maduraiabiramisekar@gmail.com   +91 99948 11158 / +91 94436 74536
Abirami sekar, astrologer in chennai online
12 ராசிகளின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
12 லக்னத்தின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope

ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களின் பொதுப்பலன்கள்

என்னுரை :-

மனிதனாகப் பிறந்த எவரும் ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் ஏதாவது ஒரு ராசியில் ஒரு லக்னத்தில் பிறந்தே இருக்க வேண்டும். இது உலகநியதி. இதில் ஜாதி மத இன வேறுபாடின்றி மனித குலம் அனைத்திற்கும் இது பொருந்தும். இதில் ஜாதகம் எழுதியவர்களுக்கும் ஜாதகமே எழுதாதவர்களுக்கும் இது பொதுவானதாகும். இங்கு ஜாதகத்தில் மேல் நம்பிக்கை உள்ளவர்களால் மட்டும் பொதுவாக ஜாதகம் பார்க்கப்படுகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு ராசியில் கட்டாயம் ஜனித்தே ஆக வேண்டும். கீழே ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கு அந்த ராசியின் தனமை குணநலன்கள் இன்னபிற விஷயங்களைப் பற்றி சுருக்கமாக ஆண் பெண் இருபாலர்க்கும் பொதுவான விஷயங்களை மூலநூல்களின்படியும் ஆதிகிரந்தங்களின் படியும் நவீன விஞ்ஞான ஜோதிடப்படியும் உள்ள ஒரு சில பொதுவான விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளன.

இது ஒரு பொதுவான கருத்தேயின்றி முடிந்த முடிவான கருத்தல்ல. ஏனெனில் இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு ஜாதகமும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டதாகும். அவரவர் முன் ஜென்ம வினைப்பயன்படி இச்ஜென்மம் வாழ்க்கை அமைவதால் அதற்குத்தகுந்தபடி அவரவது கர்மா அமைகின்றது. எனவே பொதுக்கருத்தை சிறப்புக்கருத்தாகக் கருதாமல் அவரவர் ராசியின் பொதுவான குணநலன்களை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஒரு ராசியில் பிறந்தவர்கள் என்றாலே அவர்களுக்கென்று உருவ அமைப்பு, குணநலன்கள், கல்வி வேலை, தொழில், திருமணம், சொத்து, நோய், கடன் என்று உள்ளன. உதாரணமாக உருவ அமைப்பு என்று குறிப்பிடும் பொழுது ஒரு சில நாட்டில் இருப்பவர்கள் வெண்மை நிறமாகவும், ஒரு சில நாடுகளில் பிறந்தவர்கள் கருப்பாகவும், ஒரு சில நாடுகளில் பிறந்தவர்கள் குட்டையாகவும் இப்படி கலந்தே இருப்பர். எனவே இங்கு உருவ அமைப்பைப் பற்றியெல்லாம் குறிப்பிடுவது பொதுப்பலனாகும்.

ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கென்று தாய், தந்தை, உடன்பிறந்தோர், கல்வி, வேலை, தொழில், திருமணம், குழந்தை, சொத்துக்கள் இவையெல்லாம் பொதுவாகக் குறிப்பிடப்பட்டாலும் அவரவர் ஜாதகப்படி இந்தப் பலன்கள் எல்லாம் மாறத்தான் செய்யும்.

உதாரணமாக கல்வி என்று எடுத்துக் கொண்டால் இன்று எவ்வளவோ படிப்புகள் வந்துள்ளது. ஜோதிடத்தில் 2ம் பாவம் என்பது +2 வரையிலான கல்வியைக் குறிக்கும். 4ம் பாவம் அல்லது வீடு அல்லது ராசி என்பது I.T.I, பாலிடெக்னிக் (POLTECHINC) இஞ்சினியரிங் (B.E), கலை (ARTS) அறிவியல் (SCEINCE) , மருத்துவம் (M.B.B.S) இவற்றைக் குறிக்கும். 9ம் வீடு என்பது உயர்கல்வி அல்லது முதுகலைப் படிப்புகளைக் (HIGHER STUDY) குறிக்கும். உதாரணமாக M.A, M.Sc, M.Com, M.tch, M.Arc, M.B.A, M.C.A, M.S, M.D, M.Phil ஆகிய முதுநிலைப் படிப்புகளைக் குறிக்கும். 12ம் வீடு என்பது ஆராய்ச்சி (P.H.D) படிப்பைக் குறிக்கும். இது தவிர I.A.S, I.P.S, I.F.S, போன்ற படிப்புகளை அறிவதற்கு அவரவர் சொந்த ஜாதகமே பலன் உரைக்க ஏதுவாகும்.

மேலும் ஜோதிடத்தில் 6ம் இடம் அல்லது 6ம் பாவம் அல்லது 6வது ராசி என்பது வேலையைக் (SERVICE) குறிக்கும். இந்த சர்வீஸ் என்பது அரசு அல்லது பெயர்போன (REPUTED CONCERN) கம்பெனிகளைக் குறிக்கும். குறிப்பாக கைநீட்டி மாதம் சம்பளம் பெறுவதைக் காட்டும். 10ம் இடம் என்பது பொதுவாக அரசு அல்லது அரசு சார்ந்த (GOVERNMENT) (QVASI GOVERNMENT) துறைகளைக் குறிக்கும். மேலும் பெரும் தொழில் முதாலாளிகளைக் (INDUSTRIALIST) குறிக்கும். குறிப்பாக பெரும் தொழிலதிபர்களைக் குறிக்கும். 7ம் இடம் என்பது சுயதொழில் (OWN BUSINESS) அல்லது கூட்டுத் தொழில் (PARTNERSHIP) இவற்றைக் குறிக்கும். 3ம் இடம் அல்லது ராசி வீடு என்பது சிறுதொழில் (SMALL BUSINESS) அல்லது கமிஷன் (COMMISSION) ஏஜென்ஸி (AGENCY) கன்சல்டன்சி, ரோட்டோர வியாபாரம் (PLAT FORM BUISNESS) போக்குவரத்து (TANSPORT) தகவல்தொடர்பு (COMMUNICATION) இது மாதிரியான தொழில்களைக் குறிக்கும். எனவே தொழில்பற்றி பேசுகின்ற பொழுது ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களைப் பற்றி பேசும்பொழுது நிறைய மாறுபாடுகள் வருமாதலால் அவரவர் ஜாதகத்தைப் பார்த்துதான் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும். எனவே தான் இங்கு ராசியில் பிறந்தவர்களை பற்றி எழுதி வருகிற பொழுது தொழிலை அதிகம் இங்கு குறிப்பிடவில்லை.

ஏனெனில் அக்காலத்தில் அவரவர் வர்ணாசிரமப்படி குலத்தொழில் புரிய வரையுறுக்கப்பட்டது. அக்காலங்களில் பிரமாண ஜாதி, ஷத்திரிய ஜாதி, வைசிய ஜாதி, சூத்திர ஜாதி, சங்கிரம ஜாதி என்று ஜாதிகளைப் பிரித்து அவரவர் ஜாதிக்கென்று தொழிலை உருவாக்கி அந்தந்த ஜாதிகளில் பிறந்தவர்கள் அவரவர் தொழிலைச் செய்ய கட்டளையிடப்பட்டு செயல்பட்டு வந்தது. ஆனால் மாறிவரும் விஞ்ஞான காலத்திற்கேற்ப தற்காலத்தில் யாரும் எந்தப்படிப்பும் படிக்கலாம் எந்த வேலையும் எந்தத் தொழிலும் செய்யலாம் அல்லது பார்க்கலாம் என்று வந்துவிட்டதால் அதுபற்றியெல்லாம் இந்த “ராசி பலனில்” ஒவ்வொரு ராசிக்கும் உண்டான தொழிலைக் குறிப்பிடப்படவில்லை, எனெனில் ஒவ்வொரு ராசிக்கும் வேலை அல்லது தொழில் என்று எடுத்துக் கொண்டால் ஏகப்பட்ட தொழிலைக் குறிப்பிடவேண்டும். அதனால் பொதுவாக இங்கு தொழில்களைக் குறிப்பிடவில்லை அவரவர் ஜாதகத்தைப் பார்த்து இதுபற்றிய விவரங்களை விரிவாகத் தெரிந்து கொள்ளவும்.

இதே மாதிரிதான் நோயைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது மாறிவரும் உணவுப் பழக்கத்தால் புதிது புதிதாக நோய்கள் மனித வாழ்வில் வந்து போகின்றன. எனவே எந்தமாதிரியான நோய்கள் தாக்கும் அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் இவையெல்லாம் அவரவர் சொந்த ஜாதகத்தில் இருந்து மட்டுமே அறிந்து அதன்படி நடக்க முடியும்.

எனவே ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களின் பலன் பொதுவானதேயன்றி தனித்தன்மையானதல்ல அவரவர் ஜாதகத்தைப் பார்த்தால் மட்டுமே எதையும் முழுமையாகக் கூற முடியும்.

1. மேஷம் ராசிபலன்கள்
2. ரிஷபம் ராசிபலன்கள்
3. மிதுனம் ராசிபலன்கள்
4. கடகம் ராசிபலன்கள்
5. சிம்மம் ராசிபலன்கள்
6. கன்னி ராசிபலன்கள்
7. துலாம் ராசிபலன்கள்
8. விருச்சிகம் ராசிபலன்கள்
9. தனுசு ராசிபலன்கள்
10. மகரம் ராசிபலன்கள்
11. கும்பம் ராசிபலன்கள்
12. மீனம் ராசிபலன்கள்

Like and Share Social Networks:

facebook abirami sekar twitter abirami sekar youtube abirami sekar abirami sekar linked in



Astrologer in chennai tanagar, best good astrologer in chennai
Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

 
ராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை
2017- ஆகஸ்ட் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள்
2017- ஜூலை மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஜூன் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
12 இலக்கினப் பொதுப் பலன்கள்
2017- மே மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஏப்ரல் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோ
2017- மார்ச் மாத ராசிபலன்கள் வீடியோ
2017-பிப்ரவரி மாத ராசிபலன்கள் வீடியோ
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோ
டிசம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
நவம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
அக்டோபர் மாத ராசிபலன்கள் வீடியோ
2016-2017 குருப்பெயர்ச்சி பலன்கள்
2016 வருட ராசிபலன்கள்
2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
லக்னப் பொதுப்பலன்கள்
ராசிகளின் பொதுப்பலன்கள்
நட்சத்திரப் பொதுப்பலன்கள்
எண்கணிதப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குருபெயர்ச்சிப் பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்


எல்லா கிழமைகளுக்குகான
நல்ல நேரங்கள்

ராசிகளின் தேவதைகள்
கிரகங்களின் தேவதைகள்
நட்சத்திரங்களின் தேவதைகள்
யோகங்களின் அதிதேவதைகள்
நட்சத்திர நாம எழுத்துக்கள்
ஒரைகள்
வாஸ்து
சந்திராஷ்டமம்
ஜோதிட கேள்வி பதில்கள்
பாவக தொடர்பான கேள்விகள்
ஜாதகத்தில் யோகங்கள்
ஜாதகத்தில் தோஷங்கள்
கரிநாட்கள் பற்றி
ஆயுள்
கல்வி
வேலை / தொழில்
திருமணம்
காதல்
குழந்தை
சொத்து
வெளிநாடு
நோய் / கடன்
வழக்கு
ருது ஜாதகம்
செவ்வாய் தோஷம் பற்றி
கோவில்கள்
ஆன்மிகம்
வழிபாடுகள்
பரிகாரங்கள்
ஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)
எப்படி இருந்த பழமொழி !!
மாவட்ட வாகனப் பதிவு எண்கள்
அவசரத் தொலைபேசி எண்கள்
இயற்கை மருத்துவம்
உங்கள் சிந்தனைக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa - Webdesign
Copyright © 2016-17 Abiramiastrology.com
http://www.hitwebcounter.com/
Counter For Wordpress