில் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாயுக்கோளாறு அஜீரணம் காய்ச்சல், ஆஸ்த்துமா, நரம்பு சம்பந்தமான வியாதிகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உடலில் தேம்பல், கட்டிகள் இவைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். மேலும் காலில் பிரச்சினைகள் குடலில் பிரச்சினைகள், மார்பில் வலி, பித்தப்பையில் கல் போன்ற உடல் உபாதைகளில் பிரச்சினைகள் எற்பட்டு விலகும். எனவே இயவற்றில் அதிக கவனம் தேவை.

திருமணம் (MARRIAGE)
சந்திரன் என்றால் குளிர்ச்சி என்று பொருள். அதே சமயம் சந்திரன் என்றால் காதல் என்று பொருள். இந்த ராசிக்காரர்கள் காதல் விஷயங்களில் கில்லாடிகள். கணவன் மனைவி இருவரும் ஒருவர் மேல் ஒருவர் அளவற்ற அன்பைப் பொழிவார்கள். அதே மாதிரி பெண்களும் கணவன் மேல் அன்புடனும் பாசத்துடனும் விளங்குவார்கள். நல்ல துணை அமையப் பெறுவார்கள். குடும்பத்தை மகிழ்ச்சிகரமாக வைத்துக் கொள்வதில் ஆண், பெண் இருவரும் சமர்த்தானவர்கள். மனைவியை எப்பொழுதும் சந்தோஷமாக வைத்துக் கொள்வதில் பிரியம் உடையவர்கள். அடிக்கடி மனைவிக்குப் பரிசுப்பொருட்கள் வாங்கிக் கொடுத்து மகிழ்வர். மணவாழ்க்கையில் பொறுமையையும் கனிவையையும் உண்மையையும் கடைப்பிடிப்பார்கள். தங்கள் குழந்தைகளின் மேல் மிகுந்த பற்று உடையவர்கள்.

வேலை (JOB) தொழில் (BUISINESS)
இந்த ராசிக்கு 10ம் விடான தொழில் ஸ்தான வீடாக செவ்வாய் வருவதால் நெருப்பு, இரும்பு, கட்டிடம், இஞ்சினியரிங் சம்பந்தமான துறைகளிலும் மற்றும் பொறியியலிலும் வேலை பார்க்க வாய்ப்பு அமையும். மேலும் வேலைக்குரிய பாவமாக 6ம் பாவம் குறிப்பிடப்படுகிறது. இங்கு 6ம் பாவ கிரகமாக குரு வருவதால் பள்ளி, கல்லூரி, நிதி, நீதி, ஆசிரியர்கள், வங்கி, காப்பிட்டுத்துறை இவை போன்ற துறைகளில் ஈடுபட வைப்பார். அதே சமயம் 7ம் இடமான சுயதொழில் அல்லது கூட்டுத்தொழில் என்பது சனி கிரகத்தின் தன்மையைப் பொறுத்தும் அவரவது சொந்த ஜாதகத்தைப் பொறுத்தும் வேலை தொழில் அமையும். பொதுவாக வேலை தொழில் என்பது இன்று பல்கிப் பெருகி நிறைய உள்ளது. இங்கு ஜாதகத்தில் பொதுவான ஒரு சில துறைகள் மட்டுமே குறிக்கப்பட்டுள்ளது. அவரவர்களது தனிப்பட்ட ஜாதகத்தை வைத்தே வேலை தொழில் இவற்றை முடிவு செய்தல் வேண்டும்.

அதிர்ஷ்ட கிழமை : செவ்வாய், வியாழன், வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்கள் : 9, 3, 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, மஞ்சள், வெண்மை
அதிர்ஷ்ட கற்கள் : பவளம், மஞ்சள் புஷ்பராகம், வைரம்


Like and Share Social Networks:

facebook abirami sekar twitter abirami sekar youtube abirami sekar abirami sekar linked in



Astrologer in chennai tanagar, best good astrologer in chennai
Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

 
ராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை
2017- ஏப்ரல் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோ
2017- மார்ச் மாத ராசிபலன்கள் வீடியோ
2017-பிப்ரவரி மாத ராசிபலன்கள் வீடியோ
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோ
டிசம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
நவம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
அக்டோபர் மாத ராசிபலன்கள் வீடியோ
2016-2017 குருப்பெயர்ச்சி பலன்கள்
2016 வருட ராசிபலன்கள்
2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
லக்னப் பொதுப்பலன்கள்
ராசிகளின் பொதுப்பலன்கள்
நட்சத்திரப் பொதுப்பலன்கள்
எண்கணிதப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குருபெயர்ச்சிப் பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்


எல்லா கிழமைகளுக்குகான
நல்ல நேரங்கள்

ராசிகளின் தேவதைகள்
கிரகங்களின் தேவதைகள்
நட்சத்திரங்களின் தேவதைகள்
யோகங்களின் அதிதேவதைகள்
நட்சத்திர நாம எழுத்துக்கள்
ஒரைகள்
வாஸ்து
சந்திராஷ்டமம்
ஜோதிட கேள்வி பதில்கள்
பாவக தொடர்பான கேள்விகள்
ஜாதகத்தில் யோகங்கள்
ஜாதகத்தில் தோஷங்கள்
கரிநாட்கள் பற்றி
ஆயுள்
கல்வி
வேலை / தொழில்
திருமணம்
காதல்
குழந்தை
சொத்து
வெளிநாடு
நோய் / கடன்
வழக்கு
ருது ஜாதகம்
செவ்வாய் தோஷம் பற்றி
கோவில்கள்
ஆன்மிகம்
வழிபாடுகள்
பரிகாரங்கள்
ஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)
எப்படி இருந்த பழமொழி !!
மாவட்ட வாகனப் பதிவு எண்கள்
அவசரத் தொலைபேசி எண்கள்
இயற்கை மருத்துவம்
உங்கள் சிந்தனைக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa - Webdesign
Copyright © 2016-17 Abiramiastrology.com
http://www.hitwebcounter.com/
Counter For Wordpress