maduraiabiramisekar@gmail.com   +91 99948 11158 / +91 94436 74536
Abirami sekar, astrologer in chennai online, madurai astrologer abirami sekar, அபிராமி சேகர் ஜோதிடம்
12 ராசிகளின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
12 லக்னத்தின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope

2017-2018 இராகு – கேது பெயர்ச்சி கன்னி லக்னப் பலன்கள்

லக்னப்பலன்கள் பற்றிய என்னுரையை முதலில் படிக்கவும் - Click Here

( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)

புத்தி காரகனான புதனை அதிபதியாகக் கொண்ட கன்னிலக்ன அன்பர்களே! தங்கள் இராசிக்கு 17/18 - 08 - 2017 ஆவணி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 – 33 மணி அளவில் ஏற்படும் இராகு - கேது பெயரச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.

கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் விரய பாவத்திலும் கேது – ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திலுமாக சஞ்சாரம் செய்து சுமாரான பலன்களை வழங்கி வந்தனர். ஆவணி 1 முதல் கடக இராசியான இலாப பாவத்துக்கு இராகுவும், மகர இராசியான 5 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர். இந்தப் பெயர்ச்சி மூலமாக இராகுவால் ஆதாயங்களைப் பெறுவீர்கள். கேதுவால் சுமாரான பலன்களையே எதிர்பார்க்கலாம்.

இலாபத்தில் இருக்கும் இராகுவின் காலத்தில் செல்வம் சேரும். அழகிய மனைவி அமைவாள். குழந்தை பாக்கியம் ஏற்படும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். வாக்குவன்மை ஓங்கும். தனதான்ய விருத்தி உண்டாகும். உங்கள் வார்த்தைகள் பிறரால் வேதவாக்காக ஏற்றுக் கொள்ளப்படும். ஐஸ்வரியம் பெருகும். தொழில் முன்னேற்றங்கள் திருப்தி தரும். அரசியல் அதிகாரம், அரசு மரியாதை ஆகியவை கிடைக்கும். பெரும்புள்ளிகள் சிலர் அறிமுகமாகி அதனாலும் முன்னேற்றமடைவர். அந்தஸ்தும், கௌரவமும் கூடும். வேளா வேளைக்கு இனிப்புடன் கூடிய உயர்ரக இராஜ உணவைச் சுவைக்கும் யோகம் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். பொதுச்சேவைகளில் அவமானத்தைத் தரலாம். எனவே, புகழ் கௌரவத்துக்குப் பங்கம் வராமல் பார்த்து நடப்பது நலம் தரும். அதிகாரிகளிடம் பணிவுடன் நடப்பது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். உபரி வருமானங்கள் அதிகம் கிடைக்கும்.

புத்திர பாவமேறிய கேது நல்லது செய்வான் என நம்ப முடியுமா ? ஆயினும் ஞானகாரகனான கேது 5 இல் புத்தி தெளிவையும், செயல் திறனையும் அதிகமாக்குவதால் வரும் கஷ்டங்களையும், நஷ்டங்களையும் சமாளித்துக் கொள்வதுதானே அறிவுடமை. சிலருக்கு கர்ப்பை கோளாறுகள் அல்லது கருச்சிதைவு ஏற்படலாம். கீழ்வயிற்றுப் பகுதியில் அல்சர் போன்ற பிரச்சனைகள் எழலாம். புத்திரரால் தொல்லைகள், சோகம் ஆகியவை ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் மன சஞ்சலங்கள் ஏற்படலாம். அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகங்கள் ஏற்படும். பூர்வீகச் சொத்துக்களால் விரயங்கள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். பெரியோர்களின் முழு ஆதரவு இருக்கும். மகான்களின் தரிசனத்தால் ஞானவழியில் உங்கள் மனம் சென்று அமைதி எற்படும். சொத்துக்கள் மீதான வழக்கு விவகாரங்களால் செலவுகள் அதிகரிக்கும். லாட்டரி, ஸ்பெகுலேஷன் போன்ற துறைகளில் எதிர்பாராத அளவுக்கு திடீர் வெற்றிகள் கிடைக்கும். சிலருக்குப் பணப்பற்றாக்குறையால் காரியங்களில் தாமதங்களும், தடைகளும் ஏற்படும். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.

குடும்பம் மற்றும் பொருளாதாரம்

கணவன் மனைவி இடையே இருந்துவந்த மனஸ்தாபங்கள் மறையும். வித்தைகளில் தேர்ச்சியும். அறிவுத்திறனும் கூடும். தலைப்பதவி, வசதியான வீடு ஆகியவை அமையும். அஷ்டலட்சுமியின் அருளுக்குப் பாத்திர மாவீர்கள். உடன்பிறப்புக்களுக்கு ஏற்படும் அதிர்ஷ்டத்தால் நல்ல முன்னேற்றத்தைக் காண்பர். உயர் ரக கார் போன்ற வாகனங்கள் அமையும். பலவழிகளிலும் பணவரவு பெருகும். பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத் தான தருமங்கள் செய்வார். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. உறவினர் இல்ல விழாக்களில் கலந்து கொண்டு களிப்படைவீர்கள்.

தொழில் மற்றும் வியாபாரம்

வாடிக்கையாளர்களிடம் உண்மையாக நடந்துகொண்டால் வியாபாரம் பெருகும். நினைத்தபடி வாடகை வருமானங்கள் வசூலாவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாகனங்கள் வாங்கும் எண்ணம் ஈடேறும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை ஏற்படும். தொழிலில் பெரிய தொகைகளை முதலீடு செய்வதற்கு முன், அதனால் ஏற்படப்போகும் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து இறங்குவதால் இழப்புகளைத் தவிர்க்கலாம். கூட்டாளிகளின் ஒதுதுழைப்பு உங்களுக்கு சாதகமான பலன்களையே தரும். வெளிழூர், வெளிநாட்டுத் தொடர்புகள் உண்டாகி, இலாபம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள், உதவிகள் தாமதப்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

அரசுப் பணியாளர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகள் தடை, தாமதம் இன்றிக் கிடைக்கும். பணிகளில் ஏற்பட்ட நிலுவைத் தொகைகள் கைக்கு வந்து சேரும். பணி சம்பந்தமான வெளியூர்ப் பயணங்கள், வெளிநாட்டுப் பயணங்களால் குடும்பத்தைவிட்டுப் பிரிய நேர்ந்தாலும், அதில் கிடைக்கும் ஆதாயங்களால் மனம் மகிழும்.

பெண்களுக்கு

தெய்வப் பிரார்த்தனையால் பெண்களின் வேண்டுதல்கள் நிறைவேறும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். பணிபுரியும் பெண்கள் அதிகாரிகளின் ஆதரவால் சுலபமாகக் காரியங்களைச் சாதித்துக் கொள்வர். சிலருக்கு வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படலாம். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றிகளைக் குவிப்பீர்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத்தின் தேவைகள், குடும்பத்திலுள்ளோரின் விருப்பங்கள்யாவும் நிறைவேறும். அதிகாரிகளின் ஒத்துழைப்பால் அகம் மகிழும்.

அரசியல்வாதிகளுக்கு

வீண் வார்த்தைகளை ஒதுக்கி, மேடைப் பேச்சுகளில் சற்று கவனமுடன் செயல்பட்டால் மக்களிடையேயும், கட்சி நிர்வாகிகளிடமும் நல்ல பெயர் எடுத்து, மதிப்பும், மரியாதையும் கூடும். விவசாயிகளின் கஷ்டங்களில் பங்கு எடுத்துக் கொள்வது நல்லது. அது அவர்களிடையே செல்வாக்குகையும், மதிப்பு மரியாதையையும் அதிகரிக்கும். கட்சிப் பணிகளுக்காக அதிகம் செலவுகள் செய்ய நேர்ந்தாலும், பொருளாதார நிலை மேம்படும்.

மாணவர்களுக்கு

மாணவ, மாணவிகள் தங்கள் தேர்வுகளில் ஆசிரியரின் ஒத்துழைப்பால், சுலபமாக வெற்றிபெற முடியும். வாழ்க்கை முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். சிலருக்குக் கல்வியில் தடைகள் ஏற்படலாம். அதையும் தாண்டி முழு முயற்சியால் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும். உடல் ஆரோக்கிய பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். எனவே, உடல் ஆரோக்கியத்தில் மெத்தனமாக இராமல் அதிக அக்கறை கொள்ளவேண்டியது அவசியமாகிறது.

கலைஞர்களுக்கு

எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல வாய்ப்புகள் தேடிவரும். கலைத்துறையில் நல்ல பெயரும் புகழும் கிட்டும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரித்து உடல் நிலையில் சோர்வு உண்டாகும். கிசுகிசுக்களை தவிர்க்க உடன் பழகுபவர்களிடம் சற்று நிதானத்துடன் பேசிப் பழகுவது நல்லது. ஆடம்பர வாழ்க்கைக்கான மதிப்பு மிக்கப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய பட ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும்.

பரிகாரங்கள்

சங்கடசதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பு. திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது நல்லது. கேதுவுக்கு கீழ்பெரும்பள்ளம் சென்று வழிபாடு செய்யுங்கள். சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசிப்பது சிறப்பு.

Like and Share Social Networks:

facebook abirami sekar twitter abirami sekar youtube abirami sekar abirami sekar linked in



Astrologer in chennai tanagar, best good astrologer in chennai
Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

 
ராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை
2018 ஆகஸ்ட் மாத இலக்கினப் பலன்கள்
2018 ஜூலை மாத இலக்கினப் பலன்கள்
2018 ஜூன் மாத இலக்கினப் பலன்கள்
2018 விசேஷ செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்
2018 மே மாத இலக்கினப் பலன்கள்
2018 ஏப்ரல் மாத இலக்கினப் பலன்கள்
2018 மார்ச் மாத இலக்கினப் பலன்கள்
2018 பிப்ரவரி மாத இலக்கினப் பலன்கள்
2018 ஜனவரி மாத இலக்கினப் பலன்கள்
2018 ஆங்கில புத்தாண்டு இலக்கினப் பலன்கள்
டிசம்பர் மாத இலக்கினப் பலன்கள்
நவம்பர் மாத இலக்கினப் பலன்கள்
அக்டோபர் மாத இலக்கினப் பலன்கள்
செப்டம்பர் மாத இலக்கினப் பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017- ஆகஸ்ட் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள்
2017- ஜூலை மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஜூன் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
12 இலக்கினப் பொதுப் பலன்கள்
2017- மே மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஏப்ரல் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோ
2017- மார்ச் மாத ராசிபலன்கள் வீடியோ
2017-பிப்ரவரி மாத ராசிபலன்கள் வீடியோ
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோ
டிசம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
நவம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
அக்டோபர் மாத ராசிபலன்கள் வீடியோ
2016-2017 குருப்பெயர்ச்சி பலன்கள்
2016 வருட ராசிபலன்கள்
2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
லக்னப் பொதுப்பலன்கள்
ராசிகளின் பொதுப்பலன்கள்
நட்சத்திரப் பொதுப்பலன்கள்
எண்கணிதப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குருபெயர்ச்சிப் பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்


குழந்தைபாக்கியம் ஒரு பார்வை
செவ்வாய்தோஷம் ஒரு பார்வை
திருமணம் எப்போது? எப்படிப்பட்ட திருமணம்?
எல்லா கிழமைகளுக்குகான
நல்ல நேரங்கள்

ராசிகளின் தேவதைகள்
கிரகங்களின் தேவதைகள்
நட்சத்திரங்களின் தேவதைகள்
யோகங்களின் அதிதேவதைகள்
நட்சத்திர நாம எழுத்துக்கள்
ஒரைகள்
வாஸ்து
சந்திராஷ்டமம்
ஜோதிட கேள்வி பதில்கள்
பாவக தொடர்பான கேள்விகள்
ஜாதகத்தில் யோகங்கள்
ஜாதகத்தில் தோஷங்கள்
கரிநாட்கள் பற்றி
ஆயுள்
கல்வி
வேலை / தொழில்
திருமணம்
காதல்
குழந்தை
சொத்து
வெளிநாடு
நோய் / கடன்
வழக்கு
ருது ஜாதகம்
செவ்வாய் தோஷம் பற்றி
கோவில்கள்
ஆன்மிகம்
வழிபாடுகள்
பரிகாரங்கள்
ஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)
எப்படி இருந்த பழமொழி !!
மாவட்ட வாகனப் பதிவு எண்கள்
அவசரத் தொலைபேசி எண்கள்
இயற்கை மருத்துவம்
உங்கள் சிந்தனைக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa - Webdesign
Copyright © 2016-17 Abiramiastrology.com
http://www.hitwebcounter.com/
Counter For Wordpress