maduraiabiramisekar@gmail.com   +91 99948 11158 / +91 94436 74536
Abirami sekar, astrologer in chennai online
12 ராசிகளின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
12 லக்னத்தின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
ரிஷப ராசி பலன்கள்

ராசிபலன்கள் பற்றிய என்னுரையை முதலில் படிக்கவும் - Click Here

ராசி மண்டலத்தில் இந்த ராசி இரண்டாவது ஆகும். இந்த ராசியை ஆங்கிலத்தில் (TARUS) என்று குறிப்பிடுவர். இந்த ராசியின் அதிபதி சுக்ரன் ஆவார். சுக்ரன் நவக்கிரகங்களில் பெண் கிரகம் ஆகும். அதனால் இந்த ராசியை பெண் ராசி என்றும் அழைப்பர். சுக்ரன் பெண் கிரகமானாலும் இந்த ராசியின் சின்னமாக “காளைமாடு” குறிக்கப்படுகிறது. அதனால் இந்த ராசியை ஒரு “மிருக ராசி” என்றும் அழைப்பர். இது பெண் தன்மையுள்ள ராசியாகும். பெண் தன்மையுள்ளதால் இதை “ஈரமான ராசி” என்றும் குறிப்பிடுவர். இந்த ராசி “காளைமாட்டு” உருவத்துக்கு ஒப்பிடுவதால் எப்பொழுதும் சீறிக் கொண்டும் முன்னேறிக் கொண்டும் செயலாற்றும் ராசியாகும்.

பஞ்சபூத தத்துவங்களில் “நில” (LAND) ராசியாகும். கிழக்கு திசை இந்த ராசிக்கு உகந்ததாகக் குறிக்கப்படுகிறது. மேலும் வானமண்டலத்தில் 30 டிகிரி முதல் 60 டிகிரி வரை வியாபித்துள்ளது. மேலும் இந்த ராசி ஸ்திர ராசி என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த ராசியில் கார்த்திகை நட்சத்திரத்தின் 2,3,4 பாதங்கள் ரோகினி நட்சத்திரத்தின் 4 பாதங்களும் மிருகசீரிஷ நட்சத்திரத்தின் 1,2 பாதங்களும் அடங்கியுள்ளன.

இந்த ராசி சுக்ரன் வீடாக வருவதால் சுக்ரன் இந்த ராசியில் ஆட்சியாகவும் சந்திரன் இந்த ராசியில் உச்சமாகவும் தேவகுருவான குரு பகவான் சுக்ரனுடைய இந்த வீட்டில் இருந்தால் பகையாகவும் சூரியன் இந்த வீட்டில் பகையாகவும் மற்ற கிரகங்கள் சமமாகவும் குறிப்பிட்டாலும் ஒரு சில மூல நூல்களில் ராகு, கேது இந்த வீட்டில் பகை என்றும் குறிப்பிடுவார்கள்.

உடல் அமைப்பு (BODY STRUCTURE)
சுக்ரன் வீட்டில் பிறந்த இந்த ராசிக்காரர்கள் நல்ல அழகான கவர்ச்சிகரமான உடல் தோற்றத்துடனும் கழுத்து பருத்தும் அகலமான கண்களும் உடையவர்கள். நல்ல சுருட்டையான கூந்தல் உடையவர்கள். கன்னங்கள் உருண்டு திரண்டு அழகுடன் விளங்குவார்கள். மிருதுவான உடல்வாகு உடையவர்கள். நல்ல பருத்த உடலும் தொடையும் அமையப் பெற்றவர்கள். எக்காலங்களிலும் ஒரே மாதிரியான உடல் அமைப்பு உடையவர்கள் வசீகரமான உடல் கவர்ச்சி உடையவர்கள்.

குணநலன்கள் (CHARACTOR)
ராசிக்கட்டத்தில் இந்த ராசி முதல் பெண் ராசியாகும். மேலும் இது ஒரு ஸ்திரத்தன்மை கொண்ட ராசியாகும். இந்த ராசியில் பிறந்தவர்கள் மிகவும் பொறுமைசாலிகள். யார் கோபமூட்டினாலும் பெரும்பாலும் அதை பொறுமையுடன் சகித்துக் கொள்வார்கள். எதையும் தீர்மானமாகவும் ஆணித்தரமாகவும் நம்புவார்கள். நல்ல நம்பிக்கைகளையும் எதையும் நன்கு ஆராய்ந்து புத்திசாலித் தனத்துடன் செயலாற்றுவதில் சாமர்த்தர்கள். எந்த ஒரு சந்தர்ப்பத்திற்காகவும் காத்திருப்பர்.

இந்த ராசியில் பிறந்தவர்கள் எதிலும் நேர்மையாக வாழவேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். அதே சமயம் எப்பொழுதும் தூய்மையாகவும் உண்மையாகவும் இயல்பாகவும் வாழவேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். மேலும் பணம் சம்பாதிப்பதிலும் ஆர்வம் உடையவர்கள். பணம் நகைகள் பற்றிய ஆர்வம் எப்பொழுதும் இருந்து கொண்டேயிருக்கும் பத்திரங்கள், நகைகள் இவைகளில் ஆர்வமும் இவைகளில் முதலீடு செய்வதிலும் ஆர்வம் உள்ளவர்கள், எப்பொழுதும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க அதிக முக்யத்துவம் கொடுப்பார்கள்.

விண்வெளிப்பாதையில் 2வது ராசியாக இந்த ராசி வருவதால் நல்ல அறுசுவை உண்பதில் ஆர்வமும் மகிழ்ச்சியும் அடைவார்கள். மேலும் எப்பொழுதும் சிரித்த முகத்துடனும் புன்முறுவலுடனும் விளங்குவர். தங்களது கவலைகளை எல்லாம் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். நல்ல ராஜதந்திரம் உடையவர்கள். இகபோக வாழ்க்கையை நன்கு அனுபவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பர். இவர்களுடைய ஆலோசனைகள் எப்பொழுதும் வலுவாக இருக்கும். இவர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பதால் இவர்களை நம்பி ஒரு வேலையைக் கொடுப்பதால் அதனால் நன்மையேற்படுமேயின்றி கெடுபலன்கள் இராது. நல்ல ராஜந்தந்திரம் மிக்க இவர்கள் பொதுமக்களிடமோ அல்லது சமூகத்தில் மற்றவர்களிடம் பழகும் பொழுதோ மிக மென்மையான போக்கை கடைபிடிப்பார்கள்.

இந்த ராசியை அகர குரு சுக்ரபகவான் ஆள்வதால் இசை, நாட்டியம், சினிமா, டி.வி. இவற்றில் அதிக ஆர்வமும் வேட்கையும் உடையவர்கள். நல்ல பேச்சாற்றல் உடைய இவர்கள் நல்ல கவித்துவமாக பேசவும் அதற்கேற்ப தங்கள் முகபாவங்களை கூட்டிக் குறைத்தும் வசீகரமாகப் பேசி மற்றவர்களின் அன்புக்கும் பிரியத்திற்க்கும் உடையவர்களாக விளங்குவார்கள். இவர்களுக்கு இயற்கையாகவே பொன், பொருள், ஆடை, ஆபரணச் சேர்க்கை அமையும். குறிப்பாக விலையுயர்ந்த நகைகள் அணிவதில் ஆர்வம் உடையவர்கள்.

பொருளாதாரம் (FINANCE)
ரிஷப ராசிக்கு அதிபதி சுக்ரன் ஆவார். சுக்ரன் “மஹாலெட்சுமி” ஆட்சி செய்யும் கிரகம் ஆகும். அதனால் தான் சுக்ரன் என்று குறிப்பிட்டாலே “ஸ்ரீரங்கநாதர்” அல்லது மஹாலெஷ்மி என்று அர்த்தம். பெருமாளுடன் பிறாட்டியார் ஸ்ரீ மஹாலெஷ்மி உடனிருந்து வாசம் செய்வதால் இவர்களுக்குப் பெரும்பாலும் பணத்துக்கு பஞ்சம் என்பது இராது. ஒருவேளை பணத் தட்டுப்பாடு இருந்தாலும் எப்பொழுதும் யாருடைய பணத்தையாவது இவர்கள் செலவழித்துக் கொண்டு இருப்பார்கள். நல்ல நிலபுலன்கள், தோட்டம், விவசாயம், ஆடு, மாடுகள், நல்ல வண்டி வாகனங்கள் இவற்றை அளிப்பதில் முதன்மையாக விளங்குவார்கள்.

மற்றவர்களுடைய சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்கள் போல் தோன்றினாலும் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்வதில் செயல்படுத்துவதில் ஆர்வம் உடையவர். தாங்கள் ஒரு தடவை எடுத்த முடிவை தாங்களே மாற்றிக் கொள்வதில் ஆர்வம் இல்லாதவர்கள். எத்தனைபேர் எதிர்த்தாலும் தங்களுடைய கருத்துக்களையும் எண்ணங்களையும் செயலாக்குவதில் மிகுந்த ஆர்வம் உடையவர்கள் சிந்தித்து செயல்படுத்துவதில் சாமர்த்தியசாலிகள்.

சுக்ரன் ஒரு பெண் கிரகமாக இருப்பதால் இந்த ராசியில் பிறந்த ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். காதல் விஷயங்களில் மன ஈடுபாடு வாய்ப்புகள் அதிகம் உண்டு. பெண்கள் பால் அதிக ஈடுபாடும் அதனால் நன்மைகளும் ஒரு சில ஏற்படலாம். இந்த ராசி கெட்டுப் போயிருந்தால் எல்லாப் பலன்களும் தலைகீழாக நடந்தேறும். பெண்களால் அசிங்கம் அவமானம் வேதனை துன்பம், துயரம், இவற்றை அடைய நேரிடும். எனவே எப்பொழுதும் இந்த ரிஷப ராசிக்காரர்கள் பெண்கள் விஷயத்தில் அதிக கவனம் தேவை.

இந்த ராசிக்காரர்கள் பணத்தை கஷ்டப்பட்டு சம்பாதித்து அதை சேமிப்பதில் தான் ஆர்வமுடையவராக இருப்பார்கள். பெரும்பாலும் மனதார செலவு செய்ய விரும்ப மாட்டார்கள். தங்களை அழகுபடுத்திக் கொள்வதற்கும். நல்ல ஆடை அணிகலன்களை அணிவதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். மற்றவர்களை காட்டிலும் தனித்துத் தெரியவேண்டும் என்பதற்காக தங்கள் அழகை அதிகரிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வர்.

நோய் (DISEASE) கடன் (LOAN)
வானமண்டலத்தின் 2வது ராசியில் இந்த ராசிக்காரர்கள் ஜனனமாவதால் இவர்களுக்கு கண், மூக்கு, தொண்டை, வாய், போன்ற, உடல் உறுப்புகளில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கண்ணில் பிரச்சினை கன்னத்தில் மறு அல்லது மச்சம் இவைகள் ஏற்பட்டு விலகும். மேல்வாய் கழுத்து போன்ற பகுதிகளில் அதிக அளவு பாதிப்புகள் ஏற்படும். மேலும் சிறுநீரக கோளாறுகள் சிறுநீரகக் கல் அடைப்பு, சிறுநீரகத்தில் சதை அடைப்பு போன்ற நோய்கள் ஏற்பட்டு விலகும். மேலும் பாலியல் வியாதிகள், தொற்றுவியாதிகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே உடல்நலத்தில் அதிக கவனம் தேவை மேலும் கடன்வாங்குவதிலும் கடன் கொடுப்பதிலும் எவ்வளவுக்கெவ்வளவு பெண்களால் ஆதாயமுண்டோ அவ்வளவுக்கவ்வளவு பிரச்சினைகளும் உண்டு. குறிப்பாக ஜாமின் கையெழுத்துப் போடுவதில் அதிகக் கவனம் தேவை.

திருமணம் (MARRIAGE)
மணவாழ்க்கையைப் பொறுத்தவரை இந்த ராசிக்கு 7வது வீடு செவ்வாயாக வருவதால் மணவாழ்வு சற்று சுமாராகத்தான் இருக்கும். ஆண் பெண் இருபாலருக்கும் மணவாழ்வில் ஒரு திருப்தியற்ற நிலையே காணப்படும். இருப்பினும் நன்கு படித்த வேலைபார்க்கும் ஆண்பெண் கணவன் மனைவியாக வர வாய்ப்புகள் உண்டு. அதே சமயம் அவர்கள் தைரியமானவர்களாகவும் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உடையவர்களாகவும் விளங்குவர்.

வேலை (JOB)
இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு 10ம் அதிபதி தொழில் ஸ்தானதிபதியாக சனி வருவதால் இரும்பு சம்பந்தமான தொழில்கள் மற்றும் பல தொழில்களிலும் ஈடுபட வாய்ப்புண்டு. எப்படிப்பட்ட வேலை அல்லது தொழில் என்பதைப் பற்றியெல்லாம் விரிவாகப் பார்க்க வேண்டுமானால் அந்தந்த ஜாதகத்தை வைத்துத்தான் முடிவு செய்ய முடியும்.

அதிர்ஷ்ட கிழமைகள் : புதன், வெள்ளி, சனி
அதிர்ஷ்ட எண்கள் : 6,5,8,
அதிர்ஷ்ட நிறங்கள் : வெண்மை, பச்சை, கருப்பு
அதிர்ஷ்டக் கற்கள் : வைரம், மரகதப்பச்சை, கருநீலக்கல்


Like and Share Social Networks:

facebook abirami sekar twitter abirami sekar youtube abirami sekar abirami sekar linked in



Astrologer in chennai tanagar, best good astrologer in chennai
Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

 
ராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை
2017- ஏப்ரல் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோ
2017- மார்ச் மாத ராசிபலன்கள் வீடியோ
2017-பிப்ரவரி மாத ராசிபலன்கள் வீடியோ
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோ
டிசம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
நவம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
அக்டோபர் மாத ராசிபலன்கள் வீடியோ
2016-2017 குருப்பெயர்ச்சி பலன்கள்
2016 வருட ராசிபலன்கள்
2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
லக்னப் பொதுப்பலன்கள்
ராசிகளின் பொதுப்பலன்கள்
நட்சத்திரப் பொதுப்பலன்கள்
எண்கணிதப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குருபெயர்ச்சிப் பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்


எல்லா கிழமைகளுக்குகான
நல்ல நேரங்கள்

ராசிகளின் தேவதைகள்
கிரகங்களின் தேவதைகள்
நட்சத்திரங்களின் தேவதைகள்
யோகங்களின் அதிதேவதைகள்
நட்சத்திர நாம எழுத்துக்கள்
ஒரைகள்
வாஸ்து
சந்திராஷ்டமம்
ஜோதிட கேள்வி பதில்கள்
பாவக தொடர்பான கேள்விகள்
ஜாதகத்தில் யோகங்கள்
ஜாதகத்தில் தோஷங்கள்
கரிநாட்கள் பற்றி
ஆயுள்
கல்வி
வேலை / தொழில்
திருமணம்
காதல்
குழந்தை
சொத்து
வெளிநாடு
நோய் / கடன்
வழக்கு
ருது ஜாதகம்
செவ்வாய் தோஷம் பற்றி
கோவில்கள்
ஆன்மிகம்
வழிபாடுகள்
பரிகாரங்கள்
ஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)
எப்படி இருந்த பழமொழி !!
மாவட்ட வாகனப் பதிவு எண்கள்
அவசரத் தொலைபேசி எண்கள்
இயற்கை மருத்துவம்
உங்கள் சிந்தனைக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa - Webdesign
Copyright © 2016-17 Abiramiastrology.com
http://www.hitwebcounter.com/
Counter For Wordpress