maduraiabiramisekar@gmail.com   +91 99948 11158 / +91 94436 74536
Abirami sekar, astrologer in chennai online, madurai astrologer abirami sekar, அபிராமி சேகர் ஜோதிடம்
12 ராசிகளின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
12 லக்னத்தின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope

2017-2018 இராகு – கேது பெயர்ச்சி கடக லக்னப் பலன்கள்

லக்னப்பலன்கள் பற்றிய என்னுரையை முதலில் படிக்கவும் - Click Here

(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

தாய்காரகனான சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடகலக்ன அன்பர்களே! தங்கள் இராசிக்கு 17/18 - 08 - 2017 ஆவணி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 – 33 மணி அளவில் ஏற்படும் இராகு - கேது பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.

கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் இராசிக்கு தன ஸ்தானத்திலும் கேது – அட்டம ஸ்தானத்திலுமாக சஞ்சாரம் செய்து சுமாரான பலன்களை வழங்கி வந்தனர். ஆவணி 1 முதல் கடக இராசியான ஜென்மத்துக்கு இராகுவும், மகர இராசியான 7 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர். இந்தப் பெயர்ச்சியானது அத்தனை அனுகூலமான பலன் தருவன அல்ல.

இதன் காரணமாக ஜென்மத்தில் அமர்ந்த இராகுவால் கஷ்டங்களும், நஷ்டங்களும் சகஜமாகிவிடும். சோம்பலும், சலிப்பும் ஏற்படும். தாய் தந்தையருக்கு ஏற்படும் நோய்களை அலட்சியப்படுத்தாமால், மிகவும் கண்ணும் கருத்துமாய் பார்க்க வேண்டும். சிலருக்கு வரும் நோய்க்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு புதுவிதமான நோய்கள் ஏற்படலாம். டாக்டர்களுக்கும் சவாலாக அமையலாம். ஏவல், பில்லி சூனியத்தால் குடும்பத்தில் நிம்மதி குறையலாம். ஆயினும், பேச்சில் தெளிவு ஏற்படும். வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகப் பேசாமல், இடம், பொருள் ஏவல் அறிந்து தன்மையாகப் பேசி உங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உறவுகளிடம் இதுவரை இருந்து வந்த மனக்கசப்புகள் தீர்ந்து, மனம் மகிழும். சுற்றமும், நட்பும் தேடிவந்து அன்பு பாராட்டுவார்கள். சிலருக்குக் கூடா நட்பு கேடாய் முடியும். தொழிலில் பெரிய அளவில் இலாபம் இராது என்பதால், இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க நினைக்காமல், கையில் உள்ளதை வைத்துக்கொண்டு முன்னேற முயல்வது அறவுடமையாகும். மற்றவர்களுக்காக மறந்தும் கூட ஜாமீன் கையெழுத்து இடவேண்டாம். வேலையாட்கள் மூலம் சிறுசிறு பிரச்சனைகள் எழலாம். அரசு வகையில் அனுகூலம் கிடைப்பது கடினமே. எனவே, விடாமுயற்சியைக் கடைப்பிடிப்பது நல்லது.

களத்திர பாவத்தில் அமர்ந்த கேதுவால் பல ஊர்களுக்கும் போய்வரும் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். மனையாளுக்கு கரு தங்காமல் போவதின் காரணமாக சிறிதளவு துன்பமும் சோகமும் ஏற்படலாம். அதன் காரணமாக இல்லாளோடு காலத்தை இனிமையாக்க் களிக்கமுடியாத நிலை உருவாகலாம். குணம் கெட்ட பெண்களின் தொடர்பு குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படத்தலாம். சிலருக்கு முறைமீறிய காதல் ஏற்பட்டு கட்டாயத் திருமணத்தில் கொண்டு விடலாம். நீர்நிலைகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலகட்டமாகும். சோம்பேறித்தனம் அதிகமாகி, எந்த செயலிலும் மனம் ஈடுபடாத நிலை ஏற்படலாம். கணவன் – மனைவி உறவில் விரிசல் வராமல் தடுக்க, கருத்து வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் இருத்தல் அவசியம் ஆகும். மனைவியுடன் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். பணி காரணமாகவும் சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிய நேரலாம். தொழில் மந்தம், தொழிலாளர்களின் ஒத்துழைப்புக் குறைவு, உத்யோகத்தில் சருக்கல்கள், சக ஊழியர்களின் ஆதரவு இன்மை ஆகியவை பிரச்சனைகளைத் தரலாம். நண்பர்களே பகைவர்கள் ஆவர். உங்களால் பயன் அடைந்தவர்களே தக்க சமயத்தில் உங்கள் காலைவாரிவிடுவர். முகம் தெரியாத நபர்களிடம், உங்கள் இரகசியங்களைக் கூறாமல் இருப்பது நல்லது, பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.

குடும்பம் மற்றும் பொருளாதாரம்

கணவன் மனைவியடையே அன்பும் பாசமும் பெருகும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் மறைந்து களிப்பு உண்டாகும். புத்தி சாதுர்யத்தால் வாழ்க்கையில் பொருளாதார நிலை சீராக இருக்கும். குழந்தைகள் வகையில் சுபச்செலவுகள் ஏற்படும். புதிய வீடு, வாகனம் வந்து சேரும். குடும்பத்தில் நிலவிவந்த சிறு பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும். மணவாழ்க்கையும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும்.

தொழில் மற்றும் வியாபாரம்

வியாபார நிலவரங்களுக்கு ஏற்ப புதிய நுணுக்கங்களைப் புகுத்தி வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். உதிரிப் பாகங்கள் அல்லது மென்பொருள் சாதனங்களின் விற்பனை சூடுபிடிக்கும். மதிப்புமிக்க மனிதர்களின் நட்பு கிடைக்கும். கூட்டுத் தொழிலில் எச்சரிக்கை தேவை. வங்கிக் கடன் முயற்சிகள் வெற்றி பெறும். தொழிலில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். தொழிலாளர்களை தட்டிக் கொடுத்து வேலைவாங்கினால் முன்னேற்றம் இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

அரசுப் பணி பரிபவர்களுக்கு அவ்வப்போது அவர்களின் பணிகளில் தடைகள், தாமதங்கள் ஏற்படும். பணி நிமித்தமான வெளியூர் அலைச்சல்கள் ஏற்படும். வேலையின்றி பல நாட்களாய் தவித்தவர்களுக்கு நல்ல அரசுப் பணிக்கான உத்தரவு வரும். உடன் பணிபுரிபவர்களின் போட்டி, பொறாமைகளில் சிக்கித் தவிக்க நேரலாம். உத்தியோக நிமித்தமாக வெளியூர் செல்ல நேரலாம். புதிய இடத்தில் மதிப்பு, மரியாதை கூடும். உடன் பணிபுரிபவர்கள் ஒதுங்கி நிற்காமல், மனம் உவந்து உதவிக்கு வருவர்.

பெண்களுக்கு

உங்கள் நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். மணமாலையும் மஞ்சளும் கூடி, மங்கையர் மண மேடையில் உலாவருவர். கணவன் உங்கள் மீது அன்பைப் பொழிவார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தங்களைப் பற்றி புறம் பேசுவார்கள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கும் யோகம் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். அரசுப் பணிபுரியம் பெண்களுக்குப் பெண் உயர் அதிகாரிகளால் நெருக்கடி ஏற்படலாம்.

அரசியல்வாதிகளுக்கு

உங்கள் காண்டில் இனி மழைதான். நீங்கள் நினைதத்தெல்லாம் நடக்கப்போகின்றது. பேரும் புகழும் கிடைக்கும். உயர்பதவிகள் தங்களைத் தேடிவரும். அடிக்கடி பயணங்களும், வெளியூரில் தங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். அதிகாரிகளின் ஒத்துழைப்புக்கள் தவறாது கிடைக்கும். தொண்டர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை செய்து கொடுத்து ஆதரிப்பது சிறப்பு ஆகும்.

மாணவர்களுக்கு

அறிவுத் திறன் பெருகும். சிலருக்கு, கல்வியில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். கிரிக்கெட், முகநூல், வலைத்தளங்களில் பொழுதைக் கழிக்காமல் படிப்பின் மீது கவனம் செலுத்தினால் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறலாம். உயர்கல்வி யோகம் உண்டாகும். பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் நல்ல பெயர் வாங்கிக் கொடுப்பீர்கள். தீய நண்பர்களின் சவகாசத்தை ஒதுக்கி கல்வியில் அக்கறை கொள்ளவேண்டும்.

கலைஞர்களுக்கு

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு இதிகமான வாய்ப்புகள் கைக்கு வந்து சேரும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும். அதில் வரும் நல்ல வாய்ப்புகளைத் தவறவிடாதீர்கள். பணமும் புகழும் உங்கள் கண்ணை மறைக்கும். அதனால் தவறான உறவுகள், லாகிரி வஸ்துக்களை உபயோகித்தல் போன்றவற்றால் உங்கள் மதிப்பை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

பரிகாரங்கள்

திங்கட்கிழமை தோறும் சண்டிகேஸ்வர்ரையும், தினமும் விக்கேஸ்வர்ரையும் வழிபடுவது நல்லது. திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது நல்லது. சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசிப்பது சிறப்பு.

Like and Share Social Networks:

facebook abirami sekar twitter abirami sekar youtube abirami sekar abirami sekar linked in



Astrologer in chennai tanagar, best good astrologer in chennai
Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

 
ராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை
2018 ஆகஸ்ட் மாத இலக்கினப் பலன்கள்
2018 ஜூலை மாத இலக்கினப் பலன்கள்
2018 ஜூன் மாத இலக்கினப் பலன்கள்
2018 விசேஷ செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்
2018 மே மாத இலக்கினப் பலன்கள்
2018 ஏப்ரல் மாத இலக்கினப் பலன்கள்
2018 மார்ச் மாத இலக்கினப் பலன்கள்
2018 பிப்ரவரி மாத இலக்கினப் பலன்கள்
2018 ஜனவரி மாத இலக்கினப் பலன்கள்
2018 ஆங்கில புத்தாண்டு இலக்கினப் பலன்கள்
டிசம்பர் மாத இலக்கினப் பலன்கள்
நவம்பர் மாத இலக்கினப் பலன்கள்
அக்டோபர் மாத இலக்கினப் பலன்கள்
செப்டம்பர் மாத இலக்கினப் பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017- ஆகஸ்ட் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள்
2017- ஜூலை மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஜூன் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
12 இலக்கினப் பொதுப் பலன்கள்
2017- மே மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஏப்ரல் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோ
2017- மார்ச் மாத ராசிபலன்கள் வீடியோ
2017-பிப்ரவரி மாத ராசிபலன்கள் வீடியோ
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோ
டிசம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
நவம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
அக்டோபர் மாத ராசிபலன்கள் வீடியோ
2016-2017 குருப்பெயர்ச்சி பலன்கள்
2016 வருட ராசிபலன்கள்
2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
லக்னப் பொதுப்பலன்கள்
ராசிகளின் பொதுப்பலன்கள்
நட்சத்திரப் பொதுப்பலன்கள்
எண்கணிதப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குருபெயர்ச்சிப் பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்


குழந்தைபாக்கியம் ஒரு பார்வை
செவ்வாய்தோஷம் ஒரு பார்வை
திருமணம் எப்போது? எப்படிப்பட்ட திருமணம்?
எல்லா கிழமைகளுக்குகான
நல்ல நேரங்கள்

ராசிகளின் தேவதைகள்
கிரகங்களின் தேவதைகள்
நட்சத்திரங்களின் தேவதைகள்
யோகங்களின் அதிதேவதைகள்
நட்சத்திர நாம எழுத்துக்கள்
ஒரைகள்
வாஸ்து
சந்திராஷ்டமம்
ஜோதிட கேள்வி பதில்கள்
பாவக தொடர்பான கேள்விகள்
ஜாதகத்தில் யோகங்கள்
ஜாதகத்தில் தோஷங்கள்
கரிநாட்கள் பற்றி
ஆயுள்
கல்வி
வேலை / தொழில்
திருமணம்
காதல்
குழந்தை
சொத்து
வெளிநாடு
நோய் / கடன்
வழக்கு
ருது ஜாதகம்
செவ்வாய் தோஷம் பற்றி
கோவில்கள்
ஆன்மிகம்
வழிபாடுகள்
பரிகாரங்கள்
ஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)
எப்படி இருந்த பழமொழி !!
மாவட்ட வாகனப் பதிவு எண்கள்
அவசரத் தொலைபேசி எண்கள்
இயற்கை மருத்துவம்
உங்கள் சிந்தனைக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa - Webdesign
Copyright © 2016-17 Abiramiastrology.com
http://www.hitwebcounter.com/
Counter For Wordpress