maduraiabiramisekar@gmail.com   +91 99948 11158 / +91 94436 74536
Abirami sekar, astrologer in chennai online, madurai astrologer abirami sekar, அபிராமி சேகர் ஜோதிடம்
12 ராசிகளின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
12 லக்னத்தின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope

2017-2018 இராகு – கேது பெயர்ச்சி மிதுன லக்னப் பலன்கள்

லக்னப்பலன்கள் பற்றிய என்னுரையை முதலில் படிக்கவும் - Click Here

(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)

கல்விக் காரகனான புதனை அதிபதியாகக் கொண்ட மிதுனலக்ன அன்பர்களே! தங்கள் இராசிக்கு 17/18 - 08 - 2017 ஆவணி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 – 33 மணி அளவில் ஏற்படும் இராகு - கேது பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.

கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் இராசிக்கு தைரிய ஸ்தானத்திலும் கேது – பாக்கிய ஸ்தானத்திலுமாக சஞ்சாரம் செய்து சமபலன்களை அள்ளி வழங்கி வந்தனர். ஆவணி 1 முதல் கடக இராசியான 2 ஆம் இடத்துக்கு இராகுவும், மகர இராசியான 8 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர். இந்தப் பெயர்ச்சியானது அத்தனை நலம் தருவதல்ல.

இதன் காரணமாக தனபாவத்தில் அமர்ந்த இராகு பிள்ளைகளால் அதிக செலவினங்களைத் தருவார். திடீர் விபத்துக்கள் ஏற்படலாம். மிகுந்த கவனம் தேவை. உணவில் ஏற்படும் நச்சுத்தன்மையால் பலவகையான, சீரணக் கோளாறுகளும் ஏற்படும். வயிற்று உபாதைகளும் ஏற்படலாம். எனவே, எச்சரிக்கையுடன் உணவருந்துவது அவசியம். சிலர் சேமித்து வைத்த பணம் அழியும். குடும்பத்தில் குழப்பம், தீயசூழ்ச்சிகள், ஒரு விதவைப் பெண்ணால் கலகம், ஏவல் செய்வினை போன்ற தொல்லைகள் நேரும். மனைவி குழந்தைகளுக்கு அரிஷ்டம் நேரலாம். நோய்கள் ஏற்படலாம். சிலருக்கு நிம்மதி, சுகத்தைக் கெடுத்தாலும் வனவாசமாய் இருந்த வாழ்க்கையை தனவாசம் மிக்கதாக மாற்றி விடுவார். இன்னல்களை நீக்கி இன்பம் தருவார். செல்வம் சேரும். அழகும் பொலிவும் கூடும், வாக்குவன்மை அதிகரிக்கும். புத்தி தெளிவும், அறிவுக் கூர்மையும் ஏற்படும். பெயரும் புகழும் ஓங்கும். வேலை இல்லாது இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு. பதவி, அந்தஸ்து உயரும்.

ஜென்மத்திற்கு எட்டில் கேது நின்றால் எதெற்கெடுத்தாலும, பயமும், தீராத சங்கடங்களும் ஏற்படும். உடலில் ஏதாவது பிணி வாட்டிக் கொண்டே இருக்கும். பொன் பொருட்கள் நஷ்டமாகும். கண்ணில் நோய் காணும். ஆசாரக் குறைவாக நடப்பார். சிந்தை தெளிவின்றி குழம்பிய நிலையில் இருப்பார். பாம்பு தீண்டும் பயமும் உண்டு. இதுசமயம் அனுகூலமாக நடந்து கொள்வாள். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.

குடும்பம் மற்றும் பொருளாதாரம்

சகோதர நன்மை, வெற்றி மற்றும் சந்தோஷமும் உண்டாகும். சிலருக்குப் பிரிவும், வீண் செலவுகளும் ஏற்படலாம். உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இராது. சாமர்த்திய சாலியாக விளங்குவார். தனவிருத்தியில் தடைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் அதிகத் தொல்லைகள் எழலாம்.கொடுத்த வாக்கும், நாணயம் தவறுதலும் ஏற்படும்.

தொழில் மற்றும் வியாபாரம்

எதிர்கால தொழில் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு விரிவாக்கத் திட்டங்களில் முதலீடுகள் செய்வது ஏற்றம் தரும். முதலீடுகளுக்கு வங்கிக் கடன்கள் சுலபமாகக் கிடைக்கும். ஆயினும் அதிகமாக்க் கடன் வாங்கவோ, கடன் கொடுக்கவோ கூடாது. அரசின் உதவிகள் கைகொடுக்கும். எதைச் செய்தாலும் சிரத்தையுடன் செய்தால் வெற்றி உண்டு. விவசாயப்பணிகள் சிறப்புற நடந்து ஆதாயம் பெருகும். வியாபாரத்துக்குத் தேவையான பொருட்களை மட்டும் வாங்கி இருப்பு வைத்துக் கொள்வது நல்லது. சிலருக்குக் கடன் கொடுத்தவர்களால் பிரச்சனைகள் எழலாம்

உத்தியோகஸ்தர்களுக்கு

அரசுப் பணியாற்றுபவர்களுக்கு வேலையில் உயர் அதிகாரிகளால் பிரச்சனைகள் எழலாம். சில நேரம் அவர்கள் கண்டிப்புடன் நடந்து கொள்வர். நண்பர்களிடம் அடிக்கடி கைமாத்து, கடன் வாங்குவீர்கள். அதுபோல் தேவையற்ற வகையில் அடிக்கடி விடுமுறை எடுப்பீர்கள். உங்கள் உழைப்புக்கு உரிய மரியாதை கிடைக்காது. ஓய்வின்றி உழைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

பெண்களுக்கு

யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும். தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். சிலருக்குத் தாங்கள் விரும்பாத இடத்திற்கு மாற்றம் ஏற்படலாம். குழந்தைகளின் தேர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியலில் செல்வாக்குக் குறையும். சிறிது காலம் பொறுமையுடன் காத்திருந்து செல்வாக்கை உயர்த்த வேண்டிய வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். தொண்டர்களின் மனம் அறிந்து அவர்களுக்கு ஆதரவு அளித்தால் உங்கள் புகழ் ஓங்கும். தேவையற்ற விவகாரங்களில் பணத்தைச் செலவிடாது இருந்தால் பண இழப்பைத் தவிர்க்கலாம்.

மாணவர்களுக்கு

மாணவர்கள் அதிக அக்கறையுடன் படிக்கவேண்டும். கிரிக்கெட் ஆட்டங்களைக் கண்டால், கல்வியும் ஆட்டங்காணும். அவர்களின் கவனம் இன்ப நுகர்விலும், விளையாட்டுத் தனங்களிலும் ஈடுபட்டால் அறிவுத்திறனும், கல்வியில் தேர்ச்சியும் குறையும். ஒரு சிலர் படிப்பை ஏதாவது காரணத்தால் விட்டுவிட நேரும்.

கலைஞர்களுக்கு

உங்களுக்குப் பின்னர் வந்த, உங்களைவிட அனுபவத்தில் குறைந்தவர்களெல்லாம் அதிகம் சம்பாதிப்பார்கள். அதைக் கண்டு மனம் வருந்த நேரும். அதனால் கடனகளும் வாங்க நேரும். சிலருக்கு அவர்கள் பேரில் வலம் வரும் கிசுகிசுக்களால் அவமானப்பட நேரும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும் போது மனதில் மகிழ்ச்சி நிலவும்.

பரிகாரங்கள்

செவ்வாய் கிழமை தோறும் இராகு காலத்தில் துர்கையை வழிபடுதல் சிறப்பு. திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது நல்லது. சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசித்து ஒன்பது நபர்களுக்கு உளுந்து தானம் செய்யலாம்.

Like and Share Social Networks:

facebook abirami sekar twitter abirami sekar youtube abirami sekar abirami sekar linked in



Astrologer in chennai tanagar, best good astrologer in chennai
Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

 
ராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை
2018 விசேஷ செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்
2018 மே மாத இலக்கினப் பலன்கள்
2018 ஏப்ரல் மாத இலக்கினப் பலன்கள்
2018 மார்ச் மாத இலக்கினப் பலன்கள்
2018 பிப்ரவரி மாத இலக்கினப் பலன்கள்
2018 ஜனவரி மாத இலக்கினப் பலன்கள்
2018 ஆங்கில புத்தாண்டு இலக்கினப் பலன்கள்
டிசம்பர் மாத இலக்கினப் பலன்கள்
நவம்பர் மாத இலக்கினப் பலன்கள்
அக்டோபர் மாத இலக்கினப் பலன்கள்
செப்டம்பர் மாத இலக்கினப் பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017- ஆகஸ்ட் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள்
2017- ஜூலை மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஜூன் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
12 இலக்கினப் பொதுப் பலன்கள்
2017- மே மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஏப்ரல் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோ
2017- மார்ச் மாத ராசிபலன்கள் வீடியோ
2017-பிப்ரவரி மாத ராசிபலன்கள் வீடியோ
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோ
டிசம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
நவம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
அக்டோபர் மாத ராசிபலன்கள் வீடியோ
2016-2017 குருப்பெயர்ச்சி பலன்கள்
2016 வருட ராசிபலன்கள்
2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
லக்னப் பொதுப்பலன்கள்
ராசிகளின் பொதுப்பலன்கள்
நட்சத்திரப் பொதுப்பலன்கள்
எண்கணிதப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குருபெயர்ச்சிப் பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்


குழந்தைபாக்கியம் ஒரு பார்வை
செவ்வாய்தோஷம் ஒரு பார்வை
திருமணம் எப்போது? எப்படிப்பட்ட திருமணம்?
எல்லா கிழமைகளுக்குகான
நல்ல நேரங்கள்

ராசிகளின் தேவதைகள்
கிரகங்களின் தேவதைகள்
நட்சத்திரங்களின் தேவதைகள்
யோகங்களின் அதிதேவதைகள்
நட்சத்திர நாம எழுத்துக்கள்
ஒரைகள்
வாஸ்து
சந்திராஷ்டமம்
ஜோதிட கேள்வி பதில்கள்
பாவக தொடர்பான கேள்விகள்
ஜாதகத்தில் யோகங்கள்
ஜாதகத்தில் தோஷங்கள்
கரிநாட்கள் பற்றி
ஆயுள்
கல்வி
வேலை / தொழில்
திருமணம்
காதல்
குழந்தை
சொத்து
வெளிநாடு
நோய் / கடன்
வழக்கு
ருது ஜாதகம்
செவ்வாய் தோஷம் பற்றி
கோவில்கள்
ஆன்மிகம்
வழிபாடுகள்
பரிகாரங்கள்
ஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)
எப்படி இருந்த பழமொழி !!
மாவட்ட வாகனப் பதிவு எண்கள்
அவசரத் தொலைபேசி எண்கள்
இயற்கை மருத்துவம்
உங்கள் சிந்தனைக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa - Webdesign
Copyright © 2016-17 Abiramiastrology.com
http://www.hitwebcounter.com/
Counter For Wordpress