|
கிரகங்களின் தேவதைகள்
நவக்கிரகங்கள் மொத்தம் 9 கிரகங்கள் ஆகும். இந்த 9 கிரகங்களுக்கும் “அதிதேவதை” என்றும், “ப்ரத்யதி” தேவதை என்றும் ‘பரிகார தேவதை’என்றும் 3விதமான முறைகள் உள்ளன. இங்கு 9 கிரகங்களுக்குமான பரிகார தேவதை எது என்பதைப் பற்றி மட்டும் குறிப்பிடப்படுகிறது. தேவதை என்றாலும் தெய்வம் என்றாலும் ஒன்றுதான்.
நம்முடைய ஜாதகத்தில் எந்தக் கிரகத்தின் தசை நடக்கிறதோ (தசை என்றாலும் திசை என்றாலும் ஒன்றாகவே உரைக்கப்படுகிறது) உண்மையில் “தசை” என்றால் காலம் என்று பொருள். அதாவது TIME அல்லது DURATION என்று பெயர். திசை என்றால் 8 விதமான திசையைக் குறிக்கும்). அந்தக் கிரகத்திற்குரிய தெய்வத்தை வழிபட்டு வந்தாலே நம் வாழ்வில் அனைத்தும் நிறைவேறும்.
இங்கு 9 கிரகங்களும் அதற்குரிய வழிபடும் தெய்வமும் கொடுக்கப்பட்டுள்ளன.
எண் |
கிரகம் |
பரிகார தேவதை |
1 |
சூரியன் |
சிவன் |
2 |
சந்திரன் |
பார்வதி |
3 |
செவ்வாய் |
சுப்பிரமணியர் |
4 |
புதன் |
ஸ்ரீமஹாவிஷ்ணு |
5 |
குரு |
ப்ரம்மா |
6 |
சுக்ரன் |
மஹாலெஷ்மி |
7 |
சனி |
அனுமான் |
8 |
ராகு |
பத்ரகாளி |
9 |
கேது |
விநாயகர் |
குறிப்பு:- 1. குரு தசை நடக்கும் காலத்தில் ஒரு சில ஜோதிடர்கள் தட்சணாமூர்த்தியை வியாழக்கிழமை தோறும் வழிபட வேண்டும் என்பர்.
2. ராகு தசை நடக்கும் காலத்தில் ஒரு சில ஜோதிடர்கள் துர்க்கைக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்பர். இவையெல்லாம் ப்ரத்யதி தேவதையில் வரும் என்றாலும் இந்த முறையிலும் தெய்வங்களை வழிபடலாம்.
இருப்பினும் உங்கள் பார்வைக்கு கிரகங்களின் அதிதேவதையும், ப்ரதியதி தேவதையும் கொடுக்கப்பட்டுள்ளது. இது எதற்கு கொடுக்கப்படுகிறது என்றால் அதிதேவதை ஒரு கிரகத்திற்கு நற்பலனைச் செய்யும் – ப்ரதியதி தேவதை ஒரு கிரகத்தின் அதிதேவதையைக் காட்டிலும் அதிகப்பலனைச் செய்யும் “பரிகார தேவதை” அதைக்காட்டிலும் அதிக நற்பலனைச் செய்யும். எந்த தெய்வத்தைக் கும்பிட்டாலும் அல்லது வழிபட்டாலும் கண்டிப்பாக நற்பலன்கள் அதிகரிக்கும்.
எண் |
கிரகம் |
அதிதேவதை |
ப்ரத்யத் தேவதை |
1 |
சூரியன் |
அக்னி |
ருத்ரன் |
2 |
சந்திரன் |
நீர் |
பார்வதி (எ) கெளரி |
3 |
செவ்வாய் |
பூமி |
ஷேத்ரபாலர்கள் |
4 |
புதன் |
விஷ்ணு |
ஸ்ரீமந்நாராயணன் |
5 |
குரு |
இந்திரன் |
ப்ரம்மன் |
6 |
சுக்ரன் |
இந்திராணி |
இந்திரன் |
7 |
சனி |
பிரஜாபதி |
யமன் |
8 |
ராகு |
சர்ப்பம் |
துர்க்கை |
9 |
கேது |
ப்ரம்மன் |
சித்ரகுப்தன் |
|
|
|
|