maduraiabiramisekar@gmail.com   +91 99948 11158 / +91 94436 74536
Abirami sekar, astrologer in chennai online, madurai astrologer abirami sekar, அபிராமி சேகர் ஜோதிடம்
12 ராசிகளின் பொதுப் பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
12 லக்னத்தின் பொதுப் பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope

கன்னி லக்னம்
உத்தரம் 2,3,4, அஸ்த்தம் சித்திரை 1,2 பாதங்கள்


நல்ல அறிவும் ஆற்றலுமிக்க கன்னி லக்னக்காரர்களாகிய உங்கள் லக்னத்திற்கு குரு பகவான் 12ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ள வாய்ப்பும் சுபச் செலவுகள் செய்யவும் வாய்ப்பு அமையும். மேலும் அடிக்கடி வெளியூர் செல்ல சந்தர்ப்பமும் வெளிநாடு செல்ல வாய்ப்பும் அமையும். ஜனவரிக்குப் பின் ராகு லக்னத்தில் சஞ்சாரம் செய்வதால் நல்ல பெயர், புகழை அடைய போராட வேண்டியது வரும். எப்பொழுதும் மற்றவர்களிடம் எச்சரிக்கையாகப் பேசிப்பழகுதல் வேண்டும். பண வரவு நன்கு இருந்தாலும் ஒன்று அது முதலீடாகும் அல்லது செலவுகளாகவே இருந்து வரும்.

3ம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் புது முயற்சிகளில் சற்று தடையேற்பட்டு காரியம் கைகூடும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் அன்பு கிட்டும். நெருங்கிய உறவினர்களால் மனவருத்தங்களும் வேதனைகளும் வந்து சேரும். இதுவரை விற்காத இடம், நிலம், வீடு, இவைகள் கையை விட்டு ஓரளவு நல்ல விலைக்குப் போகும். தாயாரின் உடல்நலத்தில் அதிகக் கவனம் தேவை. குழந்தைகளால் நன்மையும் அவர்களால் பிரச்சனைகளும் ஏற்பட்டு விலகும். விருந்துகளில், கேளிக்கைகளில் ஈடுபாடும் கலந்துகொள்ள வாய்ப்பும் அமையும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷகரமாகவும் இருக்கும். ஒரு சிலர் 2வது திருமணத்தில் நாட்டம் செலுத்துவர். விவகாரத்துக்கள் கிடைப்பதில் ஒரு சிலருக்கு இழுபறியாகவே இருந்துவரும்.

யாருக்கும் கடன் கொடுத்தல் கூடாது. கொடுத்த பணம் திரும்ப வராது. வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். புதிய கம்பெனிக்கு விண்ணப்பிக்க வேண்டிய காலமிதுவாகும். போட்டி பந்தயங்களில் வெற்றி பெற்று பரிசு பெற வாய்ப்பு உண்டு. அரசாங்க வேலை கிடைக்க ஒரு சிலருக்கு வாய்ப்புண்டு அரசால் ஒரு சிலருக்கு பிரச்சனையும் ஏற்பட்டு விலகும். அறுவசை சிகிச்சைக்கான காலமிதுவாகும். தந்தையின் அன்பும் ஆதரவும் கிட்டும். முன்னோர்கள் மூத்தோர்களால் நன்மையேற்படும். நண்பர்களால் மகிழ்ச்சியும் நன்மையும் ஒத்துழைப்பும் அவசியம் கிட்டும். குடும்பத்தில் புது உறவுகள் வந்து சேரும். எதிர்பார்த்த விசா மற்றும் வெளிநாடு செல்லவும் வாய்ப்புகள் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு நீண்ட தூர ஸ்தல யாத்திரை செல்ல தெய்வ அனுகூலம் கூடி வரும். தாய்மாமன்களின் அன்பும் ஆதரவும் எதிர்பாராத வகையில் அமையும்.

உத்யோகஸ்தர்கள் (JOB)

புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லையென்றாலும் கிடைத்த வேலையை ஏற்றுக் கொள்ளல் வேண்டும். வேலையின் காரணமாக ஒரு சிலருக்கு இடமாற்றம் ஊர்மாற்றம் ஏற்படவும் வாய்ப்புண்டு. 3ல் சனி சஞ்சாரம் செய்வதால் உங்களைப்பற்றிய தேவையற்ற வதந்திகளை பரப்பி வருவர். உழைப்பில் ஆர்வம் கூடும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிட்டும். சக பணியாளர்களால் நன்மையேற்படும்.

தொழில் (BUSINESS), வியாபாரம் (TARDE)

சிறுதொழில் சுயதொழில் புரிபவர்கள் பெரிய அளவில் முதலீடு இல்லாமல் தொழில் செய்தல் வேண்டும். ஏற்றுமதி இறக்குமதி சாதகமாக இராது. உற்பத்தி, சேவை, போக்குவரத்து, தபால், தந்தி, பத்திரிக்கை, விளம்பரம் ஏற்றமாக இருக்கும். இரும்பு எஃகு சிமெண்ட், இரசாயனம், கனிமம், தாதுப் பொருட்கள் ஓரளவு லாபகரமாக அமையும். பங்குச்சந்தை சற்று லாபகரமாக இருக்கும். நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ், காவல் ஆசிரியர் துறைகள் ஏற்றமுடன் இருக்கும். தெருவோர வியாபாரிகள், சிறு தொழில் புரிபவர்கள் லாபம் அடைவர். அழகு சாதனப்பொருட்கள், பிளாஸ்டிக், கப்பல், ஆடை, ஆபரணத் தொழில் சிறந்து விளங்கும். தொழிலில் புதிய கூட்டாளிகளை சேர்ப்பதில் அதிக கவனம் தேவை. பங்குச் சந்தை ஆரம்பத்தில் தொய்வானாலும் ஜனவரிக்குப் பின் ஏற்றம் காணும்.

விவசாயிகள்

மகசூல் சற்று சுமாராக இருந்தாலும் எதிர்பார்த்த விலை கிடைக்க வாய்ப்பு அமையும். புது நிலம், தோட்டம், மனை வாங்க சந்தர்ப்பம் அமையும். வீட்டு வளர்ப்புப் பிராணிகளால் நன்மையேற்படும். விவசாயக் கடன் பயிர்க்கடன் நன்கு கிடைக்க வாய்ப்பு அமையும்.

அரசியல்வாதிகள்

அரசியல் ஏற்றம் தருவதாக இருக்கும். புதுப்பதவிகள் தேடி வரும். தொண்டர்கள் உண்மையாகவும் விசுவாசமாகவும் நடந்து கொள்வர். எதிரிகளால் பழிவாங்கும் போக்கு காணப்படும். மக்கள் ஆதரவு இருந்தாலும் வழக்குகள் இருப்பின் அதனால் மனவேதனைகளும் தேவையற்ற குழப்பமும் காணப்படும்.

கலைஞர்கள்

கலைத்துறையில் புதிய ஒப்பந்தள் நடக்கும். அதனால் வருமானம் ஆதரிக்கும். விளம்பரங்கள் மூலம் நன்மை கிட்டும். புதிய முயற்சிகளால் நற்பலன்கள் கூடும். சினிமா, இசை, நடனம், நாட்டியம், டி.வி. துறை சற்று லாபகரமாக அமையும். ஒரு சிலர் வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும்.

மாணவர்கள்

போட்டித் தேர்வுகள் மூலம் வேலை கிடைக்க வாய்ப்புண்டு. கல்விக்கடன் கிடைக்கும் உயர்கல்வி பயில ஒரு சிலர் வெளிநாடு செல்ல சந்தர்ப்பம் வாய்க்கும். விளையாட்டில் ஆர்வம் கூடும். தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்துதல் கூடாது. எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைப்பதில் போராட வேண்டி வரும்.

பெண்கள்

அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் அமையும். பெண் வேலையாட்களால் பிரச்சனைகள் ஏற்படும். குழந்தைகளால் மனவருத்தங்கள் ஏற்படும். தள்ளிப்போன திருமணம் ஒரு சிலருக்கு நடக்க வாய்ப்பு அமையும். பிரிந்த கனவன் மனைவி ஒன்று சேர்வர். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பும் ஒரு சிலருக்கு வேலையில் உயர்வும் கிட்டும். உடல்நலத்தில் அதிகக் கவனம் தேவை. உறவினர்களிடத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் வைத்தல் கூடாது. புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை அமையும். சக ஊழியர்களால் தேவையற்ற குழப்பங்களும் மன வேதனைகளும் அமையும். குடும்பத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை அமையும். வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பும் ஒரு சிலருக்கு விசா வர வாய்ப்பும் அமையும்.

உடல் ஆரோக்யம்

போக்குவரத்து வண்டி வாகனங்களில் கவனம் தேவை. அடிவயிறு, ஜீரண உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். அறுவை சிகிச்சைக்கான காலமிது. உடலில் சளித்தொல்லைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளல் நலம்.

பரிகாரம்

“வெள்ளிக்கிழமை” தோறும் “விநாயகருக்கு” அருகம்புல் மாலை இட்டு அர்ச்சனை செய்யவும். வெள்ளிக்கிழமை “மகாலக்ஷ்மியை” வணங்கிவரவும் முடிந்தால் “வேளாங்கண்ணி” சென்று மாதாவை வணங்கி வரவும்.

Like and Share Social Networks:

facebook abirami sekar twitter abirami sekar youtube abirami sekar abirami sekar linked in



Astrologer in chennai tanagar, best good astrologer in chennai
Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

 
ராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை
2017- ஆகஸ்ட் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள்
2017- ஜூலை மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஜூன் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
12 இலக்கினப் பொதுப் பலன்கள்
2017- மே மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஏப்ரல் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோ
2017- மார்ச் மாத ராசிபலன்கள் வீடியோ
2017-பிப்ரவரி மாத ராசிபலன்கள் வீடியோ
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோ
டிசம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
நவம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
அக்டோபர் மாத ராசிபலன்கள் வீடியோ
2016-2017 குருப்பெயர்ச்சி பலன்கள்
2016 வருட ராசிபலன்கள்
2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
லக்னப் பொதுப்பலன்கள்
ராசிகளின் பொதுப்பலன்கள்
நட்சத்திரப் பொதுப்பலன்கள்
எண்கணிதப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குருபெயர்ச்சிப் பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்


எல்லா கிழமைகளுக்குகான
நல்ல நேரங்கள்

ராசிகளின் தேவதைகள்
கிரகங்களின் தேவதைகள்
நட்சத்திரங்களின் தேவதைகள்
யோகங்களின் அதிதேவதைகள்
நட்சத்திர நாம எழுத்துக்கள்
ஒரைகள்
வாஸ்து
சந்திராஷ்டமம்
ஜோதிட கேள்வி பதில்கள்
பாவக தொடர்பான கேள்விகள்
ஜாதகத்தில் யோகங்கள்
ஜாதகத்தில் தோஷங்கள்
கரிநாட்கள் பற்றி
ஆயுள்
கல்வி
வேலை / தொழில்
திருமணம்
காதல்
குழந்தை
சொத்து
வெளிநாடு
நோய் / கடன்
வழக்கு
ருது ஜாதகம்
செவ்வாய் தோஷம் பற்றி
கோவில்கள்
ஆன்மிகம்
வழிபாடுகள்
பரிகாரங்கள்
ஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)
எப்படி இருந்த பழமொழி !!
மாவட்ட வாகனப் பதிவு எண்கள்
அவசரத் தொலைபேசி எண்கள்
இயற்கை மருத்துவம்
உங்கள் சிந்தனைக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa - Webdesign
Copyright © 2016-17 Abiramiastrology.com
http://www.hitwebcounter.com/
Counter For Wordpress