maduraiabiramisekar@gmail.com   +91 99948 11158 / +91 94436 74536
Abirami sekar, astrologer in chennai online, madurai astrologer abirami sekar, அபிராமி சேகர் ஜோதிடம்
12 ராசிகளின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
12 லக்னத்தின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope

2017-2018 இராகு – கேது பெயர்ச்சி கும்ப லக்னப் பலன்கள்

லக்னப்பலன்கள் பற்றிய என்னுரையை முதலில் படிக்கவும் - Click Here

( அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)

ஆயுள் காரகனான சனியை அதிபதியாகக் கொண்ட கும்பலக்ன அன்பர்களே! தங்கள் இராசிக்கு 17/18 - 08 - 2017 ஆவணி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 – 33 மணி அளவில் ஏற்படும் இராகு - கேது பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.

கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் களத்திர பாவத்திலும் கேது – ஜென்ம இராசியிலுமாக சஞ்சாரம் செய்து சுமாரான பலன்களை வழங்கி வந்தனர். ஆவணி 1 முதல் கடக இராசியான ருண, ரோக, சத்ரு பாவத்துக்கு இராகுவும், மகர இராசியான விரயபாவமான 12 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர். இந்தப் பெயர்ச்சி மூலமாக இராகுவால் ஆதாயங்களைப் பெறுவீர்கள். கேதுவால் சுமாரான பலன்களையே எதிர்பார்க்கலாம்.

சத்ரு பாவத்துக்கு மாறும் இராகுவால் சேவைப் பணிகள் மூலமான ஆதாயங்கள், உதவியாளர்கள் மற்றும் உடன் இருப்பவர்களின் மூலமான ஆதாயங்களும் குறிகாட்டப்படுகின்றன. உடல் ஆரோக்கியத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் பேணிக் காக்கவும். அதற்கு, எந்தவொரு விஷயத்துக்கும் டென்ஷன் ஆகாமல், அதிக்க் கடினமான பணிகளைச் செய்யாமல் இருப்பது நல்லது. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்றில்லாமல் அனுபவபூர்வமாக உணர்ந்து செயல்படுவதே சிறப்பாகும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் விரைவில் நடக்கும். புது வாகனம் வாங்கும் யோகம் மற்றும் புத்திர பாக்கியம் ஏற்படும். நல்ல யோகமான காலமாதலால் அரசாங்க அனுகூலங்கள், எதிரிகளை வெல்லுதல், அதிகரிக்கும் சொத்துக்கள் என எல்லாம் நன்மையாகவே நடக்கும். சிலருக்கு நோய்கள் விலகும். வீட்டில் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்புக் கூடும். எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்கும் போது கவனம் தேவை. தந்தையுடன் இதுவரை இருந்த மனக் கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். மாணவர்களுக்கு இதுவரை இருந்த மந்த நிலை நீங்கி படிப்பில் முன்னேறுவார்கள். குலதெய்வம் ஆசி கிட்டும். சுற்றுலாவின் மூலம் பல புண்ணியத்தலங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். அரசியலில் அனுகூலம் ஏற்படும்.

விரய பாவம் வரும் கேதுவால் ஆன்மீக விஷயங்களிலும், தியானம் ஆகியவற்றிலும் ஆர்வம் ஏற்படும். இரகசிய திட்டங்கள், தியாக உணர்வு, தன்னம்பிக்கை இன்மை, சந்தேக குணம், புரட்சிகரமான எண்ணங்கள் ஆகியவை ஜாதகரின் மனத்தில் கிளர்த்து எழும். இந்தக் காலம் ஒருவர் தனது குற்றங்குறைகளை உணர்ந்து, தனது அனுபவத்தையே பாடமாகக் கொண்டு வருங்கால முன்னேற்றத்துக்குப் படியாக அமைத்துக் கொள்ளும் காலம் ஆகும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள், தடுமாற்றங்கள் அனைத்தும் உங்கள் சமயோசித புத்தியால் சரியாகிவிடும். சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். ஏமாற்றங்கள், மனமகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை, கணவன் மனைவிக்கிடையேயான ஊடல்கள் ஆகியவை தவிர்க்கமுடியாத நிகழ்வுகளாகும். தெய்வ தரிசனங்களுக்காக அடிக்கடி புண்ணிய ஸ்தலங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். அதன் காரணமாக சிறுசிறு வீண்விரயங்கள் எதிர்கொள்ள நேரும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடனகளின்றி நிம்மதியாக வாழலாம். பணம் கொடுக்கல் வாங்கலிலும், கொடுத்த கடன்களைத் திரும்பப் பெறுவதிலும் தடைகள் உண்டாகும். கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அரசுப் பணியாளர்கள் சற்று நெருக்கடிகளைச் சந்தித்தாலும் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.

குடும்பம் மற்றும் பொருளாதாரம்

வீட்டில் மங்கள சுப காரியங்கள் நடக்கும். உயர்ந்த மனிதர்களின் நட்பு ஏற்படும் வாய்ப்பு ஏற்படும். செல்வம் சேரும். திருமணம் ஆகாதவர்களுக்கு அழகிய மனைவி அமைவாள். ஆனல், தாமதப்படலாம். மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். மனைவியின் பக்திமார்க்கம் உங்களின் மத உணர்வைத் தூண்டும். . கீர்த்தி பெருகும். புனித காரியங்களில் ஈடுபாடுவார். சிலருக்கு குடும்பச் சொத்து கிடைக்கும்.

தொழில் மற்றும் வியாபாரம்

சிலருக்கு எதிர்பாராத விதமாக வேலை கிடைக்கும். தங்கள் மீது நல்லெண்ணம் கொண்ட நண்பர்களின் உதவியால், கூட்டாளிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் சுமுகமாகத் தீரும். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்களால் நன்மை ஏற்படும். தொழில் மற்றும் வியாபார முதலீடுகளுக்கு வங்கிக் கடன்கள் சுலபமாகக் கிடைக்கும். அரசின் உதவிகள் கைகொடுக்கும். எதைச் செய்தாலும் சிரத்தையுடன் செய்தால் வெற்றி உண்டு. விவசாயப்பணிகள் சிறப்புற நடந்து ஆதாயம் பெருகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

வெகுநாட்களாக முயற்சித்து வந்த இடமாற்ற விருப்பம் இனிதே நிறைவேறும். பணி நிமித்தமாகப் பல பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அதன் காரணமாக குடும்பத்தைப் பிரிய வேண்டிய சூழலும் உருவாகும். உதவி என்று போனால் உடன் பணிபுரிபவர்கள் ஓடோடி வந்து உதவி புரிவர். உயர் அதிகாரிகளின் ஆதரவு பணியில் ஒரு தெம்பைத் தரும். புதியதாக வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க, அலுவலகக் கடன் உடனடியாகக் கிடைக்கும்.

பெண்களுக்கு

பணிபுரியும் பெண்கள் தற்போது பார்க்கின்ற வேலையை விட்டுவிட்டு வேறு நல்ல வேலை தேடுவார்கள், உயர் அதிகாரிகளின் சகாயத்தால் பணிகளில் இருந்து வந்த கெடுபிடிகள் குறையும். குடும்பத்தில் பெண்கள் அடங்கிப்போவது நல்லது. கணவன்மார்களின் உதவியால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொன்நகை, புதிய ஆடை சேர்க்கை உண்டு. சிலருக்கு வீண்பழி, பகை ஏற்படலாம். பணிபுரியும் பெண்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியலில் நிரந்தர நட்போ பகையோ கிடையாது. இன்றைய தோழன், நாளைய பகைவன் ஆவான். கட்சி மேலிடம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டிய சூழ்நிலை எழும். உங்கள் மேல் பொறாமை குணம் உள்ளவர்களால், உங்கள் முன்னேற்றம் பாதிக்கப்படும். தொண்டர்களின் ஆதரவு சமயத்தில் கை கொடுக்கும். பதவியைக் கைகொள்ள பணத்தையும், உழைப்பையும் அதிகமாகவே செலவழிக்க வேண்டிய நிலை உருவாகும்.

மாணவர்களுக்கு

உயர்கல்வி பயிலும் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும். வேடிக்கை விளையாட்டுக்கள், வெட்டிப் பொழுது போக்குகளைத் தவிர்க்கவும். அப்போதுதான் அறிவுத்திறனும், கல்வியில் தேர்ச்சியும் ஏற்படும். மிகுந்த அக்கறையுடன் பாடங்களைப் படித்தால் மட்டுமே தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற இயலும். அதிக மதிப்பெண்கள் பெற அயராது பாடுபடவேண்டும். தேர்வுகள் முடியும் வரை கிரிக்கெட் பார்ப்பதை ஒத்திப் போடுவது நல்லது.

கலைஞர்களுக்கு

புதிய ஒப்பந்தங்களால் மன மகிழ்ச்சி ஏற்பட்டாலும், பொருளாதார நிலை சீராக இருக்காது. கூட இருப்பவர்களே குழி பறிப்பர். முக்கியமான பணிகளை பிறரை நம்பி கொடுக்காமல் நீங்களே செய்வது நல்லது. வெளியூர், வெளிநாட்டுப் படப்பிடிப்பு காரணமாக குடும்பத்தைவிட்டு நீண்ட நாட்கள் பிரிய வேண்டிய நிலை ஏற்படும். பயணங்கள் இனிதாகும். அரசு கௌரவங்கள், பட்டம் பதவிகள் சிலரைத் தேடிவரும். உனட் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது, முன்னேற்த்துக்கு வழி வகுக்கும்.

பரிகாரங்கள்

பௌர்ணமியன்று அம்பாளுக்கு சிகப்பு வஸ்திரம் சாத்தி, நெய் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு. சங்கடசதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பு. திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது நல்லது. கேதுவுக்கு கீழ்பெரும்பள்ளம் சென்று வழிபாடு செய்யுங்கள். சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசிப்பது சிறப்பு.

Like and Share Social Networks:

facebook abirami sekar twitter abirami sekar youtube abirami sekar abirami sekar linked in



Astrologer in chennai tanagar, best good astrologer in chennai
Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

 
ராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை
2018 பிப்ரவரி மாத இலக்கினப் பலன்கள்
2018 ஜனவரி மாத இலக்கினப் பலன்கள்
2018 ஆங்கில புத்தாண்டு இலக்கினப் பலன்கள்
டிசம்பர் மாத இலக்கினப் பலன்கள்
நவம்பர் மாத இலக்கினப் பலன்கள்
அக்டோபர் மாத இலக்கினப் பலன்கள்
செப்டம்பர் மாத இலக்கினப் பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017- ஆகஸ்ட் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள்
2017- ஜூலை மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஜூன் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
12 இலக்கினப் பொதுப் பலன்கள்
2017- மே மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஏப்ரல் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோ
2017- மார்ச் மாத ராசிபலன்கள் வீடியோ
2017-பிப்ரவரி மாத ராசிபலன்கள் வீடியோ
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோ
டிசம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
நவம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
அக்டோபர் மாத ராசிபலன்கள் வீடியோ
2016-2017 குருப்பெயர்ச்சி பலன்கள்
2016 வருட ராசிபலன்கள்
2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
லக்னப் பொதுப்பலன்கள்
ராசிகளின் பொதுப்பலன்கள்
நட்சத்திரப் பொதுப்பலன்கள்
எண்கணிதப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குருபெயர்ச்சிப் பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்


குழந்தைபாக்கியம் ஒரு பார்வை
செவ்வாய்தோஷம் ஒரு பார்வை
திருமணம் எப்போது? எப்படிப்பட்ட திருமணம்?
எல்லா கிழமைகளுக்குகான
நல்ல நேரங்கள்

ராசிகளின் தேவதைகள்
கிரகங்களின் தேவதைகள்
நட்சத்திரங்களின் தேவதைகள்
யோகங்களின் அதிதேவதைகள்
நட்சத்திர நாம எழுத்துக்கள்
ஒரைகள்
வாஸ்து
சந்திராஷ்டமம்
ஜோதிட கேள்வி பதில்கள்
பாவக தொடர்பான கேள்விகள்
ஜாதகத்தில் யோகங்கள்
ஜாதகத்தில் தோஷங்கள்
கரிநாட்கள் பற்றி
ஆயுள்
கல்வி
வேலை / தொழில்
திருமணம்
காதல்
குழந்தை
சொத்து
வெளிநாடு
நோய் / கடன்
வழக்கு
ருது ஜாதகம்
செவ்வாய் தோஷம் பற்றி
கோவில்கள்
ஆன்மிகம்
வழிபாடுகள்
பரிகாரங்கள்
ஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)
எப்படி இருந்த பழமொழி !!
மாவட்ட வாகனப் பதிவு எண்கள்
அவசரத் தொலைபேசி எண்கள்
இயற்கை மருத்துவம்
உங்கள் சிந்தனைக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa - Webdesign
Copyright © 2016-17 Abiramiastrology.com
http://www.hitwebcounter.com/
Counter For Wordpress