maduraiabiramisekar@gmail.com   +91 99948 11158 / +91 94436 74536
Abirami sekar, astrologer in chennai online, madurai astrologer abirami sekar, அபிராமி சேகர் ஜோதிடம்
12 ராசிகளின் பொதுப் பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
12 லக்னத்தின் பொதுப் பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope

2017 - 2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள்

வலைதள நேயர்களுக்கு அன்பு வணக்கங்கள்

நிழல் கிரகங்களான இராகு – கேது உருவான கதை

புராண காலத்தில் பாற்கடலைக் கடைந்து இறவாவரம் தரும் இன்னமுதை அருந்த தேவரும், அசுரரும் போட்டி போட்டு ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டார்கள். மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை கயிறாகக் கொண்டு கடைய முதலில் ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதை அருந்திய சிவபெருமான் நீலகண்டரானார். இறுதியாக அமிர்தமும் வந்தது. அமிர்தத்தைப் பெற தேவரும், அசுரருக்கும் இடையே சமாதானப்படுத்த மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார். இரு வரிசையாக நின்றவர்களிடையே அமுதத்தை பகிர்ந்து அளித்த போது தேவர்கள் வரிசையில், தேவர் போல் உருமாறிய காசிப முனிவரின் பேரனும், விப்ரசித்து, கிம்ஹிகை தம்பதியரின் மகனுமான ஸ்வர்பானு சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே அமர்ந்திருந்தான். அவனுக்கு ஓர் அகப்பை அமுது அளித்த மோகினியிடம் சூரிய, சந்திரர்கள் அவனைக் காட்டிகொடுத்தனர்.

கோபமுற்ற கோபாலன் கையிலிருந்த அகப்பையால் சுவர்பானுவின் தலையைத் தாக்கி துண்டித்தார். தலை வேறு, உடல் வேறான சுவர்பானு அமிர்தத்தை உண்டதால் உயிர் பிரியவில்லை. பிரம்மனிடம் வேண்டிய சுவர்பானுவின் வெட்டப்பட்ட தலையுடன் பாம்பின் உடலையும், பாம்பின் தலையுடன் உடலை இணைத்து முறையே இராகு – கேது எனப் பெயர் கொடுத்து ஒருவருக்கொருவர் இணை பிரியாது, எதிர், எதிராக நின்று நவகிரக அந்தஸ்தையும் கொடுத்து அருள்பாலித்தார். நிழல் கிரகங்களான இருவருக்கும் நிரந்தர இராசியின்றி, அவர்கள் நிற்கும் இராசியின் பலத்தையே அடைய அவர்களுக்கு வழிகாட்டினார். இராகு மகர இராசியில் அமர்ந்து அதர்வண வேதத்தைக் கற்றுணர்ந்து ஞானகாரகன் என்றும், கடகத்தில் அமர்ந்து ரிக், யஜூர், சாம வேத்த்தைக் கற்றுணர்ந்து மோட்ச காரகன் என்றும் அழைக்கப்பட்டனர். பாவ புண்ணியத்துக்குத் தக்கவாறு பலன்களை அளிக்கவல்ல இவர்கள் அம்மாவாசை, பௌர்ணமி காலங்களில் முறையே சூரிய சந்திரர்களைப் பீடித்து கிரகணமாக்கி பழி தீர்த்துக் கொள்கிறார்கள். இதுவே இராகு கேது உருவான கதையாகும். இராசி மண்டலத்தின் வடதுருவப் புள்ளி இராகு என்றும், தென்துருவப் புள்ளி கேது எனவும் வழங்கப்படுகின்றன. மேற்கத்திய ஜோதிடத்தில் இராகு "டிராகன்ஸ் ஹெட்" என்றும், கேது "டிராகன்ஸ் டெயில்" என்றும் குறிப்பிடப்படுகின்றன.

ஜோதிடத்தில் கேதுவைக் காட்டிலும், இராகுவுக்கே முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்படுகிறது. கரும் பாம்பு என அழைக்கப்படும், இராகு போக காரகன் ஆவார். செம்பாம்பு எனும் கேது மோட்ச காரகன் ஆவர். இவர்கள் எந்த பாவத்தில் அமர்கிறார்களோ அந்த பாவத்தை பாதிப்பு அடையச் செய்வர். அதுபோல் இவற்றுடன் இணையும் கிரகங்களின் காரகத்துவங்களிலும் பாதிப்பு ஏற்படும்.

மனிதத் தலையும் பாம்பு உடலையும் கொண்ட இராகு கருமை நிறத்தவர், நீண்டு நெடியவர். குரூரமான குணம் உடையவர். அற்புதமான செயல்களை உருவாக்கிக் காட்டக் கூடிய ஆற்றல் மிக்கவர் இராகு ஆவார். திருநாகேஸ்வரத்தில் இராகு தனது இரு தேவியர்களான நாகவல்லி, நாக்கன்னி சமேதராய், உள்பிரகாரத்தில் கோவில் கொண்டு அனைவருக்கும் அருள் பாலித்து வருகிறார். இத் திருத்தலமே இராகு பரிகாரத்திற்கு முதலிடமாகவும், சிறந்த இடமாகவும் கருதப்படுகிறது.

நவக்கிரகங்களில் நிழல் கிரகங்களான இராகு – கேதுவுக்கு என தனியாக வீடுகள் ஒதுக்கப்படவில்லை. எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த வீட்டு அதிபதியின் குணத்தை கிரகித்துக் கொள்வர். இவர்கள் மற்ற கிரகங்களைப் போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே இராசி மண்டலத்தை வலம் வரக் கூடியவர்கள்.

மத, தெய்வ வழிபாடுகள் அனைத்தும் நம்பிக்கையின் பாற்பட்டவை. இந்த நம்பிக்கைகள்தான் மக்களின் வாழ்வை நெறிப்படுத்தவும், வளப்படுத்தவும் உதவுவன ஆகும். மனிதனின் துன்பத்தையும், துயரங்களையும், கஷ்டங்களையும் இந்த நன்நம்பிக்கைகள்தான் களைகின்றன என்றால் மிகையாகாது. மக்களின் மனதில் மகிழ்ச்சியையும், ஆறுதலையும் விளைவிக்கின்ற வழிபாட்டு முறைகள் புதுப் புது வகைகளில் தோன்றக் காரணம் ஆகின்றன. அந்த எதிர்பார்ப்பின் விளைவே இராகுகால பூஜை ஆகும். செவ்வாய்க் கிழமை அன்று துர்க்கைக்குச் செய்யப்படும் இராகு கால பூஜை உடனடி பலன் கிடைப்பதாக முன்னோர்கள் கருதுகின்றனர். இராகு காலத்தில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தமிழ் நாட்டில் எவரும் செய்வதில்லை. ஆனால், பிற மாநில மக்கள் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இராகு காலத்தில் திருமணம் கூட செய்கிறார்கள் என்பது கூடுதல் தகவல் ஆகும்.

இந்த ஆண்டு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17/18 - 08 - 2017 ஆவணி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 – 33 மணி அளவில்– சாய கிரகமான இராகு சிம்ம இராசியில் இருந்து கடகத்துக்கும், கேது கும்ப இராசியில் இருந்து மகரத்துக்குமாக பெயர்ச்சி ஆகிறார்கள்.

கிரக சஞ்சார நிலைகள்

இராகு காயத்ரி

"ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராஹூ ப்ரச்சோதயாத்"

கேது காயத்ரி

""ஓம் அச்வத்ஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது; பிரச்சோதயாத் "

இராகுவால் சுப பலன்கள் அடையும் இராசிகள்

ரிஷபம், கும்பம், கன்னி

எல்லா இராசிகளுக்குமான இராகுவுக்கான பொதுவான பரிகாரங்கள்

செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் சிவன் கோவில் பிரார்த்தனை நல்லது. திருநாகேஸ்வரம், சங்கரன் கோவில், திருக்காளத்தி ஆகிய திருத்தல வழிபாடுகள் சிறப்பு. புற்று உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் எலுமிச்சை விளக்கேற்றி, பால், முட்டை வைத்தல் நல்லது. இராகு காயத்ரி பாராயணம் செய்க. சித்தர்களின் ஜீவ சமாதிகள் மற்றும் முன்னோர்களுடைய சமாதிகளுக்கு சென்று வழிபாடு நடத்துவது சிறப்பானதாகும். மேற்கூறிய பரிகாரங்களை இராகுவுக்குச் செய்வது நலம் பயக்கும்.

எல்லா இராசிகளுக்குமான கேதுவுக்கான பொதுவான பரிகாரங்கள்.-

ஞாயிறு தோறும் அருகம் புல் மாலை சாத்தி கணபதி வழிபாடு. சனி தோறும் பெருமாள் கோவிலில் துளசி மாலை சாத்தி பிரார்த்தனை செய்தல். அதே நாள் – ஹனுமனுக்கு துளசிமாலை சாத்தி வழிபடுதல் ஒருமுறையேனும் கீழப்பெரும்பள்ளம், காஞ்சி, கொடுமுடி, கும்பகோணம் ஆகிய ஊர்களில் உள்ள பிரம்மாவை வழிபட்டாலும், கேது பகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் அதிகரிக்கும்.

1. மேஷம் இலக்கினப்பலன்கள்
2. ரிஷபம் இலக்கினப்பலன்கள்
3. மிதுனம் இலக்கினப்பலன்கள்
4. கடகம் இலக்கினப்பலன்கள்
5. சிம்மம் இலக்கினப்பலன்கள்
6. கன்னி இலக்கினப்பலன்கள்
7. துலாம் இலக்கினப்பலன்கள்
8. விருச்சிகம் இலக்கினப்பலன்கள்
9. தனுசு இலக்கினப்பலன்கள்
10. மகரம் இலக்கினப்பலன்கள்
11. கும்பம் இலக்கினப்பலன்கள்
12. மீனம் இலக்கினப்பலன்கள்

Like and Share Social Networks:

facebook abirami sekar twitter abirami sekar youtube abirami sekar abirami sekar linked in



Astrologer in chennai tanagar, best good astrologer in chennai
Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

 
ராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை
2018 ஆங்கில புத்தாண்டு இலக்கினப் பலன்கள்
டிசம்பர் மாத இலக்கினப் பலன்கள்
நவம்பர் மாத இலக்கினப் பலன்கள்
அக்டோபர் மாத இலக்கினப் பலன்கள்
செப்டம்பர் மாத இலக்கினப் பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017- ஆகஸ்ட் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள்
2017- ஜூலை மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஜூன் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
12 இலக்கினப் பொதுப் பலன்கள்
2017- மே மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஏப்ரல் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோ
2017- மார்ச் மாத ராசிபலன்கள் வீடியோ
2017-பிப்ரவரி மாத ராசிபலன்கள் வீடியோ
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோ
டிசம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
நவம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
அக்டோபர் மாத ராசிபலன்கள் வீடியோ
2016-2017 குருப்பெயர்ச்சி பலன்கள்
2016 வருட ராசிபலன்கள்
2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
லக்னப் பொதுப்பலன்கள்
ராசிகளின் பொதுப்பலன்கள்
நட்சத்திரப் பொதுப்பலன்கள்
எண்கணிதப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குருபெயர்ச்சிப் பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்


எல்லா கிழமைகளுக்குகான
நல்ல நேரங்கள்

ராசிகளின் தேவதைகள்
கிரகங்களின் தேவதைகள்
நட்சத்திரங்களின் தேவதைகள்
யோகங்களின் அதிதேவதைகள்
நட்சத்திர நாம எழுத்துக்கள்
ஒரைகள்
வாஸ்து
சந்திராஷ்டமம்
ஜோதிட கேள்வி பதில்கள்
பாவக தொடர்பான கேள்விகள்
ஜாதகத்தில் யோகங்கள்
ஜாதகத்தில் தோஷங்கள்
கரிநாட்கள் பற்றி
ஆயுள்
கல்வி
வேலை / தொழில்
திருமணம்
காதல்
குழந்தை
சொத்து
வெளிநாடு
நோய் / கடன்
வழக்கு
ருது ஜாதகம்
செவ்வாய் தோஷம் பற்றி
கோவில்கள்
ஆன்மிகம்
வழிபாடுகள்
பரிகாரங்கள்
ஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)
எப்படி இருந்த பழமொழி !!
மாவட்ட வாகனப் பதிவு எண்கள்
அவசரத் தொலைபேசி எண்கள்
இயற்கை மருத்துவம்
உங்கள் சிந்தனைக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa - Webdesign
Copyright © 2016-17 Abiramiastrology.com
http://www.hitwebcounter.com/
Counter For Wordpress