maduraiabiramisekar@gmail.com   +91 99948 11158 / +91 94436 74536
Abirami sekar, astrologer in chennai online
12 ராசிகளின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
12 லக்னத்தின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
மிதுன ராசி பலன்கள்

ராசிபலன்கள் பற்றிய என்னுரையை முதலில் படிக்கவும் - Click Here

வான மண்டலத்தில் 3வது ராசியாகும். இந்த ராசியை ஆங்கிலத்தில் (GEMINI) ஜெமினி என்று அழைப்பார்கள். இந்த ராசியின் அதிபதி புதன் ஆவார். இந்த ராசி பஞ்சபூத தத்துவங்களில் காற்று ராசியாகும். இது ஒற்றை ராசி என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது ஒரு உபய ராசியாகும். இது ஒரு மலட்டு ராசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ராசி புத்திக்கும் வித்தைக்கும் ஞானத்திற்கும் அதிபதியான புதன் பகவானால் ஆளப்படுகிறது. பெண்மைத்தன்மையுள்ள புத்திசாலித்தனமான கிரகம் புதன் ஆவார். ஆகும். ஆண் பெண் என்ற இரண்டு உருவ அமைப்புகளைக் கொண்ட சின்னமாக இந்த ராசி விளங்குகிரது. அதனால் இதை இரட்டையர்கள் என்று கூறுவர். மேலும் புதன் என்றால் குறிப்பாக மிதுனராசி என்றாலே ஒன்றுக்க்கு மேற்பட்ட (DUAL) என்று பொதுவாக குறிப்பிடுவர்.

ஆண் பெண் என்ற இரண்டில் ஆண் கையில் (கோதண்டம்) கதையையும் பெண் கையில் வீணையும் கொண்டது. இந்த ராசி இருகால் ராசி என்று ராசி மண்டலத்தில் அழைக்கப்படுகிறது. பஞ்சபூத தத்துவங்களில் காற்று ராசி என்றும் அழைக்கப்படுகிறது. பசுமை நிறத்திற்கு அதிபதியாக புதன் அழைக்கப்படுகிறார்.

இந்த ராசியில் மிருகசீரிஷ நட்சத்திரத்தின் 3,4 பாதங்களும் திருவாதிரை நட்சத்திரத்தின் 1,2,3,4 பாதங்களும் புனர்பூஷ நட்சத்திரத்தின் 1,2,3 பாதங்களும் ஆக மொத்தம் 9 பாதங்கள் அடங்கியுள்ளன. வாண மண்டலத்தின் 60 டிகிரி முதல் 90 டிகிரி வரை இந்த ராசி வியாபித்துள்ளது.

இந்த ராசி புதனால் ஆளப்படுவதால் புதன் இந்த ராசியில் ஆட்சியாகவும் அங்காரங்கன் என்ற செவ்வாய் இந்த ராசியில் பகையாகவும் தேவர்களுக்கெல்லாம் ஆசிரியரான குரு இந்த ராசியில் பகையாகவும் மற்ற கிரகங்கள் நட்பாகவும் விளங்குகின்றன.

உடல் அமைப்பு (STRUCTURE)
மிதுன ராசியில் பிறந்தவர்கள் சராசரி உடலமைப்பு உடையவர்கள். நல்ல அழகான கண்களும் சுருண்ட கூந்தலும் எடுப்பான மூக்கும் கொண்ட தோற்றமும் உடையவர்கள். நல்ல பருத்த தேகமும் உருண்டு திரண்ட புஜங்களும் உடையவர்கள். நலல் அழகான இளமையான தோற்றமும் உடையவர்கள். புதன் என்றால் ஜோதிட சாஸ்த்திரத்தில் இளவரசன் (PRINCE) என்று பெயர். அதனால் இந்த ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் இளமையாகவே தோற்றமுடன் விளங்குவர்.

குணநலன்கள் (CHRACTER)
மிதுன ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் ஓடியாடி உழைக்கும் இயல்புடையவர்கள், புதன் என்றாலே சுறுசுறுப்பு என்றுதான் அர்த்தம். எனவே எப்பொழுதும் சுறுசுறுப்புடன் விளங்குவர். மேலும் புதன் என்றால் அழகு அல்லது இளமை என்று இருப்பதால் எப்பொழுதும் கவலையில்லாமல் சிரித்த முகத்துடன் மற்றவர்களுடன் சகசமாய் பேசிப்பழகுவதில் வல்லவர்கள். பலதுறைகளிலும் தங்களது அறிவையையும் ஆற்றலையும் வெளிப்படுத்துவர். நல்ல நேர்மையான எண்ணம் உடையவர்கள். எப்பொழுதும் மாற்றம் என்ற ஒன்றை விரும்புவர். மனது எப்பொழுதும் அலைபாய்ந்து கொண்டேயிருக்கும். எதிலும் நிலையான ஈடுபாடு இல்லாமல் சதா தொழில் அல்லது வேலையை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள்.

புதன் புத்திக்கும் வித்தைக்கும் அதிபதியாதலால் சதாப்படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருப்பர். கதை, கவிதை, கட்டுரை, பாடல்கள், நடிப்பு, இவற்றில் நல்ல ஆர்வமும் விருப்பமும் உடையவர்கள். எப்பொழுதும் ஏதாவதொன்றை அறிந்து கொள்வதில் ஆர்வமுடையவர்கள். அடிக்கடி மாற்றத்தை விரும்புவர்களாதலால் அடிக்கடி பயணங்கள் செய்வதை விரும்புவர். தங்கள் சிந்தனைக்கேற்ப தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் ஆர்வம் உடையவர்கள். மற்றவர்களுடைய பேச்சுக்களை ஆர்வமுடன் கேட்டாலும் தனக்கு எது எனத் தோன்றுகிறதோ அதை மட்டுமே செய்வர். மற்றவர் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பது போல் தோன்றினாலும் தனக்கு எனத் தோன்றும் எண்ணப்படியே செயல்படுவர். சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதில் கெட்டிக்காரர்கள்.

எப்பொழுதும் ஏதாவது ஒரு காரியத்தில் ஈடுபட்டு தங்களை சுறுசுறுப்பாக்கிக் கொள்வார்கள். ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்களை செய்வதில் ஆர்வம் உடையவர். பழையவற்றை வெறுத்துப் புதிய விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்துவர். மற்றவர்களுக்காக அதிகம் பாடுபடுவார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளில் ஈடுபட்டு எதிலும் முழுமை அடையமாட்டார்கள். மிகவும் உணர்ச்சி வசப்படுவார்கள். நல்ல பந்த பாசங்களுக்காக ஏங்குவார்கள். அதற்காக நிறையச் செலவு செய்வார்கள். எப்பொழுதுமே வேகம் என்ற சொல்லே இவர்களுக்குத் தாராக மந்திரம் ஆகும். அதே சமயம் உழைப்பு என்று எப்பொழுதும் உழைத்துக் கொண்டும் ஏதாவது ஒன்றை கற்றுக் கொண்டும் வாழ்க்கையில் வேகமாக முன்னேறத் துடிப்பார்கள்.

புதன் மனதை ஆளும் கிரகமாதலால் ஒரு சிந்தனை செயல் இவற்றிலிருந்து மற்றொரு எண்ணம் செயலுக்கு மாறிக்கொண்டே இருப்பார்கள். நல்ல நகைச்சுவை உணர்வு உடையவர்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடனும் சீரிய சிந்தனையுடனும் விளங்குவர்.

எப்பொழுதுமே சதா சிந்தித்துக் கொண்டேயிருப்பதால் அடிக்கடி தடுமாற்றம் அடைவர். தங்களது கொள்கைகளை தாங்களே மீறும் எண்ணம் உடையவர்கள்.

நல்ல எண்ணம் உடையவர்களாதலால் யார் எது சொன்னாலும் அதை நம்பி செயல்பட்டு இறுதியில் வேதனைகளை அடைவர். இவர்களை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏமாற்றுவர். எழுதுவதில் கலைத்துறையில் ஆர்வமும் திறமையும் உடையவர்கள். எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் அதை வெற்றிகரமாக முடிப்பதில் வல்லவராவார். இவர்கள் ஈடுபடும் விஷயத்தில் யாரும் குறுக்கிடாமல் இருந்தால் எடுத்த காரியத்தை இனிதே முடிக்கும் திறன் உள்ளவர். அநேக நண்பர்களைப் பெற்றாலும் அவர்கள் இவர்களுக்கு துரோகம் மட்டுமே இழைப்பர். இயற்க்கையை அதிகம் விரும்புவர்.

பொருளாதாரம் (FINANCE)
நல்ல உழைப்பாளிகளான இவர்கள் நல்ல சம்பாத்யம் உடையவர்கள். எப்பொழுதும் பொருள்வரத்து இருந்தாலும் அதை தேவையில்லாமல் அனாவசியமாகச் செலவு செய்வர். எவ்வளவு சம்பாதித்தாலும் இவர்கள் கையில் பணம் பொருள் பெரிய அளவில் தங்காது. ஒன்று எதிலாவது முதலீடு செய்வர். இல்லையேல் தேவையில்லாமல் விரையம் செய்வர். பணத்தை சேமித்து வைத்தால் மட்டுமே இவர்கள் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க முடியும். இல்லையேல் வரவுக்கு மேல் பணத்தை செலவு செய்து கொண்டேயிருப்பார்கள். இவர்கள் நிலையான சொத்துக்குரிய முதலீடு செய்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும். கையில் பணம் இருந்தால் செலவுகள் இருந்து கொண்டே இருக்கும்.

நோய் (DIASES) கடன் (LOAN)
இந்த ராசியில் பிறந்த இவர்கள் எவ்வளவு சுறுசுறுப்பானவர்களாக இருந்தாலும் அதிகமாக கவலைப்படுவார்கள். தேவையில்லாததர்க்கெல்லாம் வருத்தப்பட்டு உடலையும் மனதையும் கெடுத்துக் கொள்வர். புதன் நரம்புக்குரிய கிரகமாதலால் நரம்பு சம்பந்தமான வியாதிகள் வராமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். சளித்தொல்லைகள், ஜலதோஷம், நுரையீரல் சம்பந்தமான நோய்கள், முதுகு, கழுத்து, தோள்பட்டை இவற்றில் பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும், தோல், சிறுநீர் சம்பந்தமான பிரச்சினைகள், மூலநோய், சருமநோய், போன்ற உடல் உறுப்புகளில் பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். ரத்தக் கொதிப்பு, உடல்பருமன் போன்ற, விஷயங்களில் தனிக்கவனம் செலுத்தல் வேண்டும்.

அடிக்கடி கடன் வாங்குவார்கள். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்குவார்கள். கடனை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இவர்கள் கேட்கும் பொழுது கடன் கொடுக்க நிறைய நபர்கள் முன்வருவார்கள். எனவே கடன் வாங்குவதை தவிர்த்தல் வேண்டும். அடிக்கடி நகை, பொருள்களை அடகு வைத்துத் திருப்புவார்கள்.

திருமணம் (MARRIAGE)
இந்த ராசிக்கு 7வது குரு வீடாக தனுசு ராசி வருவதால் நல்ல அழகான கணவன், மனைவி அமைவார்கள். வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். மேலும் அழகான கணவன் அல்லது மனைவி வருவது இந்த ராசிக்காரர்களுக்கு நல்லதல்ல. காரணம் குரு ஆவார். குரு அழகு என்றாலும் அது ஒரு பிரிக்க வைப்பதில் முக்கியத்துவம் உள்ள கிரகமாகும். ஆனால் இவர்கள் எப்பொழுதும் அழகு மற்றும் இளமையை எப்பொழுதும் விரும்புவார்கள். காதல் வயப்படுவதில் ஆர்வம் உள்ளவர்கள். காதல் திருமணத்தில் ஈடுபாடு உள்ளவர்கள்.

தங்கள் மனைவி மட்டும் குழந்தைகளை அதிகம் நேசிப்பர். அவர்கள் மேல் நல்ல அன்பு மற்றும் பிரியமும் உடையவர்கள். அதே சமயம் பெண்களால் தங்கள் கணவன் மேல் பற்றும் பாசமும் உடையவர்கள். மிதுன ராசிப் பெண்கள் வேலைப் பார்த்தால் வேலையை விடவேண்டியதில்லை. ஏனெனில் ஆரம்பத்தில் மனைவி மேல் இருக்கும் அன்பு காலப்போக்கில் சிறிதுசிறிதாக குறைய ஆரம்பிக்கும். ஆனால் மிதுனராசிப் பெண்கள் கணவன் மேல் நல்ல மதிப்பும் மரியாதையும் பற்றும் உடையவர்கள். எல்லோரிடத்திலும் சகஜமாகப் பழகுவார்களாதலால் எப்பொழுதும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

வேலை (JOB)
மிதுன ராசிக்காரர்களுக்கு 10ம் பாவமாக மீன ராசி வருவதால் அதன் அதிபதி குருவாக வருவதால் குருபகவான் சம்பந்தமான வேலை ஓரளவு அமைய வாய்ப்புண்டு. மேலும் வேலைக்குக் காரணமான 6ம் பாவமாக செவ்வாய் வீடு வருவதால் செவ்வாய் சம்பந்தமான வேலை அமைந்தால் நன்மையாக இருக்கும். இல்லையேல் சற்று போராட்டகரமாக வாழ்க்கை அமையும். வேலை மற்றும் தொழில் இவற்றையெல்லாம் அவரவர் தனிப்பட்ட ஜாதகத்தை வைத்தும் நடப்பு தசாபுத்தியகளை வைத்தும் மட்டுமே முடிவு செய்தல் வேண்டும்.

அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், வியாழன்
அதிர்ஷ்ட எண்கள் : 6, 3
அதிர்ஷ்ட நிறங்கள் : சிவப்பு, மஞ்சள்
அதிர்ஷ்டக் கற்கள் : பவளம், மஞ்சள், புஷ்பராகம் 1


Like and Share Social Networks:

facebook abirami sekar twitter abirami sekar youtube abirami sekar abirami sekar linked in



Astrologer in chennai tanagar, best good astrologer in chennai
Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

 
ராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை
2017- மே மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஏப்ரல் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோ
2017- மார்ச் மாத ராசிபலன்கள் வீடியோ
2017-பிப்ரவரி மாத ராசிபலன்கள் வீடியோ
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோ
டிசம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
நவம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
அக்டோபர் மாத ராசிபலன்கள் வீடியோ
2016-2017 குருப்பெயர்ச்சி பலன்கள்
2016 வருட ராசிபலன்கள்
2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
லக்னப் பொதுப்பலன்கள்
ராசிகளின் பொதுப்பலன்கள்
நட்சத்திரப் பொதுப்பலன்கள்
எண்கணிதப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குருபெயர்ச்சிப் பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்


எல்லா கிழமைகளுக்குகான
நல்ல நேரங்கள்

ராசிகளின் தேவதைகள்
கிரகங்களின் தேவதைகள்
நட்சத்திரங்களின் தேவதைகள்
யோகங்களின் அதிதேவதைகள்
நட்சத்திர நாம எழுத்துக்கள்
ஒரைகள்
வாஸ்து
சந்திராஷ்டமம்
ஜோதிட கேள்வி பதில்கள்
பாவக தொடர்பான கேள்விகள்
ஜாதகத்தில் யோகங்கள்
ஜாதகத்தில் தோஷங்கள்
கரிநாட்கள் பற்றி
ஆயுள்
கல்வி
வேலை / தொழில்
திருமணம்
காதல்
குழந்தை
சொத்து
வெளிநாடு
நோய் / கடன்
வழக்கு
ருது ஜாதகம்
செவ்வாய் தோஷம் பற்றி
கோவில்கள்
ஆன்மிகம்
வழிபாடுகள்
பரிகாரங்கள்
ஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)
எப்படி இருந்த பழமொழி !!
மாவட்ட வாகனப் பதிவு எண்கள்
அவசரத் தொலைபேசி எண்கள்
இயற்கை மருத்துவம்
உங்கள் சிந்தனைக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa - Webdesign
Copyright © 2016-17 Abiramiastrology.com
http://www.hitwebcounter.com/
Counter For Wordpress