maduraiabiramisekar@gmail.com   +91 99948 11158 / +91 94436 74536
Abirami sekar, astrologer in chennai online
12 ராசிகளின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
12 லக்னத்தின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
மேஷ ராசி பலன்கள்

ராசிபலன்கள் பற்றிய என்னுரையை முதலில் படிக்கவும் - Click Here

வானமண்டலத்தில் முதன்மையானது மேஷ ராசியாகும். மொத்தமுள்ள 12 இராசிகளில் முதலாவது இராசி மேஷமாகும். இந்த இராசியை ஆங்கிலத்தில் “ஏரீஸ்” (Aries) எனக் குறிப்பிடுவர். இந்த மேஷ இராசியின் அதிபதி செவ்வாய் ஆவார். செவ்வாய் ஒரு நெருப்பு கிரகம் ஆதலால், இந்த இராசியையும் நெருப்பு இராசி என அழைக்கிறோம். பஞ்ச பூத தத்துவங்களில் இது நெருப்பைக் குறிக்கிறது. அதனால் தான் இந்த இராசி இயல்பாகவே அதிக நெருப்பின் தன்மையையும், உஷ்ணத்தையும் தன்னுள் அடக்கி உள்ளது. அதனால்தான் இது பகல், இரவை சமமாகக் கொண்ட இராசியாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த இராசியின் அதிபதியான செவ்வாய், நவகிரகங்களில் ஆண் கிரகமானதால், இந்த இராசி ஆண் இராசி என அழைக்கப்படுகிறது. இந்த இராசியின் சின்னமாக “செம்மறி ஆடு” குறிக்கப்படுகிறது. அதனால் இது ஒரு மிருக குணமுடைய இராசி என்றும், ஒரு நேர்மையான இராசி என்றும் அழைக்கப்படுகிறது. அதேசமயம், இந்த இராசியைக் குறுகிய இராசி என்றும் ஏற்றமுடைய இராசி என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த இராசி வான்மண்டலத்தின் முதல் இராசியாக வருவதால் 27 நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரமான அசுவனி நட்சத்திரங்களின் 4 பாதங்களும், பரணி நட்சத்திரங்களின் 4 பாதங்களும் கார்த்திகை நட்சத்திரத்தின் ஒரு பாதமும் ஆக மொத்தம் 9 பாதங்களைத் தன்னுள் கொண்டு ஆட்சி செலுத்துகிறது. திசைகளில் “தெற்கு” திசையை ஆள்கிறது.
இந்த இராசியில் முதன்மையானதும் தந்தைக்குக் காரகமானதும், நம் கண்ணுக்குத் தெளிவாகத் தெரியும்படியான, ஒளிக் கிரகமான சூரியன் உச்சமடைகிறார். அதேசமயம் சூரியனின் மைந்தனான ஆயுள் மற்றும் தொழிலுக்குக்குக் காரகரான சனி பகவான் நீசமடைகிறார். மேஷ இராசி செவ்வாய்க்கு சொந்த வீடாக அமைவதால், இங்கு ஆட்சியாகவும் மற்ற கிரகங்கள் நட்பாகவும் ஆள்கிறார்கள்.

உடல் அமைப்பு (BODY STRUCTURE)

இந்த இராசியில் பிறந்தவர்கள் நல்ல தோற்றமும் கட்டுமஸ்தான உருவ அமைப்பும் உடையவர்கள். நீண்ட கழுத்தையும், அழகிய முகத்தையும் உடையவர்களாக விளங்குவார்கள். கருமை நிறக் கண்களும், கூர்மையான பார்வையும் உடையவர்கள். முகத்தில் எப்போதும் ஒரு தேஜஸ் இருந்து கொண்டே இருக்கும்.

குணநலன்கள் (CHARACTER)

செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆதலால் எப்பொழுதும் சுறுசுறுப்புடனும், ஊக்கத்துடனும் விளங்குவார்கள். தைரியமானவர்கள். அவசரப் புத்தியுடன் செயல்படுவார்கள். சற்று ஆசைகள் அதிகமாக இருக்கும். எதிலும் முதன்மையாக இருக்கவே விரும்புவர். மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவார்களேயன்றி, மற்றவர்களின் ஆலோசனைகளைப் பெற விரும்ப மாட்டார்கள். தங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதன்படியே செயல்படுவர். தன்னம்பிக்கை உள்ள இவர்கள், தங்களுக்குப் பிடிக்காத ஒன்றை, பிடிக்காத போது மாற்றிக் கொள்வர். மேலும், நெருப்பு இராசியில் பிறந்தவர்கள் ஆதலால், இவர்கள் மனம் எப்பொழுதும் ஏதாவது ஒன்றைச் சிந்தித்துக் கொண்டே இருக்கும். அதை உடனடியாக நிறைவேற்ற ஆசைப்படுவர்.
இந்த இராசியின் சின்னம் செம்மறி ஆடு என்பதால், சற்று போர்குணம் நிறைந்து காணப்படுவர். ஆடு எப்படி தலையைத் தூக்கி முட்டி அதன் வேகத்தைக் காட்டுமோ அதே மாதிரி, இவர்கள் தலையை தூக்கி அல்லது தலையை ஆட்டிப் பேசுவதிலும் அல்லது தலையைச் சாய்த்துப் பேசி தங்களை முன்னிலைப்படுத்துவதிலும் சிறந்து விளங்குவார்கள். எந்த ஒரு அவசர சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயங்கமாட்டார்கள். தங்களது தனிப்பட்ட விருப்பத்தை பூர்த்தி செய்வதற்கு எந்த ஒரு எல்லையையும் தாண்டி அதை நிறைவேற்றுவதில் ஆர்வம் உடையவர்கள். மற்றவர்களை அடக்கியாளுவதிலும் அவர்கள் மூலம் தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்வதிலும் ஆர்வம் உள்ளவர்கள்.

பொருளாதாரம் (FINANCE)

மேஷ இராசியில் பிறந்தவர்கள் பொருளாதாரத்தில் ஓரளவு சிறப்புடன் விளங்குவர். இந்த இராசிக்கு 2 வது இராசி ரிஷப இராசி ஆகும். இந்த ரிஷப இராசி என்பது ஒரு பொக்கிஷ இராசியாகும். இது கையில் இருக்கும் பணம், நகைகள், பத்திரங்கள் இவற்றைக் குறிப்பிடுவதால் எப்பொழுதும் மேஷ இராசிக்கு 2 வது இராசியாக ரிஷபராசி வருவதால் இந்த இராசிகாரர்களுக்குப் பொருளாதாரம் உயர்நிலையில் இருந்து கொண்டே இருக்கும். வரவுக்கு மேல் செலவுகள் இருந்தாலும் யாருடைய பணமாவது கையில் புரண்டு கொண்டே இருக்கும்.

நோய், கடன் (DISEASE LOAN)

மேஷ இராசியில் பிறந்தவர்கள் செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆதலால், இவர்களுக்கு இயற்கையாகவே உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரித்துக் காணப்படும். அதேசமயம் செவ்வாய் ஆப்ரேஷன் மற்றும் விபத்துக்குக் காரணமான கிரகம் ஆதலால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டுக் காயங்கள் ஏற்பட வாய்புக்கள் அதிகம். எனவே, எதிலும் அதிக கவனமுடன் இருப்பது அவசியமாகும். இந்த இராசியில் பிறந்தவர்கள் விளையாட்டு, விருந்து, கேளிக்கைகளில் அதிக ஈடுபாடு உள்ளவர்கள்.
வான்மண்டலத்தில் முதல் இராசியில் பிறந்த இவர்களுக்கு 6 வது இராசி கன்னியாகும். 6 ஆம் இடம் என்பது வேலை, நோய், கடன், எதிரிகள் இவற்றைக் குறிப்பிடுவதால், எதிரிகள் விஷயத்தில் அதிக கவனம் தேவை. மேலும், உடல் ஆரோக்கியத்திலும் மிகுந்த கவனமுடன் இருத்தல் வேண்டும். தலைவலி, அடிவயிறு, ஜீரண உறுப்புகளில் பிரச்சனை, மூளை, நரம்பு சம்பந்தமான நோய்கள், முதுகுத் தண்டுவடத்தில் வலி, தூக்கமில்லாமை, காய்ச்சல், வாந்தி, ரத்தக் குழாய்களில் அடிக்கடி பாதிப்பு என இதுபோன்ற நோய்கள் ஏற்பட்டு விலகும்.
இது போன்ற பிரச்சனைகள் பற்றி ஆராயுங்கால், இராசி பலம் பெற்று இருந்தால் நோயின் தன்மை குறைவாகவும், பலமற்று இருந்தால் நோயின் தன்மை அதிகமாகவும் இருக்கும் எனக் கொள்ள வேண்டும். ஒரு இராசி பலமாக, நன்றாக உள்ளதா – அல்லது பலம் குறைந்து பாதிப்படைந்து உள்ளதா – என்பதை ஒவ்வொரு ஜாதகத்தையும் ஆராய்ந்து, கூர்ந்து பரிசீலித்தால் மட்டுமே சாத்தியமாகும்.

திருமணம் (MARRIAGE)

நல்ல தாய், தந்தையரைப் பெற்று விளங்குவார்கள். இவர்களது இராசிக்கு 4 வது இராசி, தாய் ஸ்தானமான, சந்திரனின், கடக இராசியாக அமைவதால், தாயின் அன்பும், அரவணைப்பும் அதிகம் இருக்கும். தந்தையால் மிகுந்த நன்மை அடைவார்கள். தந்தையின் வழிகாட்டுதலின்படி நல்ல வாழ்க்கை அமையும்.
நல்ல மணவாழ்க்கை அமைய வாய்ப்புகள் ஏற்படும். கணவனுக்கு ஏற்ற மனைவியாகவும், மனைவிக்கு ஏற்ற நல்ல கணவனாகவும் வாழ முற்படுவார்கள். குடும்ப வாழ்வு ஒரே சீராக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ்வர். விரும்பிய வாழ்வு அமைய வாய்ப்புகள் உண்டு. நல்ல குழந்தைச் செல்வங்கள் ஏற்பட வாய்ப்புகள் ஏற்படும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். குழந்தைகளால் நன்மைகளும் அவர்களால் பிரச்சனைகளும் ஏற்படும்.

வேலை (JOB)

மேஷ இராசியில் பிறந்தவர்களுக்கு 10 ஆம் இடமான தொழில் ஸ்தானதிபதியாகச் சனி வருவதால், அரசு உத்தியோகம், அரசு சார்ந்த நிறுவன வேலைகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படலாம். மேலும், 10 ஆம் இடம் என்பது பிரபலமான தனியார் கம்பெனிகளையும், தொழில் அதிபர்களையும் குறிக்கும். மேலும் 6 ஆம் இடம் என்பது வேலையைக் குறிக்கும். ஒரு இடத்தில் மாதச் சம்பளத்துக்கு இருப்பதையும், உடல் உழைப்புச் சார்ந்த தொழிலையும் குறிக்கும்.
இந்த இராசியில் பிறந்தவர்கள் தொழிலிலும், வேலையிலும் ஆர்வத்துடன் செயல்படுவார்கள். எப்பொழுதும் வேலை, வேலை என உணர்சி பூர்வமாக இருப்பார்கள்.
பொதுவாக வேலை அல்லது தொழில் என்பது அவரவருக்கு உரிய சுய ஜாதகத்தைப் பார்த்துத்தான் அறிந்து கொள்ள முடியும். ஏனெனில், வேலை அல்லது தொழில் என்பது இன்று பல்கிப் பெருகி உள்ளதால், அவரவரின் ஜாதக நிலை, தற்போதைய கிரக கோசார நிலை அந்தந்த ஜாதகத்தின் தசாபுத்தி நிலைகளை அனுசரித்தே பலன் உரைக்க வேண்டியுள்ளது.

அதிர்ஷ்டக் கிழமைகள் – புதன், வெள்ளி.
அதிர்ஷ்ட எண்கள் - 5, 8.
அதிர்ஷ்ட நிறங்கள் - பச்சை, வெண்மை
அதிர்ஷ்டக் கற்கள் - மரகதப் பச்சை, வைரம்.

Like and Share Social Networks:

facebook abirami sekar twitter abirami sekar youtube abirami sekar abirami sekar linked in



Astrologer in chennai tanagar, best good astrologer in chennai
Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

 
ராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை
2017- ஏப்ரல் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோ
2017- மார்ச் மாத ராசிபலன்கள் வீடியோ
2017-பிப்ரவரி மாத ராசிபலன்கள் வீடியோ
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோ
டிசம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
நவம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
அக்டோபர் மாத ராசிபலன்கள் வீடியோ
2016-2017 குருப்பெயர்ச்சி பலன்கள்
2016 வருட ராசிபலன்கள்
2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
லக்னப் பொதுப்பலன்கள்
ராசிகளின் பொதுப்பலன்கள்
நட்சத்திரப் பொதுப்பலன்கள்
எண்கணிதப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குருபெயர்ச்சிப் பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்


எல்லா கிழமைகளுக்குகான
நல்ல நேரங்கள்

ராசிகளின் தேவதைகள்
கிரகங்களின் தேவதைகள்
நட்சத்திரங்களின் தேவதைகள்
யோகங்களின் அதிதேவதைகள்
நட்சத்திர நாம எழுத்துக்கள்
ஒரைகள்
வாஸ்து
சந்திராஷ்டமம்
ஜோதிட கேள்வி பதில்கள்
பாவக தொடர்பான கேள்விகள்
ஜாதகத்தில் யோகங்கள்
ஜாதகத்தில் தோஷங்கள்
கரிநாட்கள் பற்றி
ஆயுள்
கல்வி
வேலை / தொழில்
திருமணம்
காதல்
குழந்தை
சொத்து
வெளிநாடு
நோய் / கடன்
வழக்கு
ருது ஜாதகம்
செவ்வாய் தோஷம் பற்றி
கோவில்கள்
ஆன்மிகம்
வழிபாடுகள்
பரிகாரங்கள்
ஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)
எப்படி இருந்த பழமொழி !!
மாவட்ட வாகனப் பதிவு எண்கள்
அவசரத் தொலைபேசி எண்கள்
இயற்கை மருத்துவம்
உங்கள் சிந்தனைக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa - Webdesign
Copyright © 2016-17 Abiramiastrology.com
http://www.hitwebcounter.com/
Counter For Wordpress