maduraiabiramisekar@gmail.com   +91 99948 11158 / +91 94436 74536
Abirami sekar, astrologer in chennai online, madurai astrologer abirami sekar, அபிராமி சேகர் ஜோதிடம்
12 ராசிகளின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
12 லக்னத்தின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope

2017-2018 இராகு – கேது பெயர்ச்சி சிம்ம லக்னப் பலன்கள்

லக்னப்பலன்கள் பற்றிய என்னுரையை முதலில் படிக்கவும் - Click Here

( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)

தந்தை காரகனான சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்மலக்ன அன்பர்களே! தங்கள் இராசிக்கு 17/18 - 08 - 2017 ஆவணி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 – 33 மணி அளவில் ஏற்படும் இராகு - கேது பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.

கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் ஜென்ம இராசியிலும் கேது – களத்திர ஸ்தானத்திலுமாக சஞ்சாரம் செய்து சுமாரான பலன்களை வழங்கி வந்தனர். ஆவணி 1 முதல் கடக இராசியான விரய பாவத்துக்கு இராகுவும், மகர இராசியான 6 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர். இந்தப் பெயர்ச்சியானது இராகுவால் விரயங்களையும் கேதுவால் நற்பலன்களையும் தர வல்லது.

இதன் காரணமாக விரய பாவத்தில் அமர்ந்த இராகுவால் தேடிய செல்வங்கள் மறையும். வரவுக்கு மிஞ்சிய செலவுகளும், அவை தகுதிக்கும், சக்திக்கு மீறிய செலவுகளாகவும் அமையும். வீட்டிலும், வெளியிலும் பலவித சமாளிக்க முடியாத இன்னல்கள் ஏற்படும். பணம் கொடுக்கல் – வாங்கலில் மிகுந்த எச்சரிக்கை தேவை. மனையாளுக்கு அரிஷ்டம் ஏற்படும். அதனால் சயன சுகம் கெடும். பூமி, மனை, சொத்து ஆகியவற்றுக்கு பங்கம் விளையும். மருத்துவ உலகிற்கே புதிராகும் வகையில் சிக்கலான புதிய நோய்கள் ஏதாவது உண்டாகும். உடன்பிறப்புக்கள் ஒத்துழைப்புத் தராமல் பகை உணர்ச்சியுடன் செயல்படுவர். சிலருக்குக் கால் இடறுதல், விழுதல் ஆகியவற்றால் காயம் அல்லது முறிவு ஏற்படலாம். தைரியமும் தெம்பும் குறையும். ஆரம்பித்த வேலைகள் விரும்பியபடி, குறிப்பிட்ட காலத்தில் முடிக்க முடியாதபடி தடங்கல்கள் வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகளால் சருக்கல்கள் ஏற்படலாம். பிறர் பணிகளில் தேவையற்ற தலையீடுகளை விலக்கி, ஒதுங்கியிருப்பதே நல்லது. உங்கள் வேலைகளில் மட்டும் கவனத்தைச் செலுத்துங்கள். அடிக்கடி பிரயாணங்களும், அலைச்சலும் அதிகம் ஏற்படும். குடும்பத்தில் நீண்ட நாட்களாகத் தடைப்பட்டிருந்த சுபகாரியம் நடைபெறும். போட்டி, பிரச்சனைகள் உதுவாகினும் வெற்றி உங்களுடையதாகவே இருக்கும்.

கேது 6 ஆம் இடத்தில் நன்மைகளே செய்கிறார். அதன் காரணமாக எல்லாவகையிலும் இலாபமும், சத்ரு ஜெயமும் உண்டாகும். தாய் மாமன் வகையில் அரிஷ்டம் உண்டாகும். வித்வத்துவமும், வாக்கு வன்மையும் ஏற்பட்டு அதன் மூலமாக நன்மைகள் ஏற்படும். அதிக சுகமும், புகழும் ஏற்படும். கீர்த்தி பெருகும். பிறர் பேச்சுகளை கவனமாகக் கேட்கவும், கேட்கவில்லை என்றால் தவறாகப் புரிந்து கொண்டு சங்கடப்பட நேரலாம். வயிற்றில் வலிகள் வந்து நீங்கும். இவர்களிடம் பெண்கள் மயங்கி, வசமானாலும் இவர்களுக்கு அவர்கள் மேல் தீவிர இச்சை ஏற்படாது. நெடுநாளையக் கடன்கள் தீரும். குடும்பத்தில் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் பெருகி மருத்துவச் செலவுகள் குறையும். பகைவர்கள் விலகி ஓடுவர். ஞானமுயற்சியும், நற்சிந்தனைகளில் நாட்டமும், பெரியோர்கள், சித்தர்கள் ஆசியும் கிடைக்கும். புதிய திட்டங்கள் செயல் வடிவம் பெறும். தொழிலில் வரும் இலாபத்தை நல்ல முறையில் தானதர்மம் என செலவளிப்பீர்கள். உபரியாக அடுத்து ஒரு புதிய தொழில் ஆரம்பிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். விரும்பிய இடத்திற்கு இடமாற்ற உத்திரவு கிடைக்கும். புதிய கட்டிடம், மனை வாகனம் ஆகியவையும் வாங்குவீர்கள். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.

குடும்பம் மற்றும் பொருளாதாரம்

தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். வீட்டில் சுபச் செலவுகள் ஏற்படும். சிலருக்குச் சுகம், தனலாபம், புதிய நண்பர்கள் மற்றும் சந்தோஷம் ஆகியவை ஏற்படும். துன்பத்தில் கைகொடுக்கும் துணைவி இருந்தாலும் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை குறைவதால் வாக்கு வாதங்கள் அதிகரிக்கும். தான தர்மமென கைப் பணம் கரையும்.

தொழில் மற்றும் வியாபாரம்

தங்கள் முதலீடுகளை வேறு புதிய திட்டங்களில் முதலீடு செய்ய முனைவீர்கள். வியாபாரத்தில் இருந்த வந்த மந்த நிலைகள் தொடரும். விவசாயிகள் விவசாயத்தில் நவீன முறைகளைக் கையாண்டு இலாபம் ஈட்டமுனைவர். தொழில் வளர்ச்சிக்காகச் செய்த முதலீடுகள் ஆதாயம் தரும். தொழில் துறையில் சிக்கல்களைத் தரலாம். அதிக உழைப்பும், பிரறால் ஏமாற்றமும் ஏற்படும். புதிய கூட்டாளிகள் சேருவர். போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்று குறையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு தடை, தாமதங்களின்றி உடனடியாக் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் சதிச் செயல்கள் தொல்லை தந்தாலும், உடன் பணிபுரிபவர்களின், உதவியாலும், ஒத்துழைப்பாலும் தப்பித்துக் கொள்வீர்கள். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தாமத்த்திற்குப் பிறகே நிறைவேறும், வேலப்பளு அதிகரித்து ஓய்வின்றி உழைக்க வேண்டிய நிலை உருவாகும்.

பெண்களுக்கு

பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளைத் தடைகளுக்குப் பிறகு எதிர்பார்க்கலாம். உயர் அதிகாரிகளின் கெடுபிடியால் மன உளைச்சல்கள் ஏற்படும். கடின உழைப்பின் காரணமாக ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். ஆயினும் மகிழ்ச்சிக்காகப் பணச் செலவுகளைப்பற்றி கவலை கொள்ளமாட்டீர்கள். கணவர் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்படுவார். அதுபோல் உங்களுக்கு வேண்டியதை மறுக்காமல் வாங்கித் தருவார்.

அரசியல்வாதிகளுக்கு

ஓரளவுக்கு உங்களுக்கு நல்ல காலம்தான். பட்டங்களும், பதவிகளும் தேடிவரும். அதற்கு நீங்கள் காலம் தவறிய சாப்பாடு, தூக்கமில்லாத இரவுகள் எனக் கடுமையான உழைப்பைக் கொடுக்க வேண்டியதிருக்கும். புகழையும், தொண்டர்களையும் நிலை நிறுத்திக் கொள்ள கை பணத்தைக் கரைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மேலும், மக்களின் ஆதரவுகளைப் பெற கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது.

மாணவர்களுக்கு

நேர்காணல்களில் ஏற்படும் தடை தாமதங்களையும் மீறி அவற்றில் வெற்றி பெறுவர். வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்புக்கள் அமையும். மிகுந்த அக்கறையுடன் படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண் பெற இயலும். கல்வியில் விருத்தி ஏற்பட்டு ஆசிரியரிடமும் நல்ல பெயர் எடுப்பீர்கள்.

கலைஞர்களுக்கு

புகழையும், மார்கொட்டையும் தக்கவைத்துக் கொள்ள கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை தவறாது பயன்படுத்திக் கொள்வது நல்லது. அதுவே புத்திசாலித்தனமும் கூட. பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும், ஆடம்பர வாழ்க்கையில் சற்றே குறைபாடுகள் ஏற்படும். வெளியூரில் அவுட் டோர் ஷூட்டிங்கில் ரசிகர்களின் தொல்லை எழலாம். சிலருக்கு வெளிநாட்டுப் படப்பிடிப்பு வாய்ப்புகள் கதவைத் தட்டும்.

பரிகாரங்கள்

சங்கடசதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பு. திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது நல்லது. கேதுவுக்கு கீழ்பெரும்பள்ளம் சென்று வழிபாடு செய்யுங்கள். சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசிப்பது சிறப்பு.

Like and Share Social Networks:

facebook abirami sekar twitter abirami sekar youtube abirami sekar abirami sekar linked in



Astrologer in chennai tanagar, best good astrologer in chennai
Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

 
ராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை
2018 அக்டோபர் மாத இலக்கினப் பலன்கள்
2018-2019 குருப்பெயர்ச்சி பலன்கள்
2018 செப்டம்பர் மாத இலக்கினப் பலன்கள்
2018 ஆகஸ்ட் மாத இலக்கினப் பலன்கள்
2018 ஜூலை மாத இலக்கினப் பலன்கள்
2018 ஜூன் மாத இலக்கினப் பலன்கள்
2018 விசேஷ செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்
2018 மே மாத இலக்கினப் பலன்கள்
2018 ஏப்ரல் மாத இலக்கினப் பலன்கள்
2018 மார்ச் மாத இலக்கினப் பலன்கள்
2018 பிப்ரவரி மாத இலக்கினப் பலன்கள்
2018 ஜனவரி மாத இலக்கினப் பலன்கள்
2018 ஆங்கில புத்தாண்டு இலக்கினப் பலன்கள்
டிசம்பர் மாத இலக்கினப் பலன்கள்
நவம்பர் மாத இலக்கினப் பலன்கள்
அக்டோபர் மாத இலக்கினப் பலன்கள்
செப்டம்பர் மாத இலக்கினப் பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017- ஆகஸ்ட் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள்
2017- ஜூலை மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஜூன் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
12 இலக்கினப் பொதுப் பலன்கள்
2017- மே மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஏப்ரல் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோ
2017- மார்ச் மாத ராசிபலன்கள் வீடியோ
2017-பிப்ரவரி மாத ராசிபலன்கள் வீடியோ
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோ
டிசம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
நவம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
அக்டோபர் மாத ராசிபலன்கள் வீடியோ
2016-2017 குருப்பெயர்ச்சி பலன்கள்
2016 வருட ராசிபலன்கள்
2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
லக்னப் பொதுப்பலன்கள்
ராசிகளின் பொதுப்பலன்கள்
நட்சத்திரப் பொதுப்பலன்கள்
எண்கணிதப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குருபெயர்ச்சிப் பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்


குழந்தைபாக்கியம் ஒரு பார்வை
செவ்வாய்தோஷம் ஒரு பார்வை
திருமணம் எப்போது? எப்படிப்பட்ட திருமணம்?
எல்லா கிழமைகளுக்குகான
நல்ல நேரங்கள்

ராசிகளின் தேவதைகள்
கிரகங்களின் தேவதைகள்
நட்சத்திரங்களின் தேவதைகள்
யோகங்களின் அதிதேவதைகள்
நட்சத்திர நாம எழுத்துக்கள்
ஒரைகள்
வாஸ்து
சந்திராஷ்டமம்
ஜோதிட கேள்வி பதில்கள்
பாவக தொடர்பான கேள்விகள்
ஜாதகத்தில் யோகங்கள்
ஜாதகத்தில் தோஷங்கள்
கரிநாட்கள் பற்றி
ஆயுள்
கல்வி
வேலை / தொழில்
திருமணம்
காதல்
குழந்தை
சொத்து
வெளிநாடு
நோய் / கடன்
வழக்கு
ருது ஜாதகம்
செவ்வாய் தோஷம் பற்றி
கோவில்கள்
ஆன்மிகம்
வழிபாடுகள்
பரிகாரங்கள்
ஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)
எப்படி இருந்த பழமொழி !!
மாவட்ட வாகனப் பதிவு எண்கள்
அவசரத் தொலைபேசி எண்கள்
இயற்கை மருத்துவம்
உங்கள் சிந்தனைக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa - Webdesign
Copyright © 2016-17 Abiramiastrology.com
http://www.hitwebcounter.com/
Counter For Wordpress