maduraiabiramisekar@gmail.com   +91 99948 11158 / +91 94436 74536
Abirami sekar, astrologer in chennai online, madurai astrologer abirami sekar, அபிராமி சேகர் ஜோதிடம்

12 ராசிகளின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
12 லக்னத்தின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope

உதாரண ஜாதகங்களுடன் ஜோதிட கேள்வி பதில்கள்

ஜாதகம் - 1
பெயர் : V.சுரேஷ்ராஜன், S/o.வள்ளிநாயகம்,
பிறந்த தேதி : 19-07-1961,
பிறந்த நேரம் இரவு மணி 7.05,
பிறந்த இடம் : மானாமதுரை,
சந்திர தசை இருப்பு 04-05-26



கேள்வி
எனது ஆசிரியர் பணியை ஒழுங்காக நிறைவு செய்வேனா? எனது உடலில் உள்ள நோய் தன்மை குறையுமா? சுய தொழில் செய்யலாமா? குழந்தைகளால் நன்மையுண்டா? மனைவியின் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?

பதில்
மகர லக்னம் கன்னி ராசி அஸ்த்த நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு தற்பொழுது சனி திசையில் சுக்ர புத்தி 03.01.2017 வரை நடப்பில் உள்ளது. சனி உங்கள் லக்னத்திற்கு 1,2ம் வீட்டிற்கு அதிபதியாகி அவர் லக்னத்தில் அமர்ந்து அவர் 8க்குடைய சூரியன் சாரம் பெற்று அச்சூரியன் 7ல் அமர்வது சிறப்பானதல்ல. 8ம் இடம் உடல் ஆரோக்ய குறைவையும் 7ம் இடம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவையும் காட்டும். மேலும் வேலையில் சற்று கவனம் தேவை. சுக்ரன் உங்கள் லக்னத்திற்கு 5.10க்குடைவராகி அவர் 5ல் அமர்ந்து 7க்குடைய சந்திரன் சாரம் பெற்று அந்தச் சந்திரன் 9ல் அமர்வது பணியை விட்டு வெளியே வருவது போல் தோன்றினாலும் பணியை விடமாட்டீர்கள்.

5ம் இடம் என்பது வேலையை விட்டு வெளியே வருவதைக் காட்டினாலும் 9ம் இடம் என்பது பள்ளி, கல்லூரி பல்கலைக்கழகம் மற்றும் ஆசிரியரைக் குறிப்பிடும். நீங்கள் ஆசிரியராக இருப்பதால் ஒழுங்காய் பணி நிறைவு அடைய வாய்ப்புகள் உண்டு. 5,9 பாவங்கள் தொடர்பு கொள்வதால் உடலில் நோய் ஏற்பட்டாலும் உடனே அது குணமாகும். மேலும் திசை 8,7 பாவங்களைக் காட்டுவதால் ஆப்ரேஷன் செய்ய வாய்ப்புகள் அதிகமாகும், 8ம் இடம் என்பது ஆப்ரேஷனைக் குறிக்கும். குழந்தைகளால் உங்களுக்கு எதிர்பார்த்த நன்மைகள் அமையும். அவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும், மனைவியின் உடல்நலத்தைப் பொறுத்தவரைப் பெரிய அளவில் நோய்த் தாக்கம் இல்லை. எனவே கவலைப்பட வேண்டாம்.

ஜாதகம் - 2
பெயர் தி.சிவரஞ்சினி, D/o. தினகரன்
பிறந்த தேதி : 25-11-1981
பிறந்த நேரம் : காலை மணி 9.41,
பிறந்த இடம் : சென்னை
வியாழன் குரு தசை இருப்பு : 11-06-15



கேள்வி
எனது மகளின் காதல் திருமண வாழ்வு எப்படி இருக்கும்? குழந்தைபாக்கியம் உண்டா? எப்பொழுது? சுயதொழில் தொடங்கலாமா? உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்? இவள் ஜாதகபப்டி கணவர் சுயதொழில் தொடங்கலாமா?

பதில்
தனுசு லக்னம் விருச்சிக ராசி விசாக நட்சத்திரத்தில் பிறந்த உங்கள் புதல்விக்கு 7, அதிபதி புதன் 10ம் அதிபதியாகவும் வந்து அவர் 12ம் இடத்தில் அமர்வது சுமாரான பலன் ஆகும். 7க்குடையவர் 12ல் அமர்வது பிரிவு பிரச்சினை போராட்டங்களைக் குறிக்கும். அந்தப் புதன் 1,4க்குடைய குரு சாரம் பெற்று அந்தக் குரு 11-ல் அமர்வதால் அவர்கள் மீண்டும் ஒன்று சேர்வதற்கும் சேர்ந்து வாழ்வதற்கும் பாக்யம் உண்டு. எனவே உங்கள் மகளின் மணவாழ்க்கையை பற்றிய கவலையை விடவும். தற்பொழுது உங்கள் புதல்விக்கும் 7ம் அதிபதி புதன் திசையில் புதன் புத்தி 6.11.2014 வரை நடப்பில் உள்ளது. இக்காலங்களில் கணவன் மனைவி பிரிவு ஏற்படுவது போல் தோற்றம் இருக்குமேயன்றி பிரிவு ஏற்படாது.

உடல் ஆரோக்யத்தைப் பொறுத்தவரை மிக அதிக கவனம் தேவை. 12ம் இடம் வைத்தியச் செலவுகளையும் ஆஸ்பத்திரியைக் குறிக்கும். அடுத்துவரும் கேது புத்தியும் கேது 2ம் இடத்தில் இருந்தாலும் அவர் 9க்குடைய சூரியன் சாரம் பெற்று அந்தச் சூரியன் 12ல் அமர்வது உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுயதொழில் தொடங்க இது உகந்த காலமல்ல, சுமார் 4 ஆண்டு காலத்திற்கு சுயதொழில் தொடங்குவது சிறப்பானதல்ல. மகள் ஜாதகப்படி கணவருக்கு சுயதொழில் தொடங்க வாய்ப்பில்லை, அடிமைக்கு வேலைக்கு செல்வதற்கே அதிக வாய்ப்புகள் உண்டு, மீறி சுயதொழில் தொடங்கினால் லாபகரமாக இருக்காது. 6ம் இடம் அடிமைக்கு வேலைக்குச் செல்வதையும் 7ம் பாவம் என்பது சுயதொழிலையும் குறிக்கும். மனைவி ஜாதகப்படி கேது புத்தி முடிந்து சுக்ர புத்தியில் சுயதொழில் தொடங்கினாலும் லாபகரமாக இருக்காது.

ஜாதகம் - 3

பெயர் : லெஷ்மி, D/o.கணேசன்,
பிறந்த தேதி : 16.05.1981,
பிறந்த நேரம் : காலை மணி 9.03,
பிறந்த இடம் : இராமநாதபுரம்
செவ்வய் தசை இருப்பு : 03.02.23



கேள்வி
எனது மகளின் மணவாழ்வு எப்படி இருக்கும்? மகிழ்ச்சிகரமாக அமையுமா? நிரந்தர வேலை அமையுமா? குழந்தைபாக்யம் உண்டா? வெளிநாடு செல்லலாமா? உயர்கல்வி படிக்க வாய்ப்புண்டா?

பதில்
மிதுன லக்னம் துலாம் ராசி சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த உங்கள் புதல்விக்கு 7ம் அதிபதி குரு 10ம் அதிபதியாகவும் வந்து அவர் 4ல் அமர்வது திருப்தியற்ற மணவாழ்க்கையைக் குறிக்கும். 4,10ம் எப்பொழுதுமே திருப்தியற்ற நிலையைக் காட்டும் அப்படிப்பட்ட குரு 3ம் அதிபதி சூரியன் சாரம் பெற்று அவர் 12ம் இடத்தில் அமர்வது திருமணம் ஆனாலும் பிரிவு பிரச்சினைகளைக் காட்டும். 12ம் இடம் என்பது பிரிவு, டைவர்ஸ் இவற்றைக் குறிக்கும், மேலும் அவர் லக்னாதிபதியுடனும் 12ம் அதிபதியுடனும் சேர்ந்து அமர்வது டைவர்ஸ் என்பதைக் காட்டுகிறது. தற்பொழுது குரு தசையில் சந்திர புத்தி 08.04.2015 வரை நடப்பில் உள்ளது. தற்பொழுது 7ம் அதிபதி திசை நாள் நடப்பில் உள்ளதால் கவனம் தேவை. எப்படி இருப்பினும் மணவாழ்வு மகிழ்ச்சிகரமாக அமையாது.

2க்குடைய சந்திரன் 5ல் அமர்ந்து அவர் 6,11க்குடைய செவ்வாய் சாரம் பெற்று அவர் 11ல் அமர்வது ஓரளவு நற்பலன் என்றாலும் அடுத்துவரும் செவ்வாய் புத்தி அதற்கு அடுத்துவரும் ராகு புத்திகள் சற்று சுமாரான பலன்களையே அளிக்கும். ராகு புத்தியில் வேலை கிடைத்து ஓரளவு சம்பாதிக்க வாய்ப்பு அமையும். குழந்தை பாக்யம் கண்டிப்பாக உண்டு. செவ்வாய் புத்தியில் புத்ரபாக்யம் கண்டிப்பாக உண்டு. 12ம் இடம் தொடர்பு கொள்வதால் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அதிகம் உண்டு. மேலும் 12ம் இடம் தொடர்பு கொள்வதால் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பு படிக்க வாய்ப்பு அமையும். 12ம் இடம் எனபது ஆராய்ச்சி கல்வியைக் குறிக்கும் இடமாகும்.

ஜாதகம் - 4

பெயர் : R.பிரபு, S/o.ராமசுப்பு,
பிறந்த தேதி : 23.05.1969,
பிறந்த நேரம் மாலை மணி 4/23,
பிறந்த இடம் : கோயம்புத்தூர்,
புதன் தசை இருப்பு : 03.10.24



கேள்வி
நான் பார்க்கும் வேலையை ஒழுங்காகப் பார்க்க முடியுமா? வேலையை விட்டுவிடுவேனா? ஆப்ரேஷன் செய்ய வேண்டி வருமா? கடன் எப்பொழுது அடையும்? குழந்தைகளால் எதிர்காலத்தில் நன்மைகள் உண்டா?

பதில்
துலா லகன்ம் கடக ராசி ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு தற்பொழுது சந்திர திசையில் சுக்ர புத்தி 16.10.2015 வரை நடப்பில் உள்ளது. சந்திரன் உங்கள் லக்னத்திற்கு 10ம் இடமான தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து இருந்தாலும் அவர் 9, 12க்குடைய புதன் சாரம் பெற்று புதன் 8ம் இடத்தில் அமர்வது சிறப்பனதல்ல. 9ம் இடம் வேலையை விட்டு வெளியேறுவதையும் 8ம் இடம் பென்ஷன், பி.எப், கிராஜ்விட்டி இவற்றைக் குறிப்பதால் தாங்கள் வேலையை விட்டு இந்தத் திசையில் வெளியே வருவீர்கள், அல்லது வெளியேற்றப்படுவீர்கள், இல்லையேல் அரசாங்கத்தால் தண்டிக்கப்படுவீர்கள், காரணம் சூரியன்8ல் அமர்வது அரசால் ஏற்படும் தொந்தரவுகளைக் குறிக்கும்.

மேலும் தற்பொழுது நடக்கும் சுக்ர புத்தியும் சிறப்பாதனதல்ல, சுக்ரன் உங்கள் லக்னத்திற்கு 1,8க்குடையவராகி அவர் 6ம் இடத்தில் அமர்ந்து அவரும் 9,12க்குடைய புதன் சாரம் பெற்று அவர் 8ல் சூரியனுடன் சேர்ந்து அமர்ந்து இருப்பது சிறப்பானதல்ல. 6ம் இடம் நோயையும் 8ம் இடம் என்பது ஆப்ரேஷனையும் குறிக்கும். எனவே இப்புத்தியில் ஆப்ரேஷன் உங்களுக்கு செய்ய வேண்டியது வரும். கடன் இப்பொழுது அடையாது, தொடர்ந்து கடன் இருப்பது உங்கள் ஆயுளுக்கு நன்மையேயன்றி கெடுதல் இல்லை. குழந்தைகளால் உங்களுக்குப் பெரிய அளவில் நன்மைகள் இல்லை. 5ம் அதிபதி சனி 7ல் அமர்ந்து அவர் கேது சாரம் பெற்று கேது 12ல் அமர்வது குழந்தைகளால் பிரச்சனையேயன்றி அவர்களால் நன்மையல்ல.

ஜாதகம் - 5

பெயர் : S.ஈஸ்வரி, D/o.சுந்தர்,
பிறந்த தேதி 18.05.1974,
பிறந்த நேரம் : இரவு 11.05மணி,
பிறந்த இடம் : கோயம்புத்தூர்
புதன் தசை இருப்பு : 07.08.4



கேள்வி
நான் பார்க்கும் வேலையை ஒழுங்காகப் பார்க்க முடியுமா? வேலையை விட்டுவிடுவேனா? ஆப்ரேஷன் செய்ய வேண்டி வருமா? கடன் எப்பொழுது அடையும்? குழந்தைகளால் எதிர்காலத்தில் நன்மைகள் உண்டா?

பதில்
மகர லக்கனம், மீன ராசி, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு 7ம் அதிபதி சந்திரன் 3ல் சுக்ரனுடன் அமர்ந்து அவர் 6,9க்குடைய புதன் சாரம் பெற்று அந்தப் புதன் சூரியன் கேதுவுடன் 5ல் அமர்வது நல்லதல்ல. 7க்குடைய சந்திரன் சுக்ரனுடன் 3ம் இடமான காமாஸ்தானத்தில் அமர்வது உங்களுக்கு அளவற்ற காம இச்சையையும் அவர் புதனுடன் தொடர்பு கொள்வதால் ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்புகளையும் உங்களுக்கு வாழ்க்கையில் உண்டுபண்ணும், மேலும் 5ம் இடத்தில் சூ.பு.கேது சேர்க்கை பணத்திற்காக உங்களை விற்பதையும் குறிக்கும். 5ம் இடம் காதலையும், விபச்சாரத்தையும் 8ம் இடம் அசிங்கம் அவமானங்களையும் கேது கிரிமினல் நடவடிக்கைகளையும் குறிக்கும். எனவே நீங்கள் வாழ்க்கையில் அசிங்கம் அவமானப்பட வேண்டி வரும்.

தற்பொழுது சூரிய திசையில் சுக்ரபுத்தி 20.01.2015 வரை நடப்பில் உள்ளது. எனவே பார்க்கும் வேலை நிரந்தரமாகாது. உங்களுக்கு உழைக்காமலே பணம் வந்து சேரும். அடுத்து வரும் சந்திர திசையும் அதையேதான் காட்டுகிறது. எனவே எந்த வேலையிலும் நீங்கள் நிரந்தரமாக இருக்கமாட்டீர்கள். அடுத்துவரும் சந்திர தசையும் உங்களுக்கு ஆப்ரேஷன் செய்ய வேண்டி வரும். அடிவயிறு போன்ற உடல் உறுப்புகளில் ஆப்ரேஷன் செய்ய வாய்ப்பு அமையும். குழந்தைகளால் நன்மை ஏற்படும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் கிட்டும்.

ஜாதகம் - 6

பெயர் : S.சரளா, D/o.சுப்பையா,
பிறந்த தேதி : 23.02.1974,
பிறந்த நேரம் காலை 5.32மணி,
பிறந்த இடம் : திண்டுக்கல்
ராகு தசை இருப்பு : 0-11-16



கேள்வி
எனது திருமண வாழ்வு எபப்டி இருக்கும்? மாங்கல்ய தோஷம் உண்டா? மகிழ்ச்சியான வாழ்வு உண்டா? மேலே படிக்க அதாவது உயர்கல்வி பயில வாய்ப்பு உண்டா? யாரால் எனக்கு வாழ்க்கையில் மேன்மையுண்டு? வெளிநாடு செல்லலாமா?

பதில்
மகர லக்னம் கும்ப ராசி சதய நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு கணவன் ஸ்தானதமான 7ம் அதிபதி சந்திரன் 3ம் இடத்தில் அமர்ந்து அவர் ராகு சாரம் பெற்று அந்த ராகு 2ம் இடத்தில் அமர்வது திருமணம் ஆனாலும் முதல் கணவன் உங்களை விட்டுப் பிரிந்து வாழ அல்லது நிரந்தரமாகப் பிரிய வாய்ப்பு உண்டு. எனெனில் 12ம் இடம் என்பது பிரிவைச் சொல்வதாகும். 7ம் இடம் முதல் கணவனையும் 2ம் இடம் இரண்டாவது கணவனையும் புதன் ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்பையும் குறிக்கும். அல்லது இரண்டாவது திருமணத்தையும் குறிக்கும். இவை எல்லம் உங்கள் ஜாதகத்தில் லகனத்திற்கு 2ம் இடத்தில் உள்ளது.

உங்கள் ஜாதகத்தின் 2ம் இடம் என்பது வரக்கூடிய கணவனுக்கு 8ம் இடம் ஆகும். 8ம் இடம் என்பது கணவரின் ஆயுளைக் குறிக்கும். எனவே உங்கள் ஜாதகத்தில் வலுவான மாங்கல்ய தோஷம் உண்டு. மணவாழ்வைப் பொறுத்தவரை உங்களுக்கு மகிழ்ச்சியில்லா வாழ்வு அமையும். தற்பொழுது புதன் தசையில் சுக்கிரபுத்தி 03.05.2016 வரை நடப்பில் உள்ளது. சுக்ரன் உங்கள் ஜாதகத்தில் 5,10க்குடையவராகி அவர் லக்னத்தில் அமர்ந்து 8க்குடைய சூரியன் சாரம் பெற்று அவர் 2ல் அமர்வது உயர்கல்வி பயிலுவதில் நிறையத் தடைகள் உண்டு. நெருங்கிய நண்பர்களால் உங்களுக்கு ஆதாயம் உண்டு. தற்பொழுது வெளிநாடு செல்ல வாய்ப்புகள் குறைவு.

ஜாதகம் - 7

பெயர் : ஜெயஸ்ரீ, W/o.M.ரமேஷ்,
பிறந்த தேதி : 26/27.6.1985,
பிற்ந்த நேரம் : இரவு 12.07 A.M,
பிறந்த ஊர் : பொள்ளாச்சி
செவ்வாய் மஹா தசை இருப்பு 06-04-10



கேள்வி
காதல் திருமணம் செய்த என் மனைவி ஜாதகப்படி எனக்கு தோஷம் உண்டா? சூரியன் செவ்வாய் சேர்க்கை கூடாது என்கிறார்கள்? சரியா? எனது உடல் ஆரோக்யம் எப்படி இருக்கும்? எனது மனைவி ஜாதகப்படி கண்டம் அல்லது ஆப்ரேஷன் உண்டா?

பதில்
மீன லக்னம், கன்னி ராசி, சித்திரை நட்சத்திரப்படி உங்கள் மனைவி ஜாதகத்தில் கணவன் ஸ்தானமான 7ம் அதிபதி புதன் 5ல் அமர்வதும் அவர் குரு சாரம் பெற்று குரு 11ல் அமர்வதும் 5ம் இடத்துச் சந்திரன் 7ல் அமர்வதும் நல்லதேயாகும். 5ம் இடம் என்பது காதலையும் 7ம் இடம் கணவரையும் 11ம் இடம் என்பது அவரது விருப்பம் ஆசை, அபிலாஷை பூர்த்தியாவதையும் குறிக்கும். எனவே அவரது காதல் நிறைவேறி திருமணம் நடந்தது. எனவே உங்கள் காதல் திருமணம் விதிப்படியே நடந்துள்ளது. பொதுவாகவே சூரியன், செவ்வாய் சேர்க்கை பெண் ஜாதகத்தில் இருப்பது நல்லதல்ல என்று குறிப்பிடப்படுகிறது. இங்கு உங்கள் மனைவி ஜாதகத்தில் 4ம் இடத்தில் சூரி, செ சேர்க்கை சுமாரான பலனேயாகும்.

உங்கள் மனைவி ஜாதகப்படி கன்னி உங்கள் லக்னமாகும் உங்கள் லக்னத்திற்கு சூரியன் விரையாதிபதியாகி அவர் ராகு சாரம் பெற்று அந்த ராகு உங்கள் லக்னத்திற்கு 8ம் இடத்தில் அமர்வது நலல்தல்ல. மேலும் செவ்வாய் 3, 8க்குடையவராகி அவரும் 10ம் இடத்தில் அமர்ந்து அவரும் ராகு சாரம் பெற்று ராகு உங்கள் லக்னத்திற்கு 8ம் இடத்தில் 2,9க்குடைய சுக்ரனுடன் சேர்ந்து இருப்பது உங்களுக்கு விபத்து அல்லது ஆப்ரேஷன் இவை நடக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஏனெனில் உங்கள் மனைவியின் 2,8ம் இடங்களில் பாபக் கிரகங்கள் இருப்பது கணவனுக்கு நல்லதல்ல. கணவனின் முன்னேற்றத்தில் தடை, அல்லது உடல் ஆரோக்யம் பாதிப்பு அல்லது விபத்து ஆப்ரேஷன் போன்றவை அந்த தசாபுத்தி காலங்களில் ஏற்பட வாய்ப்புள்ளது.

Like and Share Social Networks:

facebook abirami sekar twitter abirami sekar youtube abirami sekar abirami sekar linked in



Astrologer in chennai tanagar, best good astrologer in chennai
Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

 
ராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோ
டிசம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
நவம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
அக்டோபர் மாத ராசிபலன்கள் வீடியோ
2016-2017 குருப்பெயர்ச்சி பலன்கள்
2016 வருட ராசிபலன்கள்
2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
லக்னப் பொதுப்பலன்கள்
ராசிகளின் பொதுப்பலன்கள்
நட்சத்திரப் பொதுப்பலன்கள்
எண்கணிதப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குருபெயர்ச்சிப் பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்


எல்லா கிழமைகளுக்குகான
நல்ல நேரங்கள்

ராசிகளின் தேவதைகள்
கிரகங்களின் தேவதைகள்
நட்சத்திரங்களின் தேவதைகள்
யோகங்களின் அதிதேவதைகள்
நட்சத்திர நாம எழுத்துக்கள்
ஒரைகள்
வாஸ்து
சந்திராஷ்டமம்
ஜோதிட கேள்வி பதில்கள்
பாவக தொடர்பான கேள்விகள்
ஜாதகத்தில் யோகங்கள்
ஜாதகத்தில் தோஷங்கள்
கரிநாட்கள் பற்றி
ஆயுள்
கல்வி
வேலை / தொழில்
திருமணம்
காதல்
குழந்தை
சொத்து
வெளிநாடு
நோய் / கடன்
வழக்கு
ருது ஜாதகம்
செவ்வாய் தோஷம் பற்றி
கோவில்கள்
ஆன்மிகம்
வழிபாடுகள்
பரிகாரங்கள்
ஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)
எப்படி இருந்த பழமொழி !!
மாவட்ட வாகனப் பதிவு எண்கள்
அவசரத் தொலைபேசி எண்கள்
இயற்கை மருத்துவம்
உங்கள் சிந்தனைக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa - Webdesign
Copyright © 2016-17 Abiramiastrology.com
http://www.hitwebcounter.com/
Counter For Wordpress