maduraiabiramisekar@gmail.com   +91 99948 11158 / +91 94436 74536
Abirami sekar, astrologer in chennai online, madurai astrologer abirami sekar, அபிராமி சேகர் ஜோதிடம்
12 ராசிகளின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
12 லக்னத்தின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope

2017-2018 இராகு – கேது பெயர்ச்சி விருச்சக லக்னப் பலன்கள்

லக்னப்பலன்கள் பற்றிய என்னுரையை முதலில் படிக்கவும் - Click Here

(விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள்)

தைரிய காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிகலக்ன அன்பர்களே! தங்கள் இராசிக்கு 17/18 - 08 - 2017 ஆவணி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 – 33 மணி அளவில் ஏற்படும் இராகு - கேது பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.

கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் கர்ம பாவத்திலும் கேது – சுக ஸ்தானத்திலுமாக சஞ்சாரம் செய்து சுமாரான பலன்களை வழங்கி வந்தனர். ஆவணி 1 முதல் கடக இராசியான பாக்கிய பாவத்துக்கு இராகுவும், மகர இராசியான 3 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர். இந்தப் பெயர்ச்சியின் போது இராகுவால் சுமாரான ஆதாயங்களைப் பெறுவீர்கள். கேதுவால் நல்ல பலன்களையே எதிர்பார்க்கலாம்.

இதன் காரணமாக இராகுவின் கோசார நிலை தன விரயம் தரும். நீங்கள் எடுக்கும் எந்த முயற்சியும், எவ்வளவு முயன்றாலும் ஈடேறாது. நெருங்கிய உறவுகள், பிடித்தமான நண்பர்கள் எவரையேனும் பிரிய நேரும். அதனால் கஷ்டங்களும், மனக் கவலைகளும் ஏற்படும். சிலருக்குக் கூடா நட்பால் கேடாய் முடியும். நல்லதை நினைக்காமல் பாவ காரியங்கள் செய்யவே சிந்தை செல்லும். சிலர் பிற மத ஒழுக்கத்தை பின்பற்ற நேரலாம். தரும புண்ணிய காரியங்களில் நாட்டம் இராது. சகோதரர் அல்லது தாய், தந்தை ஆகியோருக்குப் பீடை ஏற்படும். ப்ளாக் மேஜிக் எனப்படுகிற மாந்திரீகம், பில்லி, சூன்யம் போன்ற வித்தைகளில் ஈடுபாடு ஏற்படும். அரசு விரோதம், சுப அசுப விரயங்கள் ஏற்படும். பிறர் வாங்கிய கடனுக்கு பிணை ஏற்கக் கூடாது. சுலபமான காரியத்தையும் கடின உழைப்புக்குப் பிறகே முடிக்க முடியும். சிலருக்கு பாக்கியம் பெருகும். புகழ் ஓங்கும். பணி உயர்வு கிடைக்கும். மனை, வயல் ஆகியவை சொந்தமாக்க் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும் என சொல்வதற்கில்லை. குழந்தைகள் கல்வியில் தடங்கல்களுக்குப் பிறகு சிறந்து விளங்குவர். வீடு, நிலம் ஆகியவற்றை உடனடியாக்க் கிரையம் செய்வது அரிது. நல்ல வேலையைத் தேடிக்கொண்டு, இருக்கும் வேலையை விட முயற்சிப்பதே அறிவுடமையாகும். பெற்றோர்களின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படலாம். அதன் காரணமாக மருத்துவச் செலவுகள் கூடும். நண்பர், உறவினர்களுக்காக நீங்கள் தாராளமாகச் செலவழிப்பீர்கள். ஆனால், எவரையும் நம்பி ஜாமீன் கையெழுத்துப் போட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள். வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்ள நேரலாம். எச்சரிக்கை தேவை. தொழிலில் மந்த நிலையே காணப்படும்.

கேதுவால் பிறருடன் ஏற்படும் மோதல்களிலும், பூசல்களிலும் வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். எதிரிகள் மறைவர் எதிர்ப்புகள் விலகும். எல்லாவகையிலும், எல்லா வழிகளிலும் பணவரவு மேலும் மேலும் உயரும். பல வகைகளிலும் பெரும் புகழும் ஓங்கும். எவர்க்கும் எவ்விதமான வாக்குறுதி கொடுத்தாலும், சொன்னது, சொன்னபடி மறக்காமல் நிறைவேற்றி விடுவீர்கள். மகாராஜன் போல் வாழ்வர். மனோதைரியம் கூடும். உற்சாகம் பொங்கும். எதையும் சமாளிக்க்க் கூடிய செயல் திறன் அதிகரிக்கும். இளைய சகோதர உறவு மேம்படும். அவரால் ஆதாயமும், உதவிகளும் கிடைக்கும். நல்ல உணவு, தூக்கம், தாம்பத்திய சுகம் என அனைத்து பாக்கியங்களும் திருப்திகரமாக இருக்கும். அவனுக்கு என்னடா ? இராஜா என உங்களைக் கண்டு மூக்கின் மேல் விரலை வைப்பர். குடும்பத்தில் திருமணம் போன்ற நற்காரியங்கள் ஏற்பட்டு சுகசெலவுகள் கூடும். கடன்கள் தீரும். வருமானம் பெருகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மற்றும் ஆதரவால் நன்மை அடைவீர்கள். தீர்த்த யாத்திரைகள் சென்று திரும்புவீர்கள். சிலருக்கு மேக நோய்கள் ஏற்படலாம். எச்சரிக்கை தேவை. பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.

குடும்பம் மற்றும் பொருளாதாரம்

குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருப்பது போல் தோன்றும். செல்வம் சேரும். திருமணம் ஆகாதவர்களுக்கு அழகிய மனைவி அமைவாள். தாமதப்படலாம். மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமைந்தாலும், சில பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியது இருக்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். மனைவியின் பக்திமார்க்கம் உங்களின் மத உணர்வைத் தூண்டும். சகோதர நன்மை, வெற்றி மற்றும் சந்தோஷமும் உண்டாகும். சிலருக்குப் பிரிவும், வீண் செலவுகளும் ஏற்படலாம். உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இராது. சாமர்த்திய சாலியாக விளங்குவார்.

தொழில் மற்றும் வியாபாரம்

எதிர்கால தொழில் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு விரிவாக்கத் திட்டங்களில் முதலீடுகள் செய்வதற்கு முன் ஆலோசித்துச் செய்தால் ஏற்றம் தரும். அரசு ஊழியர்களுக்கு, மற்றவர்களுக்கு கட்டளையிடும் தலைமைப் பதவி கிடைக்கும். ஆனால் தாமதமாகும். தொழில் மற்றும் வியாபார முதலீடுகளுக்கு வங்கிக் கடன்கள் மிகுந்த பிரயாசைக்குப் பிறகே கிடைக்கும். அரசின் உதவிகள் தாமதமானாலும், கைகொடுக்கும். எதைச் செய்தாலும் சிரத்தையுடன் செய்தால் வெற்றி உண்டு. விவசாயப் பணிகள் சிறப்புற நடந்து ஆதாயம் பெருகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

எவ்வளவு வேலை பார்த்தாலும் உங்கள் பணியில், மேலதிகாரிகளிடம் திருப்தி இருக்காது. அதன் கார்ரணமாக பணி இடமாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதுவே குடும்பத்தைப் பிரிந்திருக்கக் காரணமாகலாம். சிலருக்குப் பணிவிஷயமாக அடிக்கடி வெளியூர் பயணங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்திருந்த சம்பள உயர்வுகள் தடை, தாமதிற்குப் பிறகே கிடைக்கும். சிலருக்கு வாகன யோகங்கள் ஏற்பட்டாலும், அதில் எச்சரிக்கையுடன் பயணித்தால் விபத்துக்களைத் தவிர்க்கலாம்.

பெண்களுக்கு

பணிபுரியும் பெண்கள் வாகனங்களில் செல்கையில் வேகத்தைக் குறைத்து கவனமுடன் செல்லுதல் அவசியம். சிலருக்கு அரசு உதவிகள் தாமதமாகும் உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணி உயர்வுக்கான பரிந்துரைகள் செய்யப்படலாம். யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும். தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். சிலருக்குத் தாங்கள் விரும்பாத இடத்திற்கு மாற்றம் ஏற்படலாம். குழந்தைகளின் தேர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும்.

அரசியல்வாதிகளுக்கு

தலைவர்கள் உங்களைப் புறக்கணித்தாலும், அடிமட்டத் தொண்டர்கள் உங்கள் மீது அன்பைப் பொழிவர். கௌரவத்துக்காகப் பிடிக்காத பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பீர்கள். ஆனால், அதன் மூலம் நல்ல பெயரும், புகழும், அதிக வருமானமும் வரும் என்பதால், நீங்கள் கவலையின்றி இருப்பீர்கள். உங்கள் துறை சம்பந்தமான பணிகள் சிறப்பாக நடந்தாலும், தடைகளும், தாமதங்களுக்கும் இல்லாமல் இருக்காது.

மாணவர்களுக்கு

வேலைக்கான நேர்காணலில் தாமத்த்திற்குப் பிறகே வெற்றி கிட்டும். அதன் காரணமாக நீண்ட, கடினமான பயணங்களை மேற்கொள்ள நேரும். காதல் விவகாரங்களில் பல திருப்பங்கள் ஏற்படலாம். கல்வியில் உயர்வும், போட்டிகளில் வெற்றிகளும் தடங்கல்களுக்குப் பிறகு வந்து குவியும். மாணவர்கள் அதிக அக்கறையுடன் படிக்கவேண்டும். கிரிக்கெட் ஆட்டங்களைக் கண்டால், கல்வியும் ஆட்டங்காணும். அவர்களின் கவனம் இன்ப நுகர்விலும், விளையாட்டுத் தனங்களிலும் ஈடுபட்டால் அறிவுத்திறனும், கல்வியில் தேர்ச்சியும் குறையும்.

கலைஞர்களுக்கு

நல்ல கதாபத்திரங்கள் கிடைக்கப் பெற்று, சிறப்பாக நடித்தாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது. பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும், அரசால் அதிக தொந்திரவுகள் இருக்கலாம். புதிய சொத்துக்கள் வாங்கும் முன் மூலப்பத்திரங்கள், வில்லங்க விவகாரங்களை அலசி ஆராய்ந்து பத்திரப் பதிவு செய்வது நல்லது. படப்பிடிப்பிற்காக வெளியூர், வெளிநாடு செல்கையில் தனி கவனத்துடன் செல்வது குழப்பங்களைக் குறைக்கும்.

பரிகாரங்கள்

காஞ்சிபுரம் அருகே அருள் பாலிக்கும் சித்திர குப்தரை வழிபடுவது சிறப்பு. சங்கடசதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பு. திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது நல்லது. கேதுவுக்கு கீழ்பெரும்பள்ளம் சென்று வழிபாடு செய்யுங்கள். சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசிப்பது சிறப்பு.

Like and Share Social Networks:

facebook abirami sekar twitter abirami sekar youtube abirami sekar abirami sekar linked in



Astrologer in chennai tanagar, best good astrologer in chennai
Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

 
ராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை
2018 பிப்ரவரி மாத இலக்கினப் பலன்கள்
2018 ஜனவரி மாத இலக்கினப் பலன்கள்
2018 ஆங்கில புத்தாண்டு இலக்கினப் பலன்கள்
டிசம்பர் மாத இலக்கினப் பலன்கள்
நவம்பர் மாத இலக்கினப் பலன்கள்
அக்டோபர் மாத இலக்கினப் பலன்கள்
செப்டம்பர் மாத இலக்கினப் பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017- ஆகஸ்ட் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள்
2017- ஜூலை மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஜூன் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
12 இலக்கினப் பொதுப் பலன்கள்
2017- மே மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஏப்ரல் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோ
2017- மார்ச் மாத ராசிபலன்கள் வீடியோ
2017-பிப்ரவரி மாத ராசிபலன்கள் வீடியோ
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோ
டிசம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
நவம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
அக்டோபர் மாத ராசிபலன்கள் வீடியோ
2016-2017 குருப்பெயர்ச்சி பலன்கள்
2016 வருட ராசிபலன்கள்
2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
லக்னப் பொதுப்பலன்கள்
ராசிகளின் பொதுப்பலன்கள்
நட்சத்திரப் பொதுப்பலன்கள்
எண்கணிதப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குருபெயர்ச்சிப் பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்


குழந்தைபாக்கியம் ஒரு பார்வை
செவ்வாய்தோஷம் ஒரு பார்வை
திருமணம் எப்போது? எப்படிப்பட்ட திருமணம்?
எல்லா கிழமைகளுக்குகான
நல்ல நேரங்கள்

ராசிகளின் தேவதைகள்
கிரகங்களின் தேவதைகள்
நட்சத்திரங்களின் தேவதைகள்
யோகங்களின் அதிதேவதைகள்
நட்சத்திர நாம எழுத்துக்கள்
ஒரைகள்
வாஸ்து
சந்திராஷ்டமம்
ஜோதிட கேள்வி பதில்கள்
பாவக தொடர்பான கேள்விகள்
ஜாதகத்தில் யோகங்கள்
ஜாதகத்தில் தோஷங்கள்
கரிநாட்கள் பற்றி
ஆயுள்
கல்வி
வேலை / தொழில்
திருமணம்
காதல்
குழந்தை
சொத்து
வெளிநாடு
நோய் / கடன்
வழக்கு
ருது ஜாதகம்
செவ்வாய் தோஷம் பற்றி
கோவில்கள்
ஆன்மிகம்
வழிபாடுகள்
பரிகாரங்கள்
ஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)
எப்படி இருந்த பழமொழி !!
மாவட்ட வாகனப் பதிவு எண்கள்
அவசரத் தொலைபேசி எண்கள்
இயற்கை மருத்துவம்
உங்கள் சிந்தனைக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa - Webdesign
Copyright © 2016-17 Abiramiastrology.com
http://www.hitwebcounter.com/
Counter For Wordpress