maduraiabiramisekar@gmail.com   +91 99948 11158 / +91 94436 74536
Abirami sekar, astrologer in chennai online, madurai astrologer abirami sekar, அபிராமி சேகர் ஜோதிடம்
12 ராசிகளின் பொதுப் பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
12 லக்னத்தின் பொதுப் பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope

கடக லக்னம்
புனர்பூசம் 4ம் பாதம் பூசம், ஆயில்யம்


எப்பொழுதும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் வலம் வரும் கடக லகனத்திற்கு குரு 2ம் இடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் ஆசைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நினைத்த காரியம் கைகூடும். பேச்சில் சாமர்த்தியமும் கூடும். அதனால் நன்மைகள் ஏற்படும். குரு 2ம் இடத்தில் தனவரவு பொருள்வரவு இருந்து கொண்டே இருக்கும். சனி 5ல் இருப்பதால் அந்தப் பொருள் வரவை மற்றவர்கள் அபகரிக்க வாய்ப்புகள் உண்டு. எனவே தேவையில்லாமல் கடன் கொடுத்தல் கூடாது. கொடுத்த பணம் திரும்ப வந்து சேராது. 3ல் ராகு சஞ்சாரம் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவதைக் காட்டுகிறது. அந்நிய மொழி பேசுபவர்கள் வேற்று சாதி இனத்தவர்களால் எதிர்பாராத சகாயம் ஏற்படும். அவர்களால் நன்மைகள் அதிகரிக்கும். எப்பொழுதும் சுறுசுறுப்பாகச் செயல்பட வைக்கும் ராகு எதிர்பாராத முயற்சிகளில் இறங்கி வெற்றிபெறச் செய்வார். அடிக்கடி பிரயாணங்கள் செய்ய வாய்ப்புகள் அமையும். அவை சாதகமாக இருக்கும். நெருங்கிய உறவினர்களை இழக்க நேரிடும்.

அலைச்சல்களில் நன்மையும் அதே சமயம் தேவையற்ற மனக்குழப்பமும் பீதி பயம் இருந்து கொண்டே இருக்கும். எல்லோரையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதால் வீண் குழப்பங்கள் ஏற்படும். இதுவரை விற்காத நிலம், வீடு, விற்க வாய்ப்பு அமையும். ஓரளவுக்கு நல்ல விலைக்குப் போகும். வீடு மாற்றம் இடமாற்றம் ஒரு சிலருக்கு அமையும். விருந்து கேளிக்கைகளில் பெரிய அளவில் மகிழ்ச்சி தராது. குழந்தைகளால் மனவருத்தங்களும், வேதனைகளும் கூடும். ஜனவரிக்குப் பின் படிப்படியாகக் குறையும். பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் அதிகக் கவனம் தேவை. மற்றவர்களுக்காக உழைக்க வேண்டி வரும். பொருள் களவு போவது போல் இருப்பதால் அதிகக் கவனம் தேவை.

வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் தரும். புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைக்க வேண்டி வரும். கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும். காதல் விஷயங்களில் மகிழ்ச்சிகரமாகவும், சந்தோஷமாகவும் அமையும். இதுவரை தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். தொழில் புதிய பங்குதாரர்களை தவிர்த்தல் நலம். அரசாங்க விஷயங்களில் அதிகக் கவனம் தேவை. போக்குவரத்து வண்டி வாகனங்களில் மிக மிக எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் பேரன் பேத்திகள் என புது வரவுகள் வந்து சேரும். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. ஒரு சிலர் வெளிநாடு செல்ல வாய்ப்புகளும் விசாவும் வந்து சேரும்.

உத்யோகஸ்தர்களுக்கு (JOB)

வேலை என்றால் அரசு மற்றும் தனியார் துறை என இரண்டையும் குறிக்கும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்பட்டு ஒரு சிலர் வெளிநாடு செல்ல வாய்ப்பு ஏற்படும். வேலையில் உயர் அதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். விருப்ப ஓய்வு பெறுபவர்கள் வேலையை விட விண்ணப்பிக்கலாம். அடிக்கடி லீவு போட வேண்டியது வரும். எனவே வேலையில் கவனம் தேவை.

தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)

சனிபகவான் 5ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் தொழில் எதிர் பார்த்த லாபம் வராது. கூட்டாளிகள் லாபம் அடைவர். புதிய தொழில் கூட்டாளிகளை சேர்த்தல் கூடாது. பங்குச்சந்தை சாதகமாக இராது. சிறுதொழில் சுயதொழில் சுமாராக இருக்கும். உற்பத்தி சார்ந்த துறை லாபகரமாக அமையும். போக்குவரத்து, தகவல்தொடர்பு, செய்தி, பத்திரிக்கை, சேவைத்துறை சற்று லாபகரமாகவும் இரும்பு எஃகு சிமெண்ட் கனிமவளம் சார்ந்தவை லாபம் குறைந்தும் காணப்படும். ரியல் எஸ்டேட் சற்று லாபம் குறந்தும் கமிஷன எஜென்ஸி, புரோக்கர் தொழில் ஏற்றமுடனும் தெருவோர வியாபாரம் ஏற்றுமதி இறக்குமதி சற்று சுமாராகவும் இருக்கும். ஆடை, ஆபரணம், ரசாயனம், பொறியியல், விஞ்ஞானம் ஏற்றமுடனும் இருக்கும். மருத்துவம், ஜோதிடம் ஏற்றமுடன் இருக்கும்.

விவசாயிகள்

சற்று மந்தமாகவே விவசாயம் இருக்கும். பனைத்தொழில், பயிர்த்தொழில், சற்று லாபகரமாகவும் காய்கறிகள், பழங்கள் சற்று லாபம் குறைந்தும் மலர்கள் லாபமுடனும் அமையும். புதிய நிலங்களை குத்தகைக்கு எடுக்க வாய்ப்புகள் அமையும்.

அரசியல்வாதிகள்

புதிய நண்பர்களால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும், ஆரம்பத்தில் சற்று சுமாராக இருக்கும். அரசியல் ஜனவரிக்குப் பின் சூடு பிடிக்கும். அரசால் நன்மையும் தொண்டர்களின் ஒத்துழைப்பும் கிட்டும். எதிர்களால் மன அழுத்தங்களும் தொடர்ந்த வண்ணமிருக்கும்.

கலைஞர்கள்

கலைத்துறை சற்று சுமாராகவே இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணப்புழக்கம் நன்கு அமையும். அரசால் ஆபத்துக்கள் ஏற்படும். சினிமா, நாடகம், இசை, டி.வி துறைகள் சற்று பெயர் புகழைத்தரும். ஒரு சிலருக்கு விருதுகளையும் வெற்றிகளையும் தரும்.

மாணவர்கள்

நல்ல அறிவும் புத்திக் கூர்மையும் அதிகரிக்கும். விளையாட்டில் கவனம் செல்லும். எதிர்பார்த்த படிப்பு கிடைக்க வாய்ப்பு சற்று குறைவாகும். கல்விக்கடன் கிடைக்கும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்துதல் கூடாது.

பெண்கள்

சிறு சலசலப்புக்குபின் குடும்பத்தில் சுபகாரியம் நல்ல முறையில் நடந்தேறும். குழந்தைக்கான வாய்ப்புகள் கூடும். அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் வாய்க்கும். கணவன் மனைவி உறவு சந்தோஷகரமாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சரிவர அமையாது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலையில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். வேலையின் காரணமாக சிறு பிரயாணம் ஒரு சிலருக்கு அமையும். உயரதிகாரிகளால் மன உலைச்சல்கள் ஏற்படும். சக ஊழியர்களின் அன்பும் ஒத்துழைப்பும் சாதகமாக அமையும். எப்பொழுதும் ஏதாவது ஒன்றிற்காக கவலைப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டிவரும்.

உடல் ஆரோக்யம்

உடலில் இனம் காணமுடியாத நோய்கள் ஏற்பட்டு விலகும். மார்பு, வயிறு, முழங்கால் போன்ற உடல் உறுப்புகளில் பிரச்சனையும், சளித்தொல்லையும், தேமல், சொரி, சிரங்கு போன்ற நோய்களால் வேதனைகளும் ஏற்பட்டு வரும்.

பரிகாரம்

“செவ்வாய்க்கிழமை” தோறும் “துர்க்கை” அல்லது “காளிக்கு” விளக்கேற்றி அர்ச்சனை செய்யவும். முன்னோர்களின் ஜீவசமாதிகள் மற்றும் மகான்களின் “ஜீவசமாதிகள்” சென்று வர நன்மைகள் அதிகரிக்கும். வாய்ப்பிருந்தால் “வேளாங்கன்னி” சென்று “மாதாவை” வழிபட்டு வருதல் நற்பலன்கள் அதிகரிக்க சந்தர்ப்பம் அமையும்.

Like and Share Social Networks:

facebook abirami sekar twitter abirami sekar youtube abirami sekar abirami sekar linked in



Astrologer in chennai tanagar, best good astrologer in chennai
Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

 
ராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை
டிசம்பர் மாத இலக்கினப் பலன்கள்
நவம்பர் மாத இலக்கினப் பலன்கள்
அக்டோபர் மாத இலக்கினப் பலன்கள்
செப்டம்பர் மாத இலக்கினப் பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017- ஆகஸ்ட் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள்
2017- ஜூலை மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஜூன் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
12 இலக்கினப் பொதுப் பலன்கள்
2017- மே மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஏப்ரல் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோ
2017- மார்ச் மாத ராசிபலன்கள் வீடியோ
2017-பிப்ரவரி மாத ராசிபலன்கள் வீடியோ
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோ
டிசம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
நவம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
அக்டோபர் மாத ராசிபலன்கள் வீடியோ
2016-2017 குருப்பெயர்ச்சி பலன்கள்
2016 வருட ராசிபலன்கள்
2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
லக்னப் பொதுப்பலன்கள்
ராசிகளின் பொதுப்பலன்கள்
நட்சத்திரப் பொதுப்பலன்கள்
எண்கணிதப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குருபெயர்ச்சிப் பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்


எல்லா கிழமைகளுக்குகான
நல்ல நேரங்கள்

ராசிகளின் தேவதைகள்
கிரகங்களின் தேவதைகள்
நட்சத்திரங்களின் தேவதைகள்
யோகங்களின் அதிதேவதைகள்
நட்சத்திர நாம எழுத்துக்கள்
ஒரைகள்
வாஸ்து
சந்திராஷ்டமம்
ஜோதிட கேள்வி பதில்கள்
பாவக தொடர்பான கேள்விகள்
ஜாதகத்தில் யோகங்கள்
ஜாதகத்தில் தோஷங்கள்
கரிநாட்கள் பற்றி
ஆயுள்
கல்வி
வேலை / தொழில்
திருமணம்
காதல்
குழந்தை
சொத்து
வெளிநாடு
நோய் / கடன்
வழக்கு
ருது ஜாதகம்
செவ்வாய் தோஷம் பற்றி
கோவில்கள்
ஆன்மிகம்
வழிபாடுகள்
பரிகாரங்கள்
ஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)
எப்படி இருந்த பழமொழி !!
மாவட்ட வாகனப் பதிவு எண்கள்
அவசரத் தொலைபேசி எண்கள்
இயற்கை மருத்துவம்
உங்கள் சிந்தனைக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa - Webdesign
Copyright © 2016-17 Abiramiastrology.com
http://www.hitwebcounter.com/
Counter For Wordpress