maduraiabiramisekar@gmail.com   +91 99948 11158 / +91 94436 74536
Abirami sekar, astrologer in chennai online, madurai astrologer abirami sekar, அபிராமி சேகர் ஜோதிடம்
12 ராசிகளின் பொதுப் பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
12 லக்னத்தின் பொதுப் பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope

துலாம் லக்னம்
சித்திரை 3,4 பாதங்கள் சுவாதி விசாகம் 1,2,3, பாதங்கள்


நியாயத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுபட்டு வாழும் உங்கள் லக்னத்திற்கு குரு பகவான் 11ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் உங்கள் ஆசை, அபிலாஷை அத்தனையும் பூர்த்தியாகும். இதுவரை வீட்டில் நடக்காமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும் சமூகத்தில் பெயர், புகழ், அந்தஸ்து கூடும். பணப்புழக்கம் எதிர்பாராத அளவில் அதிகரிக்கும். கையில் பணம், பொருள் இருந்து கொண்டேயிருக்கும். பேச்சில் நிதானம் தேவை, எதிலும் நிதானமாக சிந்தித்து பேசுதல் நலம். அடிக்கடி பிரயாணம் செய்ய வாய்ப்பு ஏற்படும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றிகரமாக அமையும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். எப்பொழுதும் சுறுசுறுப்புடன் செயல்படத் தூண்டும். எதிர்பாராத விளம்பரம் மூலம் புகழ் பரவும். இடம், மனை, வீடு, வண்டி வாகனங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்புகள் அதிகரிக்கும். அடிக்கடி சுபநிகழ்ச்சிகள் கலந்து கொள்ள சந்தர்ப்பம் அமையும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும்.

கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கொடுத்த பணங்கள் தவணை முறையில் வந்து சேரும். எதிர்பாராத தனவரவு கிட்டும். வழக்குகள் ஓரளவு சாதகமாக அமையும். அதனால் நன்மை கிடைக்கும். அரசால் எதிர்பாராத நற்பலன்கள் கிட்டும். நல்ல ஆண் வேலையாட்கள் கிடைக்க வாய்ப்புகள் ஏற்படும். வேலை எதிர்பார்த்த அளவில் அமையும். தந்தையாரின் அன்பும் ஆதரவும் கிட்டும். முன்னோர்கள் மூத்தோர்களின் ஆசிர்வாதம் கிட்டும். நீண்ட தூர ஸ்தல யாத்திரை செல்ல சந்தர்ப்பம் அமையும். தொழிலில் புது கூட்டாளிகள் சேர வாய்ப்பு அமையும். நண்பர்களால் எதிர்பாராத நன்மைகளும் ஆதரவும் அமையும். மூத்த சகோதர சகோதரிகளின் ஆதரவு கிட்டும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிகக் கவனம் தேவை. மேலும் அறுவை சிகிச்சைக்கான காலம் இதுவாகும்.

உத்யோகஸ்தர்கள் (JOB)

வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை ஓரளவு அமைய வாய்ப்புண்டு. ஒரு சிலருக்கு வேறு கம்பெனிகளில் மாற வாய்ப்புண்டு. பார்க்கும் வேலையை விட்டுவிடாமல் வேறு நல்ல கம்பெனி அமைந்தால் மட்டுமே வேலையை விடவேண்டும். அரசு வேலை ஒரு சிலருக்கு கிடைக்க வாய்ப்புண்டு. வேலையின் காரணமாக ஒரு சிலர் வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிட்டும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் எதிர்பாராத உதவி கிட்டும். உயரதிகாரிகளிடத்தில் தேவையில்லாமல் பேசுதல் கூடாது. எதிலும் சற்று நிதானம் தேவை. ஒரு சிலருக்கு நிலுவையில் நிற்கும் பணங்கள் வந்து சேரும்.

தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)

தொழிலில் புதிய முயற்சிகள் செய்ய வேண்டிய காலமிது தொழிலில் புதிய கூட்டாளிகள் அல்லது பங்குதாரர்கள் இணைய வாய்ப்புகள் ஏற்படும். சிறுதொழில் சுயதொழில் ஓரளவு லாபகரமாக அமையும். போக்குவரத்து தகவல் தொடர்பு கமிஷன் ஏஜென்ஸி கன்சல்டன்சி, பத்திரிக்கை, எழுத்துத்துறையில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவர். புதிதாக தொழில் தொடங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு ஏற்படும். சுயதொழில் உற்பத்தி சார்ந்த தொழில் புரிபவர்கள் ஏற்றம் பெறுவர். நிதி, நீதி, வணிகம், கப்பல், இரும்பு, எஃகுத்துறை லாபம் தரும். ரியல் எஸ்டேட் ஏற்றுமதி இறக்குமதி சாதகமாக அமையும். மருத்துவம், விஞ்ஞானம், இரசாயனம் சாதகமாக இருக்கும். பங்குச்சந்தை சற்று சுமாராகவும் முதலீட்டில் அதிகக் கவனமும் தேவை.

விவசாயிகள்

விவசாயம் சாதகமாக இருக்கும். புதிதாக நிலம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். தோட்டப்பயிர்கள், காய்கறிகள், பழங்களால் நன்மையேற்படும். புதிய கடனை வாங்கி பழைய கடனை அடைக்க சந்தர்ப்பம் அமையும். விவசாயக் கடன் கிடைக்கும்.

அரசியல்

பெயர், புகழ், அந்தஸ்து, இவற்றுடன் வருமானமும் பெருகும். பட்டம் பதவிகள் தாமாக வந்து சேரும். அரசால் கௌரவிக்கப்பட வாய்ப்புகள் வந்து அமையும். வேலையாட்களும் உண்மையான தொண்டர்களும் அமைவர். அவர்களால் நன்மையுண்டு.

கலை

கலைத்துறை ஏற்றம் மிகுந்து காணப்படும். எதிர்பாராத தனவரவுகள் ஏற்பட்டு பொருளாதாரம் மேன்மையடையும். புதிய ஒப்பந்தகள் ஏற்படும். அதனால் எதிர்பாராத புகழும் பணம் வந்து சேரும். எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் இருந்து கொண்டேயிருக்கும்.

மாணவர்கள்

எதிர்பார்த்த பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்க விரும்பிய பாடங்கள் படிக்க வாய்ப்புகள் அமையும். ஒரு சிலருக்கு உயர்கல்வி பயில சந்தர்ப்பம் அமையும். ஒரு சிலருக்கு வெளியூர், வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு அமையும். கல்விக்கடன் கிடைக்கவும் வழியேற்படும்.

பெண்களுக்கு

அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சந்தர்ப்பங்கள் அமையும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். அடிக்கடி பயணம் அமையும். தெய்வ தரிசனம் கிட்டும். உறவினர்களால் தேவையற்ற மனக்குழப்பமும் பிரச்சனைகளும் ஏற்படுமாகையால் சற்று கவனம் தேவை. கணவன் மனைவி உறவு மற்றும் ஒற்றுமை சுமாராக இருக்கும். குழந்தைகளால் நன்மையும் அவர்களால் மனஉலைச்சல்களும் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலையில் முன்னேற்றமும் ஊதிய உயர்வும் அமையும். சகபணியாளர்களால் நன்மையேற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேர்க்கைகள் வந்து சேரும். உடலில் சளித்தொல்லை இல்லாமல் பார்த்துக் கொள்ளல் அவசியம்.

உடல் ஆரோக்யம்

அடிவயிறு, கல்லீரல், இவற்றில் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது உத்தமம். சர்க்கரையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளவும், காலில் பிரச்சனைகள் ஏற்படாதவாறு கவனித்துக் கொள்ளல் அவசியம். தோலில், சிரங்கு, அரிப்பு போன்றவை உடம்பில் வராமல் பார்த்துக் கொள்ளல் நலம்.

பரிகாரம்

“புதன் கிழமை” தோறும் “துர்க்கைக்கு” அர்ச்சனை செய்து வரவும். “சனிக்கிழமை சனிபகவானுக்கும்” “வில்வ இலை” அர்ச்சனை செய்தல் நலம் வாய்ப்பிருந்தால் “திருக்கொல்லிக்காடு” சென்று வயது தீபம் ஏற்றி வழிபட்டு வர நன்மையேற்படும்.

Like and Share Social Networks:

facebook abirami sekar twitter abirami sekar youtube abirami sekar abirami sekar linked in



Astrologer in chennai tanagar, best good astrologer in chennai
Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

 
ராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை
டிசம்பர் மாத இலக்கினப் பலன்கள்
நவம்பர் மாத இலக்கினப் பலன்கள்
அக்டோபர் மாத இலக்கினப் பலன்கள்
செப்டம்பர் மாத இலக்கினப் பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017- ஆகஸ்ட் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள்
2017- ஜூலை மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஜூன் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
12 இலக்கினப் பொதுப் பலன்கள்
2017- மே மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஏப்ரல் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோ
2017- மார்ச் மாத ராசிபலன்கள் வீடியோ
2017-பிப்ரவரி மாத ராசிபலன்கள் வீடியோ
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோ
டிசம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
நவம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
அக்டோபர் மாத ராசிபலன்கள் வீடியோ
2016-2017 குருப்பெயர்ச்சி பலன்கள்
2016 வருட ராசிபலன்கள்
2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
லக்னப் பொதுப்பலன்கள்
ராசிகளின் பொதுப்பலன்கள்
நட்சத்திரப் பொதுப்பலன்கள்
எண்கணிதப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குருபெயர்ச்சிப் பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்


எல்லா கிழமைகளுக்குகான
நல்ல நேரங்கள்

ராசிகளின் தேவதைகள்
கிரகங்களின் தேவதைகள்
நட்சத்திரங்களின் தேவதைகள்
யோகங்களின் அதிதேவதைகள்
நட்சத்திர நாம எழுத்துக்கள்
ஒரைகள்
வாஸ்து
சந்திராஷ்டமம்
ஜோதிட கேள்வி பதில்கள்
பாவக தொடர்பான கேள்விகள்
ஜாதகத்தில் யோகங்கள்
ஜாதகத்தில் தோஷங்கள்
கரிநாட்கள் பற்றி
ஆயுள்
கல்வி
வேலை / தொழில்
திருமணம்
காதல்
குழந்தை
சொத்து
வெளிநாடு
நோய் / கடன்
வழக்கு
ருது ஜாதகம்
செவ்வாய் தோஷம் பற்றி
கோவில்கள்
ஆன்மிகம்
வழிபாடுகள்
பரிகாரங்கள்
ஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)
எப்படி இருந்த பழமொழி !!
மாவட்ட வாகனப் பதிவு எண்கள்
அவசரத் தொலைபேசி எண்கள்
இயற்கை மருத்துவம்
உங்கள் சிந்தனைக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa - Webdesign
Copyright © 2016-17 Abiramiastrology.com
http://www.hitwebcounter.com/
Counter For Wordpress