|
சிம்ம லக்னம்
மகம், பூரம், உத்தரம் 1ம் பாதம்
எதிலும் தலைமையேற்று முதன்மையாக விளங்கும் உங்கள் லக்னத்திற்கு லக்னத்திலேயே குரு பகவான் சஞ்சாரம் செய்வது சிறப்பானதாகும். குரு லக்னத்தில் சஞ்சாரம் செய்வதால் எத்தனை பிரச்சனைகள் போராட்டங்கள் ஏற்பட்டாலும் அவை எல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல் மறைந்துவிடும். பெயர் புகழ் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். எப்பொழுதும் மற்றவர்களால் சூழப்பட்டு அந்தஸ்துடன் விளங்க வைப்பார். ராகு 2ம் இடத்தில் ஜனவரிக்குப் பின் சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத பொருள்வரவு தனவரவு கிட்டும். இதுவரை வராத பணம் பொருல் வந்து சேரும். மற்றவர்களால் நேசிக்கப்படும் காலம் இது. பேச்சில் கவனம் தேவை. அதனால் எதிலும் நிதானம் தேவை.
எடுக்கும் புதிய முயற்சிகள் சாதகமாக வந்து சேரும். எதிர்பார்த்த செய்திகளும் அனுகூலமாக அமையும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். மேலும் எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் செயல்பட வைக்கும். உற்றார் உறவினர்களால் நன்மையேற்படும். சகோதர சகோதரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். இதுகாலும் நடைபெறாது வந்து புதிய முயற்சிகள் சீக்கிரம் நடந்தேறும். கடன் வாங்கி நிலம், வீடு, வண்டி, வாகனங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வழி அமையும். தாயாரின் உடல் ஆரோக்யம் பாதிக்கப்பட்டு பின் சீரடையும். சனி 4ல் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை.
விருந்து, கேளிக்கைகளில் தேவையற்ற வருத்தங்கள் வந்து சேரும். வீட்டில் சுபகாரியங்கள் கஷ்டப்பட்டே பின் நடந்தேறும். குழந்தைகளால் மனவருத்தங்களும் வேதனைகளும் தோன்றி மறையும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக இராது. காதலில் தேவையற்ற மனவருத்தங்களும் பிரச்சனைகளும் ஏற்பட்டு விலகும். குடும்பத்தில் புது வரவுகள் வந்து சேரும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். பார்க்கும் வேலையில் திருப்தியற்ற தன்மையேற்படும். நல்ல வீடு, வாடகைக்கு அல்லது ஒத்திகைக்கு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதில் அதிக நிதானம் தேவை. திருமணம் சற்று போராட்டத்திற்குப் பின் நடந்தேறும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த விவகாரத்து கிடைக்கும். ஒரு சிலருக்கு 2வது திருமணம் நடக்க வாய்ப்புகள் ஏற்படும்.. அறுவை சிகிச்சைக்கான காலமிது. போக்குவரத்து வண்டி வாகனங்களில் செல்வதில் மிகுந்த எச்சரிக்கை தேவை. புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைக்க வேண்டி வரும். வெளியூர், வெளிநாடு செல்வதில் சற்று போராட்டத்திற்குப் பின் அமையும். எதிர்பார்த்த விசா ஒரு சிலருக்கு வந்து சேரும். அடிக்கடி பிரயாணம் செய்ய வாய்ப்பும் அதனால் அலைச்சல்களும் மிகும். நண்பர்களால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும்.
உத்யோகஸ்தர்கள் (JOB)
இதுவரை வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும். எதிர்பார்த்த வேலை கிடைக்க வாய்ப்பு இல்லயென்றாலும் கிடைத்த வேலையை மகிழ்ச்சியுடன் ஏற்பதுவே சிறந்தது ஆகும். அவசரப்பட்டு வேலையை விடுதல் கூடாது. வேறு கம்பெனிக்கு மாறுவதில் நிதானம் தேவை. ஒரு சிலருக்கு போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலையில் அமர வாய்ப்பும் ஏற்படும். வேலை நிரந்தரமாகும். உயரதிகாரிகளும் ஆதரவும் அன்பும் கிட்டும். சக ஊழியர்களால் தேவையற்ற மனவருத்தங்களும் வேதனைகளும் கூடும். வேலையின் காரணமாக ஒரு சிலருக்கு இடமாற்றம் அமையும்.
தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)
சிறுதொழில் சுயதொழில் புரிபவர்கள் பெரிய அளவில் முதலீடு கூடாது. உற்பத்தி சார்ந்த தொழில்கள் நல்ல லாபகரமாக அமையும். தகவல் தொடர்பு, போக்குவரத்து, கமிஷன், ஏஜென்ஸி, கன்சல்டன்ஸி துறை, சற்று சுமாராக இருக்கும். பால், பழம், காய்கறிகள், ஆடை, ஆபரணம், ரெடிமெட், பிளாஸ்டிக் துறை லாபம் உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி ஓரளவு சுமாரகவே இருக்கும். மருத்துவம், விஞ்ஞானம், பொறியியல் லாபகரமாக அமையும். இரும்பு எஃகு சிமெண்ட் இரசாயனம் போன்ற துறைகள் சற்று சுமாரகவே இருக்கும். ரியல் எஸ்டேட் சாதகமாக அமையும். பங்குச்சந்தையில் அதிகக் கவனம் தேவை. தெருவோர வியாபாரம் பத்திரிக்கை, சுற்றுலா, மீன்பிடித் தொழில், கப்பல் துறைகள் லாபகரமாகவும், நிதி, நீதி, நிர்வாகம், ஆசிரியர் தொழில்கள் சற்று சுமாரகவே இருக்கும்.
விவசாயிகள்
4ல் சனி விவசாயம் சற்று மேன்மையாக இருக்கும். விளைச்சலுக்கேற்ற லாபம் கிட்டும். விவசாயக்கடன் அல்லது பயிர்க்கடன் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். புதிய நிலம் வாங்க வாய்ப்பு கிட்டும். சொத்தில் ஒரு சிலருக்கு பாகப்பிரிவினை ஏற்பட வாய்க்குகள் அமையும்.
அரசியல்வாதிகள்
அரசியல் வாழ்வு ஏற்றம் இறக்கமுடன் இருக்கும். தேவையற்ற விஷயங்களில் தலையிடுதல் கூடாது. யாரையும் நம்பி எந்தக் காரியத்திலும் இறங்குதல் கூடாது. எதிர்கள் வலுத்து இருப்பதால் மிகவும் நிதானம் தேவை. பொதுமக்களின் ஆதரவு சற்று சுமாரகவே இருக்கும்.
கலைஞர்கள்
கலைத்துறை சற்று சுமாரகவே இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஜனவரிக்குப் பின் அமையும். சமூகத்தில் பெயர், புகழ், கூடும், கடன் பிரச்சனைகளிலிருந்து மீள சற்று காலதாமதம் ஆகும். வழக்குகள் சாதகமாக இராது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மாணவர்கள்
கல்வியில் சற்று கவனம் தேவை. எதிர்பாராத பள்ளி கல்லூரி அமைய போராட வேண்டி வரும். ஒரு சிலருக்கு வெளிநாடு சென்று உயர்கல்வி வாய்ப்புகள் அமையும். உயர்கல்வி பயில்வதில் கவனம் தேவை. விளையாட்டுக்களில் நாட்டத்தைக் குறைத்தல் நலம்.
பெண்கள்
நல்ல அழகான கணவன் அமைய வாய்ப்புகளும் ஒரு சிலருக்கு புத்ரபாக்யம் அமையும். மணவாழ்வு மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். தேவையற்ற பேச்சுகளை பேசுதல் கூடாது. வேலையாட்களால் தேவையற்ற மனவருத்தங்கள் வந்து சேரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். ஒரு சிலர் வேறு கம்பெனி மாற வாய்ப்பு அமையும். வேலையில் இருப்பவர்களுக்கு வேலையில் சற்று சலிப்பும் நிம்மதியற்ற சூழலும் உருவாகும். உயரதிகாரிகள் ஒத்துழைப்பு கிட்டும். சக ஊழியர்களால் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகும். உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. ஒரு சிலருக்கு 2வது திருமணம் செய்ய வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். மற்றவர்கள் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடுதல் கூடாது.
உடல் ஆரோக்யம்
சனி 4ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் அடிவயிறு கர்ப்பப்பை மற்றும் சிறுநீரகக் கோளாறு வராமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். கால் மூட்டு, பாதங்களில் பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்வதும் சளித்தொல்லையிலிருந்து விடுபடுதலும் அவசியம்.
பரிகாரம்
“செவ்வாய்க்கிழமை” பழமையான “சிவன் கோயில்” சென்று “அம்பாளுக்கு” “நெய்விளக்கேற்றி” அர்ச்சனை செய்யவும். “செவ்வாய்க்கிழமை” தோறும் “பள்ளிவாசல்” சென்றுவர நற்பலன்கள் கூடும். வாய்ப்பிருந்தால் “பழநி” சென்று “முருகனை” தரிசித்து வர எதிர்பார்த்த நற்பலன்கள் அதிகரிக்கும்.
|
|
|
|