maduraiabiramisekar@gmail.com   +91 99948 11158 / +91 94436 74536
Abirami sekar, astrologer in chennai online, madurai astrologer abirami sekar, அபிராமி சேகர் ஜோதிடம்
12 ராசிகளின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
12 லக்னத்தின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope

2017-2018 இராகு – கேது பெயர்ச்சி மேஷ லக்னப் பலன்கள்

லக்னப்பலன்கள் பற்றிய என்னுரையை முதலில் படிக்கவும் - Click Here

(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1,2,3,4 பாதங்கள்)

தைரிய காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷலக்ன அன்பர்களே! தங்கள் இராசிக்கு 17/18 - 08 - 2017 ஆவணி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 – 33 மணி அளவில் ஏற்படும் இராகு - கேது பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.

கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் இராசிக்கு புத்திர ஸ்தானத்திலும் கேது – இலாப ஸ்தானத்திலுமாக சஞ்சாரம் செய்து சம்பலன்களை அள்ளி வழங்கி வந்தனர். தொழிலில் முன்னேற்றமும், அதிக இலாபங்களையும் வழங்கினாலும், தடங்கல்களையும், தொழிலில் போட்டி பொறாமைகளையும் ஏற்படுத்தி வந்தனர். பூர்வீக சொத்துக்களில் பிரச்சனைகளையும், பொது வாழ்வில் அவமானங்களையும் கொடுத்துவந்தார். தற்சமயம் ஆவணி 1 முதல் கடக இராசியான 4 ஆம் இடத்துக்கு இராகுவும், மகர இராசியான 10 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர்.

இவை சாதகாமான அமைப்பு அல்ல. இதன் காரணமாக சுக பாவ இராகுவால் மனைவி வழியிலும், சகோதர வழியிலும் வெட்டிச் செலவுகளும், தாயாரின் உடல் நிலை பாதிப்பு, வாகன விபத்துகள் அல்லது வாகனத்தில் ஏற்படும் பழுதுகளைச் சீர் செய்ய வேண்டிய வகையில் பராமரிப்புச் செலவுகள், கால்நடைகளுக்குச் சேதாரங்கள் ஆகியவைகளும் ஏற்படலாம். வீண் அலைச்சல்களைத் தவிர்க்கவும். சொத்து பரிவர்த்தனைகளின் போது எச்சரிக்கையுடன் இருக்கவும். உயர்கல்வி பயில்பவர்கள் வேண்டாத விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் எச்சரிக்கையாக இருந்தால் தேறலாம். மருத்துவரின் கவனக் குறைவால் வேண்டாத பிரச்சனைகள் எழலாம். நண்பர்களும் பகைவராவர். யாத்திரையின் போது எச்சரிக்கை தேவை. இத்தகைய பிரச்சனைகளால் தூக்கம் குறையும் கவலைகள் அதிகரிக்கும். வீடு, நிலம், வாகனம் போன்றவற்றை வாங்கும் முன் தரகர்களை நம்பாமல் அவற்றின் தஸ்தாவேஜூகளை அலசி, ஆராய்ந்து முடித்துக் கொள்வது நல்லது.

கர்ம பாவக் கேதுவால் நற்பலன்கள் உண்டாகும். பணவரவும், இலாபமும் அதிகம் இருந்த போதும், சூதாட்டம் போன்ற முறையற்ற வழிகளில் ஈடுபடுவதனால் அவற்றை இழக்க நேரும். இதுவரை இழுபறியாய் இருந்த காரியங்கள் வெற்றி அடையும். புதிய முன்னேற்றத்துக்கான பாதைகள் வகுக்கப்படும். தொழிலில் இலாபமும், உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் உத்தியோக உயர்வும் ஏற்படும். சிலர் போலித் துறவியாகும் சூழ்நிலை உருவாகலாம். இராகுவை விட கேது இவ்விடத்தில் அசுப பலனைக் குறைவாகவே தருவார் என்பதே ஓர் ஆறுதல். வேள்வி, யாகாதி காரியங்கள், புண்ணயத்தல யாத்திரைகள் ஆகியவை ஏற்படும். சிலருக்கு மடாதிபதிகள், மதத் தலைமை ஏற்று நடத்துதல் போன்ற முக்கிய பொறுப்புகள் தேடி வரும். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்

குடும்பம் மற்றும் பொருளாதாரம்

கணவன் மனைவிடையே ஒற்றுமை பலப்படும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு திருமணம் கைகூடும். பொன், பொருள் சேரும். அசையும், அசையாச் சொத்துக்களால் வீண்செலவுகள் ஏற்படும். தேவைக்கேற்ற பணவரவுகள் தேடி வரும். உற்றார் உறவினர்களின் ஆதரவு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடை, தாமதங்களுக்குப் பிறகு வெற்றி ஏற்படும். கொடுக்கல் – வாங்கலில் சரளமானநிலை ஏற்பட்டாலும், பெரிய தொகைகளைக் கையாளும் போது எச்சரிக்கை தேவை.

தொழில் மற்றும் வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குச் சிறப்பான காலம். இலாபம் அதிகரிக்கும். போட்டி, பொறாமைகாரணமாக, எதிராளிகள் தரும் இன்னல்களை எப்பாடுபட்டாவது சமாளித்து விடுவீர்கள். வங்கிக் கடன்கள் எளிதாகக் கிடைத்து தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் நிலை ஏற்படும். அலைச்சல்களைத் தவிர்க்க பயணங்களைத் தள்ளிப் போடுவது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு

அரசுப் பணியாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட இலக்கினை, உதவியாளர்களின் உதவியோடு சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் நற்பெயர் எடுப்பர். திறமைக்கு ஏற்ப பாரட்டுக்களும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு, குடும்பத்தினரைப் பிரிய நேரலாம்.

பெண்களுக்கு

அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புப்புடன் செயல்பட்டாலும், சிறுசிறு பிரச்சனைகள் எழலாம். புதிய முயற்சிகள் மிகுந்த பிரயாசைக்குப் பிறகே கூடிவரும். மணமாகாதவர்களுக்கு அவர்கள் எண்ணப்படி நல்ல இடத்தில் திருமண ஏற்பாடுகள் நடக்கும். நினைத்தபடி நினைத்த காரியங்கள் நடக்கும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு காரணமாக போதுமான அளவு ஓய்வு எடுக்க முடியாத நிலை ஏற்படலாம்.

அரசியல்வாதிகளுக்கு

பொருளாதார நிலை சீராக இருக்கும். இதுநாள்வரை இருந்துவந்த சிக்கல்கள், குழப்பங்கள், பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி சுமுக நிலை உருவாகும். தொண்டர்களின் ஆதரவு பெருகினாலும், கட்சிப் பணிக்கான செலவுகள் எகிறும். பொதுமக்களின் ஆதரவு குறையும். பொதுமக்களுக்கு அரசு மானியங்கள், உதவிகள் தடையின்றிக் கிடைக்கும்.

மாணவர்களுக்கு

கல்வியில் இடர்பாடுகளைக் களைய மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்ளாவிடில் பின்னர் வருத்தப்பட நேரும். எனவே, பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற தகவல் தொழில் நுட்ப அமைப்புகளில் நேரத்தை வீண்டிக்காது இருப்பது நல்லது. நல்ல நண்பர்களின் நெருக்கம் மகிழ்ச்சி அளிக்கும். கல்விச் சுற்றுலாக்களின் மூலமாக அறிவு விருத்திக்கான சூழல் மாணவர்களுக்கு ஏற்படும். விளையாட்டு வீரர்களுக்கு போட்டிகளில் வெற்றிக்கான பதக்கங்களும், பட்டயங்களும் கிடைத்துப் பள்ளிக்குப் பெருமை சேர்ப்பர்.

கலைஞர்களுக்கு

புதிய தொடர்புகள் மகிழ்ச்சி அளிக்கும். நல்லமுறையில் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கை கொடுக்கும். தேவைக்கு அதிகமான வருமானம் வருவதால் மகிழ்ச்சி பொங்கும். ஆயினும், வருமானவரித்துறையின் கெடுபிடிகள் தொல்லை தரலாம். முதன்மை நிலைக்கான போட்டிகளால் கலைத்துறை சூடு பிடிக்கும். புகழ் மிக்கவர்களின் பெயர் கெடும் வகையில் கிசு கிசுகள் மீடியாக்களில் வைரலாகும்.

பரிகாரங்கள்

சண்டிகேஸ்வர்ரை திங்கள் தோறும் வழிபடுங்கள். எந்த காரியத்தையும் ஆரம்பிக்கும் முன்னும், விக்ன விநாயகரை வணங்குதல் நலம். சங்கடஹரசதுர்த்தி அன்று விரதம் இருப்பது நல்லது. ஒருமுறை கீழப் பெரும்பள்ளம் சென்று வழிபடுதல் சிறப்பு.

Like and Share Social Networks:

facebook abirami sekar twitter abirami sekar youtube abirami sekar abirami sekar linked inAstrologer in chennai tanagar, best good astrologer in chennai
Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

 
ராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை
2020-2023 சனிப்பெயர்ச்சியால் மிகவும் ராஜயோகம் அடையும் இலக்கணங்கள்
2020 - 2023 சனிப்பெயர்ச்சியால் குழந்தை பாக்கியம் அடையும் இலக்கணங்கள்
2020 - 2023 சனிப்பெயர்ச்சியால் வேலையில் நன்மை அடையும் இலக்கணங்கள்
2020 - 2023 சனிப்பெயர்ச்சி இலக்கினப் பலன்கள்
2019 அக்டோபர் மாத இலக்கினப் பலன்கள்
2019 செப்டம்பர் மாத இலக்கினப் பலன்கள்
2019 ஜூலை மாத இலக்கினப் பலன்கள்
2019 ஜூன் மாத இலக்கினப் பலன்கள்
2019 மே மாத இலக்கினப் பலன்கள்
2019 ஏப்ரல் மாத இலக்கினப் பலன்கள்
2019 மார்ச் மாத இலக்கினப் பலன்கள்
2019-2020 ராகு - கேது பெயர்ச்சி இலக்கினப் பலன்கள்
2019 பிப்ரவரி மாத இலக்கினப் பலன்கள்
2019 ஜனவரி மாத இலக்கினப் பலன்கள்
2019 ஆங்கில புத்தாண்டு இலக்கினப் பலன்கள்
2018 டிசம்பர் மாத இலக்கினப் பலன்கள்
2018 நவம்பர் மாத இலக்கினப் பலன்கள்
2018 அக்டோபர் மாத இலக்கினப் பலன்கள்
2018-2019 குருப்பெயர்ச்சி பலன்கள்
2018 விசேஷ செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள்
12 இலக்கினப் பொதுப் பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2016-2017 குருப்பெயர்ச்சி பலன்கள்
2016 வருட ராசிபலன்கள்
2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
லக்னப் பொதுப்பலன்கள்
ராசிகளின் பொதுப்பலன்கள்
நட்சத்திரப் பொதுப்பலன்கள்
எண்கணிதப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குருபெயர்ச்சிப் பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்


குழந்தைபாக்கியம் ஒரு பார்வை
செவ்வாய்தோஷம் ஒரு பார்வை
திருமணம் எப்போது? எப்படிப்பட்ட திருமணம்?
எல்லா கிழமைகளுக்குகான
நல்ல நேரங்கள்

ராசிகளின் தேவதைகள்
கிரகங்களின் தேவதைகள்
நட்சத்திரங்களின் தேவதைகள்
யோகங்களின் அதிதேவதைகள்
நட்சத்திர நாம எழுத்துக்கள்
ஒரைகள்
வாஸ்து
சந்திராஷ்டமம்
ஜோதிட கேள்வி பதில்கள்
பாவக தொடர்பான கேள்விகள்
ஜாதகத்தில் யோகங்கள்
ஜாதகத்தில் தோஷங்கள்
கரிநாட்கள் பற்றி
ஆயுள்
கல்வி
வேலை / தொழில்
திருமணம்
காதல்
குழந்தை
சொத்து
வெளிநாடு
நோய் / கடன்
வழக்கு
ருது ஜாதகம்
செவ்வாய் தோஷம் பற்றி
கோவில்கள்
ஆன்மிகம்
வழிபாடுகள்
பரிகாரங்கள்
ஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)
எப்படி இருந்த பழமொழி !!
மாவட்ட வாகனப் பதிவு எண்கள்
அவசரத் தொலைபேசி எண்கள்
இயற்கை மருத்துவம்
உங்கள் சிந்தனைக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa - Webdesign
Copyright © 2016-17 Abiramiastrology.com
http://www.hitwebcounter.com/
Counter For Wordpress