maduraiabiramisekar@gmail.com   +91 99948 11158 / +91 94436 74536
Abirami sekar, astrologer in chennai online, madurai astrologer abirami sekar, அபிராமி சேகர் ஜோதிடம்

12 ராசிகளின் பொதுப் பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
12 லக்னத்தின் பொதுப் பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope

கும்ப லக்னம்
அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள்


தெய்வ நம்பிக்கையும் இனிமையான பேச்சாற்றலும் உடைய உங்கள் லக்னத்திற்கு குரு 7ம் இடத்தில் சஞ்சரிப்பதால் வீட்டில் சுப காரியங்கள் நடந்தேறும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் அமையும். பேச்சில் இனிமை கூடும். பேச்சால் நற்பலன்கள் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் கொடுத்து வைத்த நகைகள் பத்திரங்கள் திரும்ப வந்து சேரும். சம்பாதித்து சேர்த்து கொடுத்த பணம் வந்து சேரும். தூரதேசத்திலிருந்து பணவரவு அமையும். சகோதர சகோதரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். எதிர்பார்த்த செய்திகள் சற்று தாமதத்திற்கு பின் சாதகமாக வந்து சேரும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிபெற வாய்ப்புகள் அமையும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் திறமையும் அதிகரிக்கும்.

ஒரு சிலருக்கு வீடு, இடம், மாற வாய்ப்புகள் அமையும். அடிக்கடி அலைச்சல்கள் ஏற்படும். அதனால் நன்மையேற்படும். தைரியமும் முயற்சியும் அதிகரிக்கும். அண்டை அயலாருடன் நட்பு மிகும். ஒரு சிலருக்கு சொத்துக்கள் பிரிவினை ஏற்படும். நல்ல பெண் வேலையாட்கள் கிடைப்பார்கள். ஒரு சிலருக்கு சொத்து வண்டி வாகனங்கள் இடம் வாங்க சந்தர்ப்பம் அமையும். தாயாரின் உடல்நலத்தில் அதிகக் கவனம் தேவை. குழந்தைகளால் நன்மையேற்படும். குழந்தைகளுக்கு வேலை கிடைக்க வாய்ப்பும் ஒரு சிலருக்கு திருமணம் கைகூடி வரும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும். குதிரை, ரேஸ், லாட்டரி, சேர் மார்கெட்டில் பெரிய அளவில் முதலீடு கூடாது. மந்திர உபதேசம் ஒரு சிலருக்கு சித்திக்கும். போட்டித் தேர்வில் அதிகக் கவனம் தேவை.

பார்க்கும் வேலையை விட வேண்டாம். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் இழுபறியாகவே இருந்து வரும். தாய் மாமன்களால் நன்மையேற்படும். உணவுப் பழக்கத்தில் மாற்றம் வரும். ஒரு சிலருக்கு உதவிப்பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் தேவை. நல்ல உணவை உட்கொள்ளல் வேண்டும். ஒரு சிலருக்கு 2வது திருமணம் நடக்க வாய்ப்புகள் அமையும். தந்தையாரின் அன்பும் ஆதரவும் கிட்டும். அரசால் எதிர்பாராத பிரச்சனைகள் வந்து சேரும். வெளிநாட்டுச் செய்திகள் சாதகமாக அமையும், நண்பர்களால் எதிர்பாராத உதவிகள் கிட்டும்.

உத்யோகஸ்தர்களுக்கு (JOB)

அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டுவிடுதல் கூடாது. வேறு வேலை கிடைத்த உத்தரவு வந்தபின் வேலையை விடுதல் வேண்டும். பணியில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளால் பிரச்சனைகளும் மனவருத்தங்களும் வந்து சேரும். சக ஊழியர்களின் உண்மையான நட்பும் அன்பும் ஆதரவும் கிட்டும். ஒரு சிலருக்கு வேலையின் காரணமாக இடமாற்றம் ஊர்மாற்றம் அமையும், வேலையின் காரணமாக கணவன் மனைவி பிரிந்து இருக்க வாய்ப்பு ஏற்படும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடுதல் கூடாது. பேச்சை சுருக்கவும். பொறுமையாக இருத்தல் வேண்டும்.

தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)

சுயதொழில் கூட்டுத் தொழில் சற்று சுமாராக இருக்கும். ஆரம்பத்தில் லாபம் குறைவானாலும் படிப்படையாக லாபம் அதிகரிக்கும். புதிய தொழில்கள் துவங்குவதில் அதிகக் கவனம் தேவை. பார்ட்னர்கள் தொழிலில் பிரிய நேரிடும். உற்பத்தி சார்ந்த தொழில் புரிபவர்கள் உற்பத்தியைக் குறைத்தல் நலம், கல்வி, பத்திரிக்கை, போக்குவரத்து, தகவல் தொடர்பு, கமிஷன், ஏஜென்ஸி, கன்சல்டன்ஸி, வானொலி, தொலைக்காட்சி போன்ற துறைகள் ஓரளவு சாதகமாக அமையும். ஆடை, ஆபரணம், இரும்பு, எஃகு, சிமெண்ட், மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம், கட்டுமானம் நல்ல லாபகரமாகவும் அமையும். நிதி, நிர்வாகம், வங்கி, இன்சூரன்ஸ், நல்ல லாபத்துடனும் கப்பல், மீன்பிடி தொழில், நீர் சம்பந்தமான துறைகள் சற்று சுமாராக இருக்கும். நடைபாதை வியாபாரிகள் நல்ல லாபம் அடைவர்.

விவசாயிகள்

விவசாயம் சற்று சுமார் தான், காய்கறிகள், பழங்கள், பணத் தோட்டப் பயிர்கள் லாபகரமாக அமையும். பெரிய அளவில் நிலத்தில் முதலீடு கூடாது. தேவையில்லாமல் காரணமாக கடன் வாங்க வேண்டி வரும். குத்தகைக்கு விட்டு லாபம் ஒரு சிலர் அடைவர்.

அரசியல்வாதிகள்

பொதுமக்களின் ஆதரவு நன்கு அமையும். தொண்டர்களால் நன்மையும் உண்மையான விசுவாசத்துடனும் விளங்குவர். அரசாங்கத்தால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். எதிரிகளால் சதா தொல்லைகள் இருந்து கொண்டேயிருக்கும்.

கலைஞர்கள்

ஆரம்பத்தில் சற்று மந்தமாக உள்ள கலைத்துறை ஜனவரிக்குப் பின் ஏற்றம் பெறும். இசை, நடனம், நாட்டியம், ஓவியம், சங்கீதம், சினிமா, டி.வி போன்ற கலைத்துறையில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவர். கையில் பணப்புழக்கம் சற்று சுருக்கமாகவே அமையும்.

மாணவர்கள்

விளையாட்டில் ஏற்படும் ஆர்வத்தை சற்றுக் குறைத்து படிப்பில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். எதிர்பார்த்த படிப்பும் எதிர்பார்த்த பள்ளி கல்லூரி கிடைப்பதில் தடையேற்படும். வங்கிக் கடன் ஒரு சிலருக்கு வாங்க வாய்ப்பு அமையும்.

பெண்கள்

வீட்டில் இதுகாறும் நடைபெறாமல் தள்ளிப்போன சுப காரியங்கள் நடந்தேறும். அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகளும் குழந்தை பாக்யமும் ஒரு சிலருக்கு அமையும். புதிய உறுப்பினர்களை குடும்பத்தில் சேர்ப்பதில் பிரச்சனை ஏற்படும். எனவே எதிலும் நிதானம் தேவை. உடலில் அடிக்கடி அசதியும் சோர்வும் ஏற்பட்டு விலகும். மனம் ஒத்துழைத்தாலும் உடல் ஒத்துழைக்காது. வேலைக்கு போகும் பெண்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். ஒரு சிலர் பார்க்கும் வேலையை விட்டு புதிய வேலை தேட வேண்டிவரும். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்பட்டாலும் பணப்புழக்கம் சற்று சுமாரகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களால் எதிர்பாராத நன்மையேற்படும். உயரதிகாரிகள் விஷயத்தில் தேவையில்லாமல் பேசுதல் கூடாது.

உடல் ஆரோக்யம்

உடலில் நோய் ஏற்பட்டாலும் நோயிலிருந்து விடுபட வாய்ப்புகள் ஏற்படும். நாட்பட்ட நோய்களின் வேதனை சற்று குறைந்து காணப்படும். ஜனவரிக்குள் ஆப்ரேஷன் செய்ய இருந்தால் செய்தால் நலம். மார்பு, அடிவயிறு, கால் பகுதிகளில், உடலில் நோய் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளல் நலம்.

பரிகாரம்

“புதன் கிழமை” “துர்க்கைக்கு” நெய் விளக்கேற்றி அர்ச்சனை செய்தால் நலம். “வெள்ளிக்கிழமை” “விநாயகருக்கு” அருகம்பும் மாலையிட்டு வணங்குவது நலம். வாய்ப்பிருந்தால் “திருப்பதி” சென்று வர நன்மையேற்படும்.

Like and Share Social Networks:

facebook abirami sekar twitter abirami sekar youtube abirami sekar abirami sekar linked in



Astrologer in chennai tanagar, best good astrologer in chennai
Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

 
ராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோ
டிசம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
நவம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
அக்டோபர் மாத ராசிபலன்கள் வீடியோ
2016-2017 குருப்பெயர்ச்சி பலன்கள்
2016 வருட ராசிபலன்கள்
2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
லக்னப் பொதுப்பலன்கள்
ராசிகளின் பொதுப்பலன்கள்
நட்சத்திரப் பொதுப்பலன்கள்
எண்கணிதப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குருபெயர்ச்சிப் பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்


எல்லா கிழமைகளுக்குகான
நல்ல நேரங்கள்

ராசிகளின் தேவதைகள்
கிரகங்களின் தேவதைகள்
நட்சத்திரங்களின் தேவதைகள்
யோகங்களின் அதிதேவதைகள்
நட்சத்திர நாம எழுத்துக்கள்
ஒரைகள்
வாஸ்து
சந்திராஷ்டமம்
ஜோதிட கேள்வி பதில்கள்
பாவக தொடர்பான கேள்விகள்
ஜாதகத்தில் யோகங்கள்
ஜாதகத்தில் தோஷங்கள்
கரிநாட்கள் பற்றி
ஆயுள்
கல்வி
வேலை / தொழில்
திருமணம்
காதல்
குழந்தை
சொத்து
வெளிநாடு
நோய் / கடன்
வழக்கு
ருது ஜாதகம்
செவ்வாய் தோஷம் பற்றி
கோவில்கள்
ஆன்மிகம்
வழிபாடுகள்
பரிகாரங்கள்
ஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)
எப்படி இருந்த பழமொழி !!
மாவட்ட வாகனப் பதிவு எண்கள்
அவசரத் தொலைபேசி எண்கள்
இயற்கை மருத்துவம்
உங்கள் சிந்தனைக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa - Webdesign
Copyright © 2016-17 Abiramiastrology.com
http://www.hitwebcounter.com/
Counter For Wordpress