maduraiabiramisekar@gmail.com   +91 99948 11158 / +91 94436 74536
Abirami sekar, astrologer in chennai online, madurai astrologer abirami sekar, அபிராமி சேகர் ஜோதிடம்
12 ராசிகளின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
12 லக்னத்தின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope

2017-2018 இராகு – கேது பெயர்ச்சி மீன லக்னப் பலன்கள்

லக்னப்பலன்கள் பற்றிய என்னுரையை முதலில் படிக்கவும் - Click Here

( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)

தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட மீனலக்ன அன்பர்களே! தங்கள் இராசிக்கு 17/18 - 08 - 2017 ஆவணி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 – 33 மணி அளவில் ஏற்படும் இராகு - கேது பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.

கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் ருண, ரோக, சத்ரு பாவத்திலும் கேது – விரய ஸ்தானத்திலுமாக சஞ்சாரம் செய்து சுமாரான பலன்களை வழங்கி வந்தனர். ஆவணி 1 முதல் கடக இராசியான புத்திர பாவத்துக்கு இராகுவும், மகர இராசியான 11 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர். இந்தப் பெயர்ச்சியின் காரணமாக இராகுவால் சுமாரான ஆதாயங்களைப் பெறுவீர்கள். கேதுவால் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

புத்திர பாவத்துக்கு மாறும் இராகுவால் காதல், குழந்தைகள் மூலமான சந்தோஷம் மற்றும் இலாபம் குறிகாட்டப்படுகிறது. சாதகமான, சந்தோஷமான காதல் நிலைகள் உருவாகும். பங்குச் சந்தை விவகாரங்களில் அதிக இலாபம் கிடைக்கும். கற்ற கல்வி மூலமாக ஏற்பட்ட திறனால் உருவாக்கப்பட்ட புதிய பொருள்களை விற்பனை செய்வதின் மூலமாக சம்பாதித்து செல்வம் சேர்ப்பர். சிலருக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபங்கள் கிட்டாது, வீண் விரயங்கள் ஏற்பட்டு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பொருளாதாரம் சீராக இருக்காது. சிலர் அன்றாடச் செலவுக்குக் கூட பணம் இல்லாமல் அவதிப்பட நேரும். சிலருக்கு புத்திர தோஷம் அதாவது புத்திரர்களால் தொல்லை ஏற்படும். அவர்கள் நீங்கள் சொன்ன பேச்சைக் காது கொடுத்துக் கேட்கமாட்டார்கள். கட்டுப்படவும் மாட்டார்கள். புத்தி கலக்கம் ஏற்படலாம். எல்லாக் காரியங்களையும், முறையாகச் செய்யா மல் , தலைகீழகாச் செய்வார்கள். தாய், தந்தையரின் உடல் ஆரோக்கியத்தை பேணிக் காப்பது உங்கள் கடமையாகும். சிலருக்கு விபத்து ஏற்பட்டு அங்ககீனம் ஆகலாம். எனவே வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கை தேவை. ஒழுக்கம் கெட்ட பெண்களிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது.

இலாப பாவத்துக்கு மாறும் கேதுவால் எல்லாவழிகளிலும் இலாபம் உண்டாகும். பயிர் விளைச்சல்கள் அதிகரிக்கும். சொன்ன சொல் தவறாதவராக விளங்குவார். எல்லாக் காரியங்களிலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். வீட்டில் குடும்பத்தார் அனைவருக்கும் தேவையான அனைத்துப் பொருட்களும் நிரம்பி வழியும். சுகபோக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் இருப்பதால் ஜாதகர் எப்போதும் மகாராஜன் போல் வாழ்ந்து, மகாராஜன் என்று பெயர் எடுப்பார். பல வகையான தொழில்களில் முதலீடு செய்து வருமானத்தைப் பெருக்கி வாழ்வாங்கு வாழ்வீர்கள். சிலர் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெறுக்குவீர்கள். நீதிபதி, வக்கீல் என நீதித்துறை பணிகளில் ஈடுபடும் யோகம் ஏற்படும். உத்தியோகம் உயரும். அரசாங்கத்தால் வரும் வருமானம் பெருகும். உறவுகளிடைய பகைமை நிலவும். ஆனால் அவர்களை உங்கள் சமயோஜித புத்தியால் வெற்றி கொள்வீர்கள். அவர்களை உங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்து விடுவீர்கள். மூத்த சகோதரத்திற்கு அரிஷ்டம் உண்டாகலாம். ஆனாலும் எல்லாவகையிலும் நன்மையே அடைவீர்கள். இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் சிறப்பாக நடக்கும். பிள்ளைகளால் பெற்றவர்களுக்கு பெருமை சேரும். தொழில் துறையில் நல்ல வளர்ச்சி ஏற்படும். மனைவி மக்களுடன் வாழ்க்கை சந்தோஷமாகக் கழியும். வீட்டில் மங்கள சுபகாரியங்கள் இனிதே நடந்து மகிழ்ச்சி நிலைத்திருக்கும். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.

குடும்பம் மற்றும் பொருளாதாரம்

பொருளாதார நிலைகள் சீராகி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய நுணுக்கங்களைக் கைக்கொண்டு வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். ஆரோக்கியம் மேம்படும். அதிக உழைப்பின் பேரில் முயற்சிகளில் ழுழு வெற்றி கிடைக்கும். இறை பக்தியும் தரும சிந்தனையும் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். சாமர்த்திய சாலியாகவும், சுயகாரியப் புலியாகவும் திகழ்வர். உறவுகள் கை கொடுக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் ஆதாயம் தரும்.

தொழில் மற்றும் வியாபாரம்

வணிக சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படலாம். மதிப்புமிக்க மனிதர்களின் நட்பு கிடைக்கும். பழைய கடன்களைத் தீர்க்கப் புதிய கடன்கள் வாங்க நேரும். புதிய முதலீடுகளால் ஆதாயம் அதிகரிக்கும். தொழில் விரிவாக்கத் திட்டங்களுக்கு அரசு உதவிகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார முதலீடுகளுக்கு வங்கிக் கடன்கள் சுலபமாகக் கிடைக்கும். விவசாயப்பணிகள் சிறப்புற நடந்து ஆதாயம் பெருகும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

விருப்பம் இல்லாத ஊருக்கு வரும் திடீர் இடமாற்ற உத்திரவுகளால் நிதி நிலைமை தள்ளாட்டம் காணலாம். குடும்பம், பிள்ளை குட்டிகளை விட்டு பிரியும் சூழ்நிலை எழலாம். மேலதிகாரிகள் நல்ல முறையில் உங்களுக்கு ஆதரவு அளித்தாலும், அவர்கள் உதாசீனப்படுத்துவது போல் ஓர் உணர்வு ஏற்படும். உடன் பணிபுரிபவர்கள் தாங்கள் சொல்லும் ஆலோசனைகளை, அவர்கள் சொல்வது போல் அதிகாரிகளிடம் கூறி பாராட்டைப் பெறுவார்கள். எனவே, நண்பரகளாய் இருந்தாலும் ஓரளவுக்கு விலக்கியே வைத்திருப்பது நல்லது.

பெண்களுக்கு

வீட்டிற்கு ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வர். பணிபுரியும் பெண்கள் கடமை உணர்வுடன் செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். கணவன் மனைவிக்குள், கருத்து வேறுபாடுகள் மறைந்து நல்லுறவு அதிகரிக்கும். பணிபுரியம் பெண்களுக்குப் பெண் உயர் அதிகாரிகளால் நெருக்கடி ஏற்படலாம். வாகனங்களில் செல்கையில் கவனமுடன் செல்லுதல் அவசியம். உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணி உயர்வுக்கான பரிந்துரைகள் செய்வதில் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவர். குழந்தைகளின் அபரிமிதமான வளர்ச்சி கண்டு மனம் மகிழ்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு

மக்கள் சேவைகளை திறம்படச் செய்யும் உங்களின் மதிப்பும், மரியாதையும் கூடும். கௌரவம் மிக்க பதவிகள் தேடி வரும் என்றாலும், போட்டி, பொறாமைகளால் தடைகள், தாமதத்திற்குப் பிறகே கிடைக்கும். பொருளாதர நிலை சிறப்பாக இருக்குமாதலால் தொண்டர்களின் தேவைகளுக்கு தாராளமாகச் செலவு செய்தால் அவர்களின் ஆதரவு நிலைத்து நிற்கும். முடக்கப்பட்ட கட்சி சின்னங்கள் திரும்பப் பெரும் நடவடிக்கைகளை எடுக்கலாம். அரசியலில் நிலைத்து நிற்க கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது நல்லது.

மாணவர்களுக்கு

படிப்பில் தேர்ச்சி ஏற்பட்டு, அறிவுச் சுடரொளி வீசும். மாணவ, மாணவிகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலர் தேவையற்ற காதல் விவகாரங்களில் ஈடுபடுவதால் சிக்கல்கள் ஏற்படலாம். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும். அக்கறையுடன் படித்து அதிக மதிப்பெண்கள் பெற அயராது பாடுபடவேண்டும். வேடிக்கை விளையாட்டுக்கள், வெட்டிப் பொழுதுபோக்குகளைத் தவிர்க்கவும்.

கலைஞர்களுக்கு

உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான அரிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். அதன் காரணமாக நல்ல நல்ல வாயப்புகள் தேடி வரக்கூடிய யோகம் உண்டாகும். தங்கள் சிறப்பான நடிப்புக்கான அரசாங்க, தனியார விருதுகள் கிடைத்து உங்கள் புகழ் எட்டுத் திக்கும் பரவும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்களின் போது போக்குவரத்து இடையூறுகள் ஏற்படலாம். புதிய விலை உயர்ந்த அதி நவீன மகிழ் ஊர்திகளை வாங்கும் யோகம் ஏற்படும். ஆயினும், வாகனப் பயணங்களின் போது எச்சரிக்கையுடன் வாகனத்தை ஓட்டுதல் அவசியம்.

பரிகாரங்கள்

தேய்பிறை அஷ்டமி தோறும் காலபைரவரை வணங்கி, வழிபாடு செய்வது நல்லது. சங்கடசதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பு. திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது நல்லது. கேதுவுக்கு கீழ்பெரும்பள்ளம் சென்று வழிபாடு செய்யுங்கள். சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசிப்பது சிறப்பு.

Like and Share Social Networks:

facebook abirami sekar twitter abirami sekar youtube abirami sekar abirami sekar linked in



Astrologer in chennai tanagar, best good astrologer in chennai
Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

 
ராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை
2018 அக்டோபர் மாத இலக்கினப் பலன்கள்
2018-2019 குருப்பெயர்ச்சி பலன்கள்
2018 செப்டம்பர் மாத இலக்கினப் பலன்கள்
2018 ஆகஸ்ட் மாத இலக்கினப் பலன்கள்
2018 ஜூலை மாத இலக்கினப் பலன்கள்
2018 ஜூன் மாத இலக்கினப் பலன்கள்
2018 விசேஷ செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்
2018 மே மாத இலக்கினப் பலன்கள்
2018 ஏப்ரல் மாத இலக்கினப் பலன்கள்
2018 மார்ச் மாத இலக்கினப் பலன்கள்
2018 பிப்ரவரி மாத இலக்கினப் பலன்கள்
2018 ஜனவரி மாத இலக்கினப் பலன்கள்
2018 ஆங்கில புத்தாண்டு இலக்கினப் பலன்கள்
டிசம்பர் மாத இலக்கினப் பலன்கள்
நவம்பர் மாத இலக்கினப் பலன்கள்
அக்டோபர் மாத இலக்கினப் பலன்கள்
செப்டம்பர் மாத இலக்கினப் பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017- ஆகஸ்ட் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள்
2017- ஜூலை மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஜூன் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
12 இலக்கினப் பொதுப் பலன்கள்
2017- மே மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஏப்ரல் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோ
2017- மார்ச் மாத ராசிபலன்கள் வீடியோ
2017-பிப்ரவரி மாத ராசிபலன்கள் வீடியோ
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோ
டிசம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
நவம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
அக்டோபர் மாத ராசிபலன்கள் வீடியோ
2016-2017 குருப்பெயர்ச்சி பலன்கள்
2016 வருட ராசிபலன்கள்
2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
லக்னப் பொதுப்பலன்கள்
ராசிகளின் பொதுப்பலன்கள்
நட்சத்திரப் பொதுப்பலன்கள்
எண்கணிதப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குருபெயர்ச்சிப் பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்


குழந்தைபாக்கியம் ஒரு பார்வை
செவ்வாய்தோஷம் ஒரு பார்வை
திருமணம் எப்போது? எப்படிப்பட்ட திருமணம்?
எல்லா கிழமைகளுக்குகான
நல்ல நேரங்கள்

ராசிகளின் தேவதைகள்
கிரகங்களின் தேவதைகள்
நட்சத்திரங்களின் தேவதைகள்
யோகங்களின் அதிதேவதைகள்
நட்சத்திர நாம எழுத்துக்கள்
ஒரைகள்
வாஸ்து
சந்திராஷ்டமம்
ஜோதிட கேள்வி பதில்கள்
பாவக தொடர்பான கேள்விகள்
ஜாதகத்தில் யோகங்கள்
ஜாதகத்தில் தோஷங்கள்
கரிநாட்கள் பற்றி
ஆயுள்
கல்வி
வேலை / தொழில்
திருமணம்
காதல்
குழந்தை
சொத்து
வெளிநாடு
நோய் / கடன்
வழக்கு
ருது ஜாதகம்
செவ்வாய் தோஷம் பற்றி
கோவில்கள்
ஆன்மிகம்
வழிபாடுகள்
பரிகாரங்கள்
ஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)
எப்படி இருந்த பழமொழி !!
மாவட்ட வாகனப் பதிவு எண்கள்
அவசரத் தொலைபேசி எண்கள்
இயற்கை மருத்துவம்
உங்கள் சிந்தனைக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa - Webdesign
Copyright © 2016-17 Abiramiastrology.com
http://www.hitwebcounter.com/
Counter For Wordpress